‘நேர்மறையான முன்னேற்றம்’

 அமெரிக்க-இரான் பேச்சுவார்த்தையின் முதல் சுற்று குறித்து மத்தியஸ்தர்கள்!

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே கடந்த வாரம் எட்டப்பட்ட ஆரம்பகட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமையன்று இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது. தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முழுவதும் தொடரும். தாக்குதல்களை மீண்டும் தொடங்குவது குறித்த டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தலை, இரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் நிராகரித்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதி உடன்பாட்டை எட்டும் நோக்கில், அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை “நேர்மறையான முன்னேற்றத்துடன்” முடிவடைந்துள்ளதாக மத்தியஸ்தர்களான கத்தாரும் பாகிஸ்தானும் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே கடந்த வாரம் எட்டப்பட்ட ஆரம்பகட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமையன்று இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது. தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முழுவதும் தொடரும்.

No Deal: U.S.-Iran peace talks in Islamabad fall through : NPR

திங்கள்கிழமை அதிகாலை வெளியிட்ட கூட்டு அறிக்கை ஒன்றில், “60 நாட்களுக்குள் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான ஒரு செயல்திட்டத்துக்கு” ஒரு “உயர்மட்டக் குழு” ஒப்புக்கொண்டுள்ளதாக கத்தாரும் பாகிஸ்தானும் தெரிவித்துள்ளன.

லெபனான் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் ‘குறிப்பிடத்தக்க முன்னேற்றம்’ ஏற்பட்டுள்ளது என்று இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.

கடந்த வாரம் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 60 நாட்களுக்குள் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான உறுதிமொழி, லெபனான் உட்பட “அனைத்து முனைகளிலும்” மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் ஹோர்மூ நீரிணையை மீண்டும் திறப்பது ஆகியவை அடங்கும்.

ஹோர்மூஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை நோக்கமாகக் கொண்டு, “சம்பவங்கள் மற்றும் தவறான புரிதல்களைத் தவிர்ப்பதற்காக ஒரு தகவல் தொடர்பு வழித்தடம்” உருவாக்கப்பட்டுள்ளதாக மத்தியஸ்தர்களின் கூட்டு அறிக்கை கூறுகிறது.

லெபனானில் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர, மத்தியஸ்த நாடுகளின் உதவியுடன் அமெரிக்கா, இரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஒரு “மோதல் தவிர்ப்புக் குழுவை” உருவாக்குவதற்கும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர்களின் அறிக்கை தெரிவிக்கிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து, தெற்கு லெபனானில் ஹெஸ்பொலா மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே சண்டை அதிகரித்துள்ளது.

மேலும், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல்வேறு லெபனானியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

இந்தப் பதற்றம் அதிகரித்ததன் காரணமாக, இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையே வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கா ஒரு புதிய போர் நிறுத்தத்தை அறிவித்தது.

தொடரும் மோதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக, ஹோர்மூஸ் நீரிணையை மூடிவிட்டதாக, இரான் சனிக்கிழமையன்று அறிவித்தது.

இருப்பினும் கப்பல்கள் அதன் வழியே தொடர்ந்து பயணிப்பதாகக் கண்காணிப்புத் தரவுகள் காட்டுகின்றன.

டொனால்ட் டிரம்ப்

முன்னதாக, சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது, டிரம்ப் தனது பதிவில், இரான் “லெபனானில் தங்களிடம் இருந்து பணம் பெறும் ஆதரவு குழுக்கள் பிரச்னை ஏற்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டதோடு, அவ்வாறு செய்யாவிட்டால் “இரான் மீது மீண்டும் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும்” என்றும் பதிவிட்டார்.

இதற்குப் பதிலளித்த இரானின் முதன்மைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப், “அவர்களுடைய மிரட்டல்களுக்கு ஏதேனும் பலன் இருந்திருந்தால், இன்று அவர்கள் இந்த அவநம்பிக்கையான சூழ்நிலையில் இருந்திருக்க மாட்டார்கள் என்று அவர்கள் நினைக்கவில்லையா?… அவர்கள் எவ்வளவுதான் பேசினாலும், நாங்கள் தான் நடவடிக்கை எடுக்கிறோம்” என்று கூறினார்.

ஞாயிற்றுக்கிழமையன்று, மோதல் குறைந்ததாகத் தகவல்கள் வந்தன, ஆனால் வட இஸ்ரேலைப் பாதுகாப்பதற்குத் தேவையான காலம் வரை இஸ்ரேலிய ராணுவம் தெற்கு லெபனானில் நீடிக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தினார்.

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ராணுவத்தின் இருப்பை ஹெஸ்பொலா தலைவர் நைம் காசிம் நிராகரித்துள்ளதுடன், ஹெஸ்பொலா தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.

இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி
இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி

சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் ஓய்வு விடுதியில் பேச்சுவார்த்தைக்கு முன்னதாகப் பேசிய அமெரிக்காவின் முதன்மைப் பேச்சுவார்த்தையாளரான துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், பேச்சுவார்த்தையாளர்களிடம் “ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குமாறு” டிரம்ப் கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.

இரானின் தலைமை “பிராந்தியத்தில் நிலவும் நிலையற்ற தன்மைக்கு காரணமாக” இருப்பதையும், இரான் “நீண்ட கால அணு ஆயுத லட்சியங்களையும்” கைவிடத் தயாராக இருந்தால், அமெரிக்கா “இரானுடனான நமது உறவின் அடிப்படையை மாற்றியமைக்கத் தயாராக உள்ளது” என்றும் அவர் கூறினார்.

