நஜீப்
நன்றி: 28.06.2026 ஞாயிறு தினக்குரல்
சஜித்தின் ஐம.சக்தி ஊடகப் பேச்சாளர் பிரசாத் சிரிவர்தன. சில தினங்களுக்கு முன்னர் அவர் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயா கமகேவுக்கு நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை இது ஜனாதிபதி அனுராவின் எருமைகள் பார்த்த வேலை இதனை எமக்கு ஏற்றுக் கொள்ள முடியாது.
இப்படிச் செய்தால் எப்படி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டுக்குள் வருவார்கள் என்று கேள்வி எழுப்புகின்றார் சஜித்தின்பிரசாத் சிரிவர்தன.

அப்படிச் செய்வதாக இருந்தால் அது ஒருவருக்கும் தெரியாது இரகசியமாக நடக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கின்றார்.
இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் நீதி மன்றம் மக்கள் வங்கியில் பெற்றுக் கொண்ட கடனைதயா திருப்பிச் செலுத்தாததால் அவரது குறிப்பிட்ட சில சொத்துக்களை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்று நீதி மன்றம் கட்டளையிட்டிருக்கின்றது.
இந்த வழக்கு ஜனாதிபதி அனுரகாலத்தில் போடப்பட்ட வழக்குமல்ல.!




