நாடாளுமன்றில் ஆண் விபச்சாரகர்!

-நஜீப்-

கடந்த வாரம் நாடாளுமன்ற அமர்வு நடைபெற்ற போது இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக தெரிவிதத் ஒரு கருத்தால் நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பநிலை தோன்றியது. இந்த நாடாளுமன்றத்தில் ஆண் விபச்சாரகர் ஒருவர் இருப்பதாக அவர் நாடாளுமன்றில் பேசும் போது குறிப்பிட்டார். அப்போது இதற்குக் கடும் ஆட்சேபனைகள் எழுந்தது.

இந்த நாடாளுமன்றதில் 225 பேர் இருக்கின்றோம். இவர்களில் யாரை இவர் குறிப்பிடுகின்றார் என்பதனை நாடாளுமன்றத்திற்கு அமைச்சர் அறிவிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் அங்கு கருத்துத் தெரிவித்தனர். அப்போது நெருக்கடிக்கு இலக்கான உதவி சபாநாயகர் இது பற்றி தான் சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு வருவதாக அங்கு  தெரிவித்தார்.

அப்படி இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக சொல்லுகின்ற அந்த ஆண் விபச்சாரகர் யார் என்பதனை தெரிந்து கொள்ள முழு நாடும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றது.  நமது நாடாளுமன்றத்தில் போதை வியாபாரிகள் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கின்றவர்கள் பண மோசடிக்காரர்கள் தங்கச் சங்கிலி  பறிப்போர் கொள்ளையர்கள் கள்ளுக் கடைக்காரர்கள் கப்பம் எடுப்போர் இருப்பது பற்றித்தான் இதுவரை தகவல்கள் இருந்தன. இப்போது அந்தப் பட்டியலில் இந்த ஆண் விபச்சாரகரும் இணைந்திருக்கின்றார்.

நன்றி: 13.08.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

உலக அரசியலே மாறப்போகுது.. ஈரான் கையில் "பயங்கர" தொழில்நுட்பம்.!

Next Story

தினேஷ் ஷாப்டர் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்