தேர்தல்: அவசரம் மௌனம் புதிர்கள்!

-நஜீப் பின் கபூர்-

தேர்தல்களும் பல்டிகளும் கூட்டணிகளும் வேட்பாளர்களும்!

நாம் என்னதான் தேர்தல் என்ற தலைப்புக்குள் இருந்து வெளியே வர விரும்பினாலும் எம்மால் அந்தத் தலைப்பிலிருந்து இன்னும் சில காலத்துக்கு விடுபட முடியும் என்று நம்பவில்லை. அதற்குக் காரணம் நாடும் குடிகளும் அதில் ஆர்வமாக இருக்கின்றார்கள் என்பதால். தமது தூயரங்களுக்கு இதில் ஒரு விடிவு வரும் என்று ஒரு சின்ன நம்பிக்கை மக்கள் மத்தியில் இருப்பதும் தெரிகின்றது. அதனால் தேர்தல் தொடர்பாக அவசரம் காட்டுகின்ற தரப்பு மௌனமாக இருப்போர் புதிர்விடுவோர் என்று இந்த வாரம் பார்ப்போம்.

இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற கடைசி நேரம் வரை ஜனாதிபதி ரணிலுக்கும் மொட்டு பிரதானி பசிலுக்கும்  இடையே நடக்கின்ற கயிறு இழுப்புப் போட்டியில் எவரும் தமது பலத்தை காட்டி வெற்றிக் கொடியை தொட்டதாக தகவல்கள் இல்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் கடைசியாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முதலில் வருவது ஜனாதிபதித் தேர்தல் என்று கூறியதாக தகவல்கள். ஆனால், இல்லை பொதுத் தேர்தல்தான் முதலில் என்று மொட்டில் இருக்கின்ற பசில் விசிரிகள் கூறுகின்றார்கள். இதற்கிடையில் தேர்தலே இல்லாமல் ரணிலுக்கு இன்றும் ஐந்து வருடங்கள் கொடு என்று நிற்க்கின்றது ஐதேக.

National People's Power | NPP - Official Website

தேர்தலுக்கு அவசரம் காட்டுக்கின்ற தரப்பைப் பற்றி பேசுவதானால் அங்கு முன்னணியில் இருப்பது அணுர தலைமையிலான தேசிய மக்ககள் சக்தி (என்பிபி) அவர்கள் மூளை முடுக்குகள் சந்து பொந்துக்கள் அனைத்திலும் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்- கூட்டம் போடுகின்றார்கள் ஆள் சேர்க்கின்றார்கள். துறைவாரியாக குழுக்களையும் தனது பக்கம் அணி சேர்த்து வருகின்றார்கள் இது உள்நாட்டில் மட்டுமல்ல உலகம் பூராவிலும் நடந்தேறி வருகின்றது. அவர்களுக்கு சவால் விடுவதற்கு இன்றுவரை எந்தக் கொம்பனாலும் முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

முன்பும் அவர்கள் இப்படித்தான் கூட்டம் போட்டார்கள் ஆள் சேர்த்தார்கள் ஆனால் வாக்குப் பெட்டியில் ஓட்டடைத்தான் காணவில்லை என்ற எதிர் விமர்சனங்களும் கேட்கத்தான் செய்கின்றது. ஆனால் அவர்களோ இந்த சுற்றில் மிகுந்த நம்பிக்கையுடன் ஓடித்திரிகின்றார்கள். அத்துடன் தனது அணி எந்த அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி போடாது. நேர்மையான அரசியல் செயல்பாட்டார்கள் இருந்தால் எம்முடன் வந்து இணைந்து கொள்ள முடிவும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனார்.

ஜனாதிபத் தேர்தல் முதலில் வந்தால் அவர்களது வேட்பாளர் அணுரகுமார திசாநாயக்க. பொதுத் தேர்தல் முன் கூட்டி வந்தாலும் பிரதமர் வேட்பாளர் அவரே. ;அத்துடன் அவர்கள் இருபத்தி இரண்டு தேர்தல் மாவட்டங்களுக்கும் தமது வேட்பாளர் பட்டியலைக் கூட தயார் நிலையில் வைத்திருக்கின்றார்கள். அதில் சிறிய மாற்றங்களுக்கு இடமிருக்கின்றது. மேலும் அவர்களது தேசிய பட்டியல் உறுப்பினரும் ஏறக்குறைய தயார் நிலையில் இருக்கின்றது.

