நேரம் தவறாமைக்கு பெயர் போன விமான நிலையங்கள், விமானங்கள் எவை !

சர்வதேச அளவில் நேரம் தவறாமையை கடைபிடிக்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் குறித்த பட்டியலை சர்வதேச விமான போக்குவரத்து ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டு உள்ளது.

விமானம் கிளம்பும் நேரம், சென்றடையும் நேரம் உள்ளிட்டவை காரணமாக பயணிகளுக்கு பதற்றமும் கவலையும் ஏற்படுவது உண்டு.விமான நிறுவனங்களுக்கு நற்பெயர் கிடைப்பதற்கான முக்கிய காரணியாக, குறித்த நேரத்தில் விமானம் இயக்கும் செயல்பாடு உள்ளது.

இதனால், சரியான நேரத்துக்கு விமானம் இயக்கும் நிறுவனங்கள், நேரம் தவறாமையை சரியாக கடைபிடிக்கும் விமான நிலையங்கள் பற்றி விமான பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் உள்ளது. அவர்களுக்காகவே, விமான போக்குவரத்து ஆய்வு நிறுவனமான சிரியம் என்ற அமைப்பு சரியான நேரத்திற்கு செயல்படும் விமான நிலையங்கள், விமானங்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி பட்டியல் வெளியிட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது

உலகில் நேரம் தவறாமையை மிகச்சரியாக கடைபிடிக்கும் விமான நிறுவனங்கள்

Air Service Updates | Phoenix Sky Harbor International Airport

1. ஏரோ மெக்சிகோ

2. சவுதியா

3. டெல்டா ஏர்லைன்ஸ் ( அமெரிக்கா)

4. எல்ஏடிஎஎம் ஏர்லைன்ஸ்(சிலி)

5. கத்தார் ஏர்லைன்ஸ்

6. அஜூல் ஏர்லைன்ஸ்(பிரேசில்)

7. ஏவியங்கா (கொலம்பியா)

8.ஐபீரியா(ஸ்பெயின்)

9.ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் (டென்மார்க், நார்வே, சுவிடன்)

10. யுனைட்டைட் ஏர்லைன்ஸ்( அமெரிக்கா)

King Khalid International Airport - Latest News, Views, Reviews, Updates, Photos, Videos on King Khalid International Airport - Arabian Business: Latest News on the Middle East, Real Estate, Finance, and More

1. ரியாத் கிங் காலியத் சர்வதேச விமான நிலையம்

2. லிமா ஜார்ஜ் சாவேஸ் சர்வதேச விமான நிலையம்

3.மெக்ஸிகோ சிட்டி பெனிட்டோ ஜுரேஸ் சர்வதேச விமான நிலையம்

4. சால்ட் லேக் சிட்டி சர்வதேச விமான நிலையம்

5. சாண்டியாகோ ஆர்டுரோ மெரினோ பெனிடெஸ் சர்வதேச விமான நிலையம்

6. மின்னியாபோலிஸ் செயின்ட் பால் சர்வதேச விமான நிலையம்

7.வாஷிங்டன் டல்லாஸ் சர்வதேச விமான நிலையம்

8. டெடராய்ட் மெட்ரோபொலிட்டன் வயானே கவுண்டி விமான நிலையம்

9. ஓஸ்லோ கார்டெர்மொயன் விமான நிலையம்

10 தோஹா ஹமாத் சர்வதேச விமான நிலையம்

நடுத்தர விமான நிலையங்களில் முதல் மூன்று இடங்களில் உள்ள விமான நிலையங்கள்

1.பனாமா டோகுமென் சர்வதேச விமான நிலையம்

2.ஒசாகா இடாமி சர்வதேச விமான நிலையம்

3.பிரேசிலா சர்வதேச விமான நிலையம் ஆகியன இடம்பெற்றுள்ளன.

சிறிய விமான நிலையங்கள் பட்டியலில்

1.எல்சால்வடார் சர்வதேச விமான நிலையம்,

2.கயாகுயில் ஜோஸ் கோயாகுயின் டி ஒல்மெடோ சர்வதேச விமான நிலையம்

3.உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

Previous Story

பாடசாலை உபகரணங்களின் விலை 20 % குறைக்கப்பட்டது 

Next Story

2024ல் செல்வாக்கான மனிதர்கள்!