நாமல் சாப்டர் தயா மாஸ்டர்! 

நஜீப்

நாட்டில் தமக்கு சாதகமில்லாத அரசியல் சூழ்நிலை உருவாகி வருவதால்  பலர் இப்போது நாட்டிலிருந்து தப்பி ஓடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இது பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றது. அப்படி ஒரு முயற்ச்சியில் நாமல் ராஜபக்ஸ இறங்கிய கதை இது.

இந்தத் தகவல்களைப் பார்க்கும் முன் அஜித் தர்மபால என்பவர் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இவர் பொலிஸை அரசியல் பிடியிலிருந்து விடுவிக்கும் அமைப்பின் தலைவர். நாட்டிலிருந்து நிரந்தரமாக வெளியேற முனையும் ஒருவர் பொலிஸ் தலைமையகத்தில்  ‘கிளியரிங்’ சான்றிதழ் எடுக்க வேண்டும்.

அதற்கு நாமல் விண்ணப்பித்த போது நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக ‘கிளியரிங்’ அறிக்கை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ‘கிளியரிங்’ அறிக்கை நாமலுக்குக் கிடைக்காதது குறித்து பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் அதிர்ச்சியடைந்திருக்கின்றார்.

இது பற்றி பொலிஸ் தலைமையகம் வழங்கிய கடிதப் பிரதி தன்னிடம் கிடைத்திருக்கின்றது என்று கூறுகின்றார் மேற்சொன்ன தர்மபால. மேலும் வடக்கில் தயா மாஸ்டருக்கு சொந்தமான சட்டவிரோதமாக இயங்கும் தொலைக் கட்சிக்கும் சாப்டர் கொலைக்கும்  முடிச்சுப் போடுகின்றார் இந்த தர்மபல.

நன்றி: 12.03.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மனித உரிமைகள் பற்றிப் பேச புலனாய்வுத்துறை தலைவரை அனுப்பிய இலங்கை  மீது விமர்சனம்

Next Story

சீன அதிபராக 3வது முறை பதவியேற்றார் ஜி ஜின்பிங்!