நிலா யாருக்குச் சொந்தம்!

-யூசுப் என் யூனுஸ்-

2008ல் இந்தியா விண்ணுக்கு ஏவிய சந்திராயன்-1ன் மூலம் நிலாவில் தண்ணீர் கண்ணுக்குத் தெரியாது மண்ணுக்கடியில் இருக்கின்றது என்பதனை சந்திராயன்-1 உறுதி செய்திருக்கின்றது. இது விஞ்ஞான ரீதியில் ஒரு மைல்க் கல்லாகவும் சொல்லப்படுகின்றது.  இப்போது சந்திராயன்-3 விண்ணுக்குப் பயணமாக இருக்கின்றது.

The epic quest to build a permanent Moon base - BBC Future

இப்போது நிலா யாருக்குச் சொந்தம் என்ற கேள்விக்கு ஒரு பதிலை நாம் பார்ப்போம். சோவியத் யூனியன்தான் 1959ல் தனது கொடியை நிலாவில் முதலில் நாட்டியது. சர்வதேச சட்டத்தின் படி பூமியில் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட இடம் அல்லது நிலங்கள் அந்த நாடுகளுக்குச் சொந்தம் என்ற நிலை இருக்கின்றது.

அந்த நியதிப்படி  நிலா சோவியத்துக்குச் சொந்தமாகவிடும் என்று அமெரிக்க அஞ்சி அதுபற்றிய சர்ச்சையை உண்டு பண்ணியது. ஆனால் இதற்கு முற்றிலும் மாற்றமான ஒரு பதிலை சோவியத் சொன்னது. நாங்கள் சமவுடமைவாதிகள். எனவே நிலா அனைத்து மனித குலத்துக்கும் சொந்தம் என்று அதிரடியான பதிலைக் கொடுத்தது.

Humans haven't set foot on the moon in 50 years. That may soon change

சந்திரணில் தங்கம் வெள்ளி எண்ணை வளம் இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நிச்சயம். ஒரு போட்டி நிலை வரும். எந்த சட்டமானாலும் அது காலத்தால் செயலிழப்பது வழக்கம். நிலாத் தொடர்பான உரிமையும் அப்படித்தான் அமையும்.!

நன்றி: 16.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஜனாதிபதி ரணிலின் இந்திய விஜயத்தில் என்னதான் நடக்கும்!

Next Story

ஐஎம்எப் விதித்துள்ள நிபந்தனை! மாற்று வழி இல்லை -ரணில் தரப்பு