நாடாளுமன்றத்தில் தமிழர் கூட்டணி!

-நஜீப்-

நன்றி: 24.11.2024 ஞாயிறு தினக்குரல்

தேர்தலுக்குப் பின்னர் நடாளுமன்றத்தில் அனைத்து தமிழ் தரப்பினரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் பொது தேர்தலுக்கு முன்னரே சொல்லி இருந்தோம்.

அதே போன்று தமிழ் பிரதேசங்களில் தேர்தல் முடிவு 3,2,1,1, என்றுதான் அமையப் போகின்றது என்றும் முன்கூட்டியே சொல்லி இருந்தோம். அதுவும் அப்படியே நடந்து முடிந்திருக்கின்றது.

என்பிபி. தரப்பில் வடக்கு கிழக்கில் வெற்றி பெற்றவர்கள் ஆளும் தரப்பில் இருந்து செயல்படுக்கின்ற போது ஒரு பொது நோக்கத்துக்காக வடக்குக் கிழக்கில் இருக்கின்ற தமிழ் நடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்குள் ஒரு பொதுக் கூட்டணியை அமைத்து நாடாளுமன்றத்தில் செயலாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இதனை நாம் தேர்தலுக்கு முன்பிருந்தே சொல்லி வருகின்றோம். தமிழ் தரப்பினர் விட்ட தவறுகள்தான் அவர்களின் இந்த வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருந்தது. இதனை இப்போது அவர்களே பகிரங்கமாக பேசியும் வருகின்றனர்.

 

 

Previous Story

முன்னைய ஜனாதிபதிகளை போல் நானில்லை : அநுர 

Default thumbnail
Next Story

அமைச்சரவை முஸ்லிம்கள் ஆதங்கம்