நஜீப்
நன்றி:18.01.2025 ஞாயிறு தினக்குரல்
ஒரு ஜனநாயக நாட்டிற்கு அரசியல் யாப்புத்தான் தீர்வு. அதனை மீறி காரியங்கள் நடக்குமாக இருந்தால் அது வன்முறை அல்லது சர்வாதிகாரம் என்றுதான் எடுத்துக் கொள்ளப்படும். அரசியலில் அப்படியான சம்பவங்கள் நடந்தும் இருக்கின்றன.
ஆனால் இன்று பதவியில் இருக்கின்ற அரசுக்கு NPP- 159 ஆசனங்கள் முன்றில் இரண்டு பெரும்பான்மை. ஒட்டு மொத்த எதிரணிக்கு 66 ஆசனங்கள்.
இதில்
ஐமச SJB. 40
தமிழரசு TNA. 8
தேஜமு NDF. 5
மொட்டு SLPP. 3
முகா SLMC. 3
எஸ்பி SB. 1
ஐதேக UNP. 1
டிரிஎன்ஏ DTNA. 1
என்று அமைகின்றது.
ஆனால் இதில் பிரதான எதிரணியாக இருக்கும் ஐமச. என்ற சஜித் தலைமையிலான தரப்பு 40 ஆசனங்கள் இருந்தாலும் அதில் பல கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன.
எனவே பொதுத் தீர்மானம் என்று வரும் போது எதிரணில் ஒரு கட்டுக் கோப்பை கடைப்பிடிப்பது மிகவும் சிக்கலானது. இதனை வாக்களிப்பில் பார்த்தோம்.
இந்தக் குறிப்பு வாசகர்களுக்கான ஒரு நினைவூட்டலுக்கே.!





