“நான் மீளவில்லை” – சல்மான் ருஷ்டி 

“நியூயார்க் நிகழ்வில் என் மீது நடத்தப்பட்ட தாக்குதல், என்னை மனரீதியாகவும் பாதித்தது” என்று பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தெரிவித்துள்ளார்.பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கடந்த ஆகஸ்டு மாதம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஓர் இலக்கிய நிகழ்வில் பேசிக்கொண்டு இருக்கும்போது தாக்குதலுக்கு உள்ளானார். இந்தத் தாக்குதலில் சல்மான் ருஷ்டி ஒரு கண் பார்வையை இழந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு பிரபல பத்திரிகை நிறுவனத்துக்கு சல்மான் ருஷ்டி நேர்காணல் அளித்துள்ளார்.

அதில் அவர் பகிர்ந்தது: “அந்தத் தாக்குதல் என்னை மனரீதியாக பாதித்தது. நான் மீண்டும் எழுதுவது மிகவும் கடினமாக இருந்தது. நான் எழுத உட்காருவேன், ஆனால் எதுவுமே நடக்காது. நான் எழுதுவேன், ஆனால் அவை எல்லாம் வெறுமையாக இருந்தது. அடுத்த நாள் அவற்றைக் குப்பைத் தொட்டியில் தூக்கி போட்டுவிடுவேன். உண்மையில் அந்த சம்பவத்திலிருந்து நான் வெளியே வரவில்லை.

உண்மையில் பெரிய காயங்கள் எல்லாம் விரைவில் குணமாகிவிடும். அதுபோலவே பெரிய காயங்கள் சரியான நிலையில், என் கையில் ஏற்பட்ட சிறிய காயங்கள் இதுவரை சரியாகவில்லை. அதற்கு, சிகிச்சை எடுத்து வருகிறேன். ஆனால, நான் நன்றாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், புகைப்படம் ஒன்றையும் சல்மான் ருஷ்டி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Previous Story

அப்பா  கையை பிடித்தபடி உயிரிழந்த சிறுமி.

Next Story

ஜனாதிபதி அலுவலகம்:பதிவு செய்யப்பட்ட 56 வாகனங்களை காணவில்லை