-நஜீப்-
சாம்பல் மேட்டிலிருந்து பீனிக்ஸ் பறவைகள் பறப்பதற்கு முன்னர் புத்தளம்-ஆரச்சிக்கட்டுவையில் நெருப்பில் இருந்து மொட்டு மேடையொன்று எழுந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.
ஆரச்சிக்கட்டுவையில் தனது வீட்டை போராட்டக்காரர்கள் எரித்து சாம்பலாக்கி விட்டார்கள். அந்த இடத்தில் தான் நான் இன்று மொட்டுக் கட்சி மேடை போட்டிருக்கின்றேன் என்று சனத் நிசந்த குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை பார்க்கின்ற போது பலர் பிடித்து வரப்பட்டவர்கள் போல இருந்தார்கள். முன்பெல்லாம் ராஜபக்ஸாக்கள் வரும் போதும் எழுந்திருக்கின்றபோதும் பேசுகின்ற போதும் ஆதரவாலர்கள் மெய்மறந்து நரம்புகள் பூரிக்க கரகோஷம் எழுப்பவது வழக்கம். இப்போது மொட்டுக் கட்சிக் கூட்டங்களில் அந்த உணர்வுபூர்வமான காட்சிகளை காண முடிவதில்லை.
அவர்கள் சொல்வதைப் போல சம்பலில் இருந்துதான் அவர்கள் மீள் எழ வேண்டி இருக்கின்ற கதையில் உண்மைகளும் இருக்கின்றது.
அரசு புலனாய்வு அறிக்கைகள் தமக்குத் திருப்தி இல்லவிட்டாலும் தலைமறைவாக இருந்த எம்மை பார்க்க ஓரிரு ஆயிரம் பேராவது எப்படியோ வருகின்றார்கள் என்பதில் ராஜபக்ஸாக்களுக்குத் திருப்தி என்றுதான் சொல்ல வேண்டும்.
நன்றி- 30.10.2022 ஞாயிறு தினக்குரல்





