நாடே காணாமல் போகும்-ஜனாதிபதி ரணில்

என்னை வீட்டுக்கு செல்ல கோரி போராட்டம் நடத்த வேண்டாம். ஏனெனில் எனக்கு செல்ல வீடு இல்லை. முடியுமானால் எனது வீட்டை கட்டித்தர உதவி செய்யுங்கள் என ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டி ஜனாதிபதி மாளிகையில் இருந்து விசேட உரையொன்றை வழங்கிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் தெரிவித்ததாவது,

“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. இதன் விளைவாகவே இன்று நான் ஜனாதிபதி ஆகியுள்ளேன்.

நான் ஜனாதிபதி ஆனாலும் இன்றும் நாட்டில் உள்ள பிரச்சினைகள் தீரவில்லை.

இன்று நம் நாட்டில் உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடி இன்னும் மோசமானால் இலங்கை நாடே இல்லாமல் போய்விடும்.

நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த நாம் பல நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம் மேலும் தீர்வுகளை காண உள்ளோம்.

போராட்டங்கள் நடந்த வேண்டாம்

நாட்டின் இன்றைய நிலைக்கு பல்வேறு விதமானாக காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

எனினும் தற்போது இவற்றை குறித்து வாதாடிக்கொண்டு இருக்க போகிறோமா இல்லையெனில் இதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள போகிறோமா என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும்.

வாதாடி தீர்வுகளை பெற முடியுமென்றால் வாதாடுங்கள் என்றே நான் கூறுவேன்.

மேலும், என்னை வீட்டுக்கு செல்ல கோரி போராட்டம் நடத்த வேண்டாம். ஏனெனில் எனக்கு செல்ல வீடு இல்லை.

முடியுமானால் எனது வீட்டை கட்டித்தர உதவி செய்யுங்கள். நாட்டை செய்யுங்கள் இல்லையென்றால் எனது வீட்டை செய்யுங்கள் இரண்டையும் செய்யாது என்னை போ போ என்று சொல்ல வேண்டாம்.

நாடே இல்லாமல் போய்விடும் ஆபத்து: மக்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை | Ranil Wickremesinghe Sl Economic Crisis People

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு

ஜூலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன் கலந்துரையாடிய பின்னர் ஆகஸ்ட் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறுவதே எனது நோக்கமாக இருந்தது.

எனினும் தற்போது இது ஆகஸ்ட் இதுவரை தள்ளி போயுள்ளது. இன்று நாம் இந்த சவாலை பொறுப்பெடுக்கவிட்டால் நாளைய சமுதாயத்திற்க்கான நாடு இல்லாமல் போயிருக்கும்.

அனைவரும் இருக்கும் சவால்களை முகம்கொடுத்து அதிலிருந்து வெளியே வர வேண்டும்.

பொறுப்புக்களை ஏற்க வேண்டும் அமைதியாக இருந்தது போதும். அனைவரும் வேலைகளை செய்ய ஆரம்பிப்போம்.

நாம் மக்களுக்கு எமது பிரச்சினைகளை சொல்ல வேண்டும் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்ய வேண்டும்” என்றார்.

Previous Story

UK:பிரதமர் தேர்தல்: ரிஷி சுனக்குக்கு மேலும் ஒரு பின்னடைவு...

Next Story

AUG:5 வரை இஸ்மத் மௌலவிக்கு விளக்கமறியல்