நுபுர் ஷர்மாவிற்கு குவிஹெச்பி தலைவர் ஆதரவு..!

நபிகள் நாயகம் பற்றி ஏதாவது பேசினால் நாக்கை அறுப்போம் என்று ஓபனாக பேசுகிறார்கள். இந்த மாதிரி பேசுபவர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அலோக் குமார் கூறியுள்ளார். இந்தப் போக்கு உண்மையில் கவலைக்குரியது என்றும் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகத்துக்கு எதிராகச் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த நவீன் குமார் ஜிண்டல் நபிகள் நாயகத்துக்கு எதிராக ட்வீட் செய்தார். அது அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் அந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டார். இந்த நிகழ்வுகள் இந்தியா மட்டுமில்லாமல் உலக அளவில் சர்ச்சை ஆகியுள்ளன.

இந்தியப் பொருள்களைத் தடைசெய்ய வேண்டும் என்ற ஹேஷ்டேக் அரபு நாடுகளில் டிரெண்ட் ஆனது. இரான், கத்தார், குவைத் போன்ற நாடுகள் இந்தக் கருத்துகளுக்கு எதிராகத் தங்கள் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளன.

நுபுர் ஷர்மாவிற்கு எதிர்ப்பு

நுபுர் ஷர்மாவிற்கு எதிர்ப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அங்கு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் புகழ்பெற்ற பராத்தே என்ற சந்தையில் கடைகளை அடைக்க மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக் கருத்தைக் கூறியதான குற்றச்சாட்டில் நுபுர் ஷர்மா பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கோர்ட் தீர்மானிக்கும்

கோர்ட் தீர்மானிக்கும்

இந்நிலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத் சர்வதேச அமைப்பின் தலைவர் அலோக் குமார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, “நுபுர் ஷர்மா கலந்து கொண்ட ஒரு விவாதத்தில் இந்து தெய்வங்கள் பற்றி அவமரியாதையாக சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன, கல்லைக் கும்பிடுபவர்கள், மசூதியில் கண்டெடுத்தது சிவலிங்கம் இல்லை அது நீரூற்று என்று பேசப்பட்டது, இந்த விவாதச் சூட்டில் நுபுர் ஷர்மா ஏதோ ஒன்றைக் கூறினார். அது சட்டப்பூர்வமானதோ, சட்ட விரோதமானதோ, அது குற்றமோ இல்லையோ அது நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட வேண்டியது.

வன்முறையான ஆர்பாட்டங்கள்

வன்முறையான ஆர்பாட்டங்கள்

நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பே நாடு முழுதும் வன்முறையான ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தப்படுகின்றன, இது சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுமா? நபிகள் பற்றி ஏதாவது பேசினால் நாக்கை அறுப்போம் என்று ஓபனாக பேசுகிறார்கள். இந்த மாதிரி பேசுபவர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். இந்தப் போக்கு உண்மையில் கவலைக்குரியது.

    முகமது நபிகள் பற்றி நுபுர் சர்மா.. என்ன நடக்கிறது? |
    ஓவைசி பேசுவதா?

    ஓவைசி பேசுவதா?

    அவர் என்ன பேசினார் என்பது இருக்கிறது, அதைக் கேட்கட்டும் அதற்கேற்ப போலீஸார் நடவடிக்கை எடுக்கட்டும். கோர்ட் கேட்கட்டும் பிறகு நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும். நுபுர் ஷர்மாவை கைது செய்ய வேண்டும் என்கிறார் ஓவைசி, கைது என்பது யாரோ ஒருவர் கேட்கிறார் என்பதற்காக செய்ய முடியாது.

    சட்டப்படியே கைது செய்ய முடியும். நுபுர் ஷர்மா பேசியது கேமராவில் உள்ளது. போலீஸார் விசாரணை செய்ய வேண்டிய அவசியமேயில்லை, அதிலேயே எல்லாம் உள்ளது. அவர் என்ன கூறினார் என்பதை கேட்கட்டும் அதன்படி புகார் அளிக்கவும். எனவே இப்போது எதற்கு இந்த கைதுப் பேச்சு என்று அலோக் குமார் கூறியுள்ளார்.

    Previous Story

    இந்தியா; இஸ்லாமிய நாடுகளுடனான உறவில் பாதிப்பா?

    Next Story

    1500 RS  யூரியா ரூ.42,500 RS...!  விளைச்சல் என்ன ஆகும்?