நோயாளிகளுக்கு உணவை வழங்குவதில் சிக்கல்!

மருந்து தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக சில வைத்தியசாலைகளில் நோயாளர்கள் மற்றும் சுகாதார உதவி பணியாளர்களுக்கு உணவு வழங்குவது பெரிய சிக்கலாக மாறியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பணத்தை வழங்கவில்லை

நோயாளிகளுக்கு உணவை வழங்குவதில் சிக்கல்-அகில இலங்கை தாதியர் சங்கம் | Problem In Providing Food To Patients

உணவுப் பொருட்களை விநியோகிப்போருக்கு சரியான முறையில் பணத்தை வழங்கவில்லை என்பதால், வைத்தியசாலைகளுக்கு உணவு, பழங்கள், சூப், கஞ்சி போன்றவற்றை சமைப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள், முட்டை, இறைச்சி, மீன் என்பன விநியோகிக்கப்படுவது குறைந்து வருவதாக சங்கத்தின் தலைவர் எஸ்.பி.மெதவத்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் சிக்கல்

நோயாளிகளுக்கு உணவை வழங்குவதில் சிக்கல்-அகில இலங்கை தாதியர் சங்கம் | Problem In Providing Food To Patients

இலங்கையின் மிகப் பெரிய வைத்தியசாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் இந்த சிக்கல் காணப்படுகிறது. நோய்களில் இருந்து குணமாக நோயாளிகளுக்கு மருந்தை போன்று போசாக்கான உணவும் வழங்க வேண்டும்.

இந்த நிலைமை தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்தி, விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை பணத்தை செலுத்தி துரிதமாக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மெதவத்த மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Story

கட்டுநாயக்க வந்த இசைஞானி இளையராஜா

Next Story

தீர்மானங்கள் மட்டும் போதுமா!