ஆனாலும் தேர்தல் அறிவிப்பு வரும் போது அவர்கள் வித்தியாசமான முறையில் தமது கூட்டணிக்கு ஆட்களைச் சேர்க்க ஒரு வாய்ப்பு இருப்பதாக நமக்குத் தெரிகின்றது. இவர்கள் எந்தத் தேர்தலாக இருந்தாலும் அதற்குத் தயாரகத் இருக்கின்றார்கள். அணுர தரப்பைப் பொறுத்தவரை அவர்கள் இது வரை சிறுபான்மை சமூக வாக்குகளைப் பெற்றுக் கொள்ததற்கான ஒரு தனியான திட்டத்தை வடிவமைக்கவில்லை இது அவர்களுக்கு காயங்களை ஏற்படுத்தக் கூடும். வாய்ப்புக்களுக்காக இழப்புக்களை ஏற்படுத்த இடமிருக்கின்றது.

ஏனைய கட்சிகள் பற்றி பார்க்கின்ற போது அந்தக் கட்சிகளின் நிலைப்பாடு அப்படியாக இல்லை. அவர்கள் உருவம் ஜனாதிபதி தேர்தலுக்கு ஒன்றாகவும் பொதுத் தேர்தல் வந்தால் மற்றொண்ராகவும் இருக்கும்.

SJB | Home

தேர்தலில் ஆர்வமாக இருப்பவர்களில் சஜித் தலைமையிலா ஐக்கிய மக்கள் சக்தியினரும் கனிசமான தூரம் நம்பிக்கையுடன் பயணித்திருக்கின்றார். இந்தத் தேர்தலில் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கருதுகின்றார்கள். ஜனாதிபதி தேர்தல் முதலில் வந்தால் அவர்கள் வேட்பாளர்கள் சஜித் பிரேமதாசதான். அனேகமாக முஸ்லிம் மலையக அரசியல் தலைமைகள் தமது பாராளுமன்ற உறுப்புரிமை மீதுள்ள எதிர்பார்ப்பு-தன்னலம் காரணமாக சஜித்தை ஆதரரிக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

முன்பு போல சமூகத்துக்காக பேரம் பேசப் பேகின்றறோம் அதனைப் பெற்றுத் தருகின்றோம் இதனைப் பெற்றுத் தரப்போக்கின்றோம் என்றெல்லாம் அவர்களால் கொக்கரிக்க முடியும் என்று நாம் நம்பவில்லை. பெட்டிப் பாம்பாக அவர்கள் அங்கு நின்றிருப்பார்கள். இதனால் எப்படியும் சிறுபான்மை சமூகத்தின் பெருவாரியான வாக்குகள் சஜித்துக்குத்தான். வடக்குக் கிழக்கு தமிழ் தரப்பினர் தமிழ் மக்கள் சார்ப்பில் ஒரு பொது வேட்பாளரை களத்துக்குக் கொண்டு வருவார்களேயானால் அதில் அதிகம் பதிக்கப்படுவது சஜித்தாகத்தான் இருக்கும்.

பொதுத் தேர்தல் முன் கூட்டி வருமாக இருந்தால் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு கூட்டணிக்குப் போகும். இதில் நாம் முன்பு  குறிப்பிட்ட முஸ்லிம் தரப்பினர் மலையக் கட்சிகள் ஆளும் தரப்பில் இருந்து தற்போது சஜித் அணிக்கு தாவி இருக்கின்றவர்கள். ஒரு கூட்டணிக்கு வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டியலில் இடம் கொடுக்கின்ற போது நிறையவே குடுமிச் சண்டைகள் வரும். இப்போதே அது துவங்கி விட்டது. எனவே வருவோர் எல்லோரும் வேட்பாளர் எதிர்பார்ப்பை தமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டாம் என்று அங்கு எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

கிழக்கில் தனித்துவ அரசியலை முன்னெடுக்கின்ற ஹக்கீம் மற்றும் ரிசாட் போன்றவர்கள் தமது சின்னங்களை விட்டுக் கொடுக்க வேண்டி வரும். அப்போதுதான் அவர்களுக்கு குறிப்பாக ஹக்கீமுக்கு கண்டியில் சஜித் கூட்டணியில் வாய்ப்பு. ரிசாடுக்கு புத்தளத்தில் ஒரு வேட்பு மனு கிடைக்கலாம். கடந்த காலத்தில் முஸ்லிம் கூட்டணி செய்த துரோகத்தால் (தங்கம் பார்த்த வேலையும் அதற்கு மாற்றீடு முயற்சிகளின் போது நடந்த துரோகங்கள்) இந்த முறை முஸ்லிம்கள் மத்தியில் அந்தக் கூட்டணிப் பருப்பு வேகும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே தன்னல அரசியலுக்காக கிழக்கில் தலைவர்கள் தமது தனித்துங்களை தட்டில் வைத்து விட்டுக் கொடுக்க வேண்டி வரும். பேரம் பேசும் அரசியல் அஸ்ரஃப்-சௌமியமூர்த்தி தொண்டா காலத்துடன் மாண்டு போய் விட்டது.

