தேர்தல் முடிவுகளும் உள்ளாட்சி அதிகாரமும் நடந்தது என்ன?

NPP க்கு சுயவிமர்சனம் தேவை

வடக்குக் கிழக்கில் தமிழ் தேசியமும் முஸ்லிம்கள் மத்தியில் NPP. ஏற்படுத்தி இருந்த காயங்கள், உள்ளூர் உறவு, நெருக்கம் என்பனதான் தேர்தலில் தாக்கங்களை செலுத்தி இருக்கின்றன.

இப்படி ஒரு தேர்தல் முடிவுதான் வரும் என்று நாம் மே முதலாம் திகதி (01.05.2025) வெளியிட்ட கார்டியன் இதழில் சொல்லி இருந்தோம்.

அதே போன்று உள்ளூர் உறவுகள் நெருக்கம் என்பன தான் இப்படி ஒரு தேர்தல் முடிவுக்கு காரணங்கள். அகுரண பிரதேச சபையில் 10 முஸ்லிம் வட்டாரங்களில் என்பிபிக்கு பின்னடைவு என்று அந்த இதழிலே சொல்லி இருந்தோம்.

அது போல மொத்த தேர்தல் முடிவில் NPP 46% SJB 22% SLPP 12% TA/MU 11%  OTHER 09% எனவும் சுட்டடிக் காட்டி இருந்தோம். இது போன்று நிறையவே நாம் சொல்லி இருந்த கணிப்புக்கள் நூறு சதவீதம் பல இடங்களில் அச் சொட்டாக நடந்திருக்கின்றது.

உதாரணம் காத்தான்குடி முசலி பொத்துவில் அக்கரைப்பத்து கண்டி நகர சபையில் முஸ்லிம் NPP வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பு மடவள, உடதலவின்ன வட்டாரங்கள் நிலை என நிறையவே சொல்லி இருந்தோம்.

அது அப்படி இருக்க இந்த பாரத தென்னக்கோன் ஆய்வையும் ஒரு முறை மொழி புரிகின்றவர்கள் கேட்டுப்பாருங்கள்.

(

தேர்தலில் நெருக்கமான போட்டி!

என்னதான் உள்ளாட்சித் தேர்தலில் NPP 90% வட்டாரங்களை வெற்றி கொண்டாலும் கட்சிகள்-குழுக்கள் பெரும் வாக்குகளுக்கு ஆசனங்கள் பகிர்கின்ற ஒழுங்கு சட்டத்தில் இருப்பதால் படுதோல்வி அடைந்த கட்சிகள்-குழுக்கள் கூட திருப்தி கொள்ளும் பாகப் பிரிவினை வருவதால் பல சபைகளில் நெருக்கமான நிலை வரும்.

எல்பிட்டிய இதற்கு நல்ல உதாரணம். மொத்தம் 17 வட்டாரங்களில் NPP 15ல் வெற்றி. சபையில் ஆசனங்கள் ஆளும் தரப்புக்கு 15. எதிரணிக்கு 15. ஏன்றுதான் முடிவு அமைந்தது. ஆனாலும் எதிர்க் கட்சியோ எதிர்க் கட்சித் தலைவரோ இங்கு கிடையாது அதனால் தவிசாளர்தான் அங்கு கிங்,

தேர்தல் பெறுபேருகள்
(ஆசனங்கள் தொகை)

NPP       46%

SJB          22%

SLPP       12%

TA/MU* 11%

OTHER  09%

(*தமிழ்-முஸ்லிம் குழுக்கள்)

Previous Story

சஜித்துக்கு வரலாற்றில் மிகப் பெரும் நெருக்கடி.

Next Story

ஜேவிபிக்கு 60 வருடங்கள்...!