தனது அணுசக்தித் திட்டம் அமைதியானது என்றே இரான் வலியுறுத்தி வருகிறது.

வான்ஸுடன் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் இணைந்திருந்தனர். காலிபாப்ஃபுடன் இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வந்திருந்தார்.

பாகிஸ்தான் பிரதமரும் ராணுவத் தளபதியும், கத்தார் பிரதமரும் சுவிட்சர்லாந்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் இந்த போர் முழுவதும் ஒரு மத்தியஸ்தராகச் செயல்பட்டுள்ளதுடன், அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான முந்தைய சுற்று பேச்சுவார்த்தையையும் நடத்தியிருந்தது.

கத்தாரும் மத்தியஸ்தம் செய்துள்ளதுடன், ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி, அமெரிக்கா-இரான் பேச்சுவார்த்தை தொடர்வதை வரவேற்பதாகக் கூறினார்.

போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், அமெரிக்க மற்றும் இரானிய அதிபர்கள் இந்த வார தொடக்கத்தில் ஆரம்பகட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், உலகின் 20% எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும் முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையை இரான் மீண்டும் திறக்க வேண்டும்.

இது நடைமுறையில் மூடப்பட்டதால் எரிபொருள் விலைகள் உயர்ந்ததோடு, உலகப் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது.

இரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கப்பல்கள் மீதான ராணுவ முற்றுகையை நீக்க அமெரிக்காவும் ஒப்புக்கொண்டது.

ஆரம்பகட்ட ஒப்பந்தத்தில் இரானின் “மறுசீரமைப்புக்காக” 300 பில்லியன் டாலர் (224 பில்லியன் பவுண்ட்) திட்டமும், இரான் மீதான “அனைத்து வகையான தடைகளையும்” அமெரிக்கா முடிவுக்குக் கொண்டு வருவதும் அடங்கும்.

ஆனால், இந்த மோதலுக்கு அமெரிக்கா கூறும் முக்கியக் காரணமான இரானின் அணுசக்தித் திட்டம் குறித்த விவகாரம் இன்னும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படவில்லை.

ஹோர்மூஸ் நீரிணை
ஹோர்மூஸ் நீரிணை 

ஒபாமா அதிபராக இருந்த காலத்தில், இரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டார். டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில், அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக்கொண்டார். மேலும், இரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்தார்.

ஞாயிற்றுக்கிழமையன்று, நீரிணையை மூடிவிட்டதாக இரான் கூறிய போதிலும், அமெரிக்கா அதனை மறுத்துள்ளது.

மரைன்டிராஃபிக் என்ற கடல்சார் கண்காணிப்பு இணையதளத்தின் இருப்பிடத் தரவுகளின்படி, சில கப்பல்கள் நீரிணைக்குள் நுழைவதையும், வெளியேறுவதையும், அதைக் கடந்து செல்வதையும் காணமுடிந்தது.

பிற்பகலில் நான்கு டேங்கர் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து சென்றன.

கடந்த வார இறுதியில் இருந்து நீரிணையின் மேற்குப் பகுதியில் நின்றிருந்த மற்ற நான்கு கப்பல்களும் (அனைத்தும் சரக்குக் கப்பல்கள்) கிழக்கு நோக்கிச் செல்வது போல் தெரிகிறது.

மற்றொரு திசையில், இரானிய கடற்கரைப் பகுதியில் இருந்து புறப்பட்ட நான்கு கப்பல்கள் நீரிணையை விட்டு மேற்கு நோக்கி வெளியேறுவது போல் தெரிகிறது.

சில கப்பல்கள் தங்களது கண்காணிப்புக் கருவிகளை அணைத்து வைத்திருக்கலாம் என்பதால், கண்காணிப்புத் தரவுகள் அனைத்து நகர்வுகளையும் பதிவு செய்யாமல் இருந்திருக்கலாம்.

ஆரம்பகட்ட ஒப்பந்தம் அனைத்து முனைகளிலும் சண்டையை நிறுத்தக் கோரியது, ஆனால் லெபனானில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் குறைந்தது 67 பேரைக் கொன்றுள்ளன, அதே நேரத்தில் ஹெஸ்பொலா தாக்குதல்கள் ஐந்து இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றுள்ளன.

ஹெஸ்பொலாவுடனான தனது மோதல், பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் தொடுத்த இரான் மீதான போரிலிருந்து வேறுபட்டது என்று இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

இரானின் அதி உயர் தலைவரைக் கொன்ற தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக ஹெஸ்பொலா இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவியதைத் தொடர்ந்து, லெபனானும் போரில் இழுக்கப்பட்டது.

இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் லெபனான் முழுவதும் குண்டுவீச்சு தாக்குதலை தொடங்கி, நாட்டின் தெற்கு பகுதியில் சுமார் 5 சதவிகித நிலப்பரப்பை ஆக்கிரமித்தது.

இதன் மூலம் தனது வடக்கு எல்லையிலிருந்து ஹெஸ்பொலா ஆயுதக் குழுவினரை பின்வாங்கச் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

மேலும், அங்கிருந்து வெளியேறும் எந்தத் திட்டமும் இல்லை என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மார்ச் 2 முதல், லெபனானில் 4,106 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறுகிறது. லெபனானில் குறைந்தது இஸ்ரேலிய படையினர் 34 பேரும், வட இஸ்ரேலில் பொதுமக்களுள் நான்கு பேரும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

Previous Story

Next Story

වි#ලි ලැජ්ජාවක් නැති සජිත් ප්‍රේමදාස හි#රිකිතයි