நேருக்கு நேர் மோதிக்கொண்ட.. அதிவேக ரயில்கள்!

 அடையாளம் தெரியாமல் சிதைந்த 46 பேர்!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 46 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர். 178க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விபத்து மொத்த ஸ்பெயினையும் உலுக்கியிருக்கிறது.

டொலிடோ மாகாணத்தில் உள்ள உர்தா மற்றும் லாஸ் எபெனெஸ் பகுதிகளுக்கு இடையே உள்ள அதிவேக ரயில் பாதையில் இந்த விபத்து, உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு நடந்திருக்கிறது.

Spain Train Crash

நேருக்கு நேர் மோதல்

சுமார் 147 பயணிகளுடன் நின்றுக்கொண்டிருந்த இரியோ அதிவேக ரயிலின் பின்புறத்தில் சுமார் 397 பயணிகளுடன் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் வந்த ரென்ஃபே ஏவிஇ என்ற மற்றொரு அதிவேக ரயில் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தன.

ஆரம்பக்கட்ட விசாரணையில், ரயில்வே சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு மற்றும் கட்டுப்பாட்டு அறையின் மனித தவறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

விபத்து நடந்தவுடன் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, ராணுவத்தத்தின் அவசரக்கால பிரவு, மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் பயணிகளை மீட்டனர்.

Railway safety questioned as Spain reels from twin train disasters - CNA

சிக்னல் கோளாறு

விபத்து நடந்த பகுதியில் ஏற்கெனவே சிக்னல் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. எனுவே இந்த பகுதியில் மட்டும் சிக்னல்கள் மேனுவல் முறைக்கு மாற்றப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில் பாதியில் நின்ற ரயில் குறித்த தகவல், பின்னால் வந்துக்கொண்டிருந்த ரென்ஃபே ஏவிஇ என்ற அதிவேக ரயிலுக்கு சொல்லப்படவில்லை. எனவே ரயில் மோதி விபத்தில் சிக்கியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மிக நீளமான மற்றும் பாதுகாப்பான அதிவேக ரயில் நெட்வொர்க்கை கொண்ட நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. அப்படி இருக்கையில், தற்போது நடந்திருக்கும் விபத்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அங்குள்ள தொழிற்சங்கங்கள், 3 முக்கியமான பிரச்சனைகளை முன்வைக்கின்றன.

3 முக்கிய பிரச்சனைகள்

1. சமீப காலங்களாக புதிய வழித்தடங்களை அரசு உருவாக்கி வருகிறது. ஆனால், அதை உருவாக்க காட்டும் ஆர்வம், ஏற்கெனவே உள்ள பழைய வழித்தடங்களை சரியாக பராமரிப்பதில் காட்டப்படுவதில்லை.

2. கடந்த 2021க்கு பிறகு ஸ்பெயின் ரயில்வேயில் தனியார் நிறுவனங்களும் ரயில்களை இயக்க அனுமதிக்கப்பட்டது. இது ஒரே ரயில் பாதையில் பல ரயில்கள் இயங்க வழிவகுத்தது. இதனால், உள்கட்டமைப்பின் மீதான அழுத்தம் அதிகரித்தது. இப்போது விபத்தில் சிக்கிய ‘இரியோ’ ரயில் தனியாருடையது என்பது கவனிக்கத்தக்கது.

3. ஸ்பெயினில் பழமையான அதிவேக ரயில் பாதைகளில்.. உதாரணமாக, 1992ல் அமைக்கப்பட்ட மாட்ரிட்-செவில்லே பாதையில் ஜெர்மன் தொழில்நுட்பத்தின் பழைய LZB சிக்னல் அமைப்புகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதை புதிய நவீன அமைப்புகளுடன் இணைக்கப்படும்போது.. சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுகின்றன. இதெல்லாம்தான் ஸ்பெயின் ரயில் விபத்துகளுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

Previous Story

ගෝඨාභයලා බෝම්බ පිපිරෙනවාට කැමති වුණා! රාජපක්ෂලාගේ නිවට සංහිදියාව! මුස්ලිම්

Next Story

Israel Election -2026