மலையகத்து அரசியலை எடுத்துக் கொண்டாலும் (மனோ-திகா-ராதா) தனித்துவ முஸ்லிம் அரசியலுக்கு சமாந்திரமாகத்தான் அது பயணிக்கும். ஆனாலும் செந்தில் தொண்டமான் இந்த சுற்றி வித்தியாசமான ஒரு முடிவுக்கு போவதற்க வாய்ப்புக்கள் இருப்பதாகச் சொல்லப்படுக்கின்றது. அவர் மொட்டிலிருந்து தள்ளி இருக்க வாய்ப்புக்கள் அதிகம்.  பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று.

SLPP's manifesto launched | Page 12 | Daily News

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அறுபத்தி ஒன்பது இலட்சம் வாக்குகளைப் பெற்று அதிகாரத்து வந்த மொட்டுக் கட்சி செயல்பாடுகளைப் பார்க்கின்ற போது அவர்கள் ஆளும் தரப்பில் இருக்கின்றார்களா அல்லது எதிரணியில் இருக்கின்றார்களா என்பதனைப் புரிந்து கொள்ள முடியாதிருக்கின்றது மஹிந்த, பசில், நாமல், சாகர போன்றவர்கள் பகிரங்கமாக ஜனாதிபதி ரணில் மீது கடந்த சில தினங்களான கடும் விமர்சனங்களை சொல்லிக் கொண்டு வருகின்றார்கள். கண்டன அறிக்கைகளi கடிதங்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இது பற்றி அவர்களிடத்தில் கேட்டால் நமக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது என்று சொல்லி நலுவி விடுகின்றார்கள்.

மொட்டுக் கட்சியினர் பொதுத் தேர்தலை முன் கூட்டி நடாத்தினால்தான் ஒருளவுக்கு சமாளித்துக் கொள்ள முடியும் என்று கருதுகின்றார்கள். அந்த வாததில் ஒரு நியாயம் இருக்கின்றது என்பதுதான் எமது வாதமும். ஆனால் முன்கூட்டி பொதுத் தேர்தலுக்கு ஜனாதிபதி இன்றுவரை தனது ஒப்புதலை வழங்கவில்லை. ஆனால் மொட்டுக் கட்சியினர் பொதுத் தேர்தலுக்கான காரியாலயங்களைக் கூட ஏற்கெனவே திறந்து வைத்திருக்கின்றார்கள். அவர்கள் தாமும் ஏறக்குறைய ஒரு பொதுத் தேர்தலை நோக்கித்தான் இன்றுவரை பயணிக்கின்றார்கள். அவர்களுக்குத் தேவையான வேட்பாளர்கள் இருக்கின்றார்கள் என்று எதிர்பார்க்க முடியும்.

ஆனால் மொட்டுக் கட்சியில் பலர் ரணிலுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆட்டுத் தோலுக்கு இடம் கொடுத்து நாட்டைப் பறிகொடுத்த ஒரு கதை இருக்கின்றது. அப்படித்தான் இப்போது மொட்டுக் கட்சிக்கு நடந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. மொட்டுக் கட்சியுடன் கூட்டணிக்குப் போவதற்கு சிறுபான்மைக் கட்சிகள் ஏதுவுமே தயாராக இல்லை. வழக்கம் போல டக்லஸ், பிள்ளையான் போன்றவர்கள் அவர்களது கூட்டணிக்குள் போகலாம். ஏற்கெனவே அவர்களுடன் இருந்த இடதுசாரிகள் இன்று அங்கு இல்லை.

ஜனாதிபத் தேர்தலை முதலில் சந்திக்க நேரிட்டால் தமது வேட்பாளர் யார் என்பதனை இன்றுவரை மொட்டுக் கட்சி சுட்டிக் காட்ட முடியாத ஒரு அவல நிலை. இந்தத் தேர்தலில் தமக்கு வாய்ப்பு இல்லாவிட்டால் அவர்கள் தம்மிக்க பெரேரா போன்ற ஒருவர் தலையில் அதனைக் கட்டிவிட இடமிருக்கின்றது. இன்னும் சிலர் தமது கட்சியில் ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் குறிப்பாக நாமலை வேட்பாளராகக் கொண்டுவர வேண்டும் என்று சிபார்சு செய்கின்றார்கள்.

UNP contest general election under 'Elephant'

ஜனாதிபதி ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலில் ஆர்வமாக இல்லை. காரணம் அவர்கள் மிகவும் பலயீனமாக இருக்கின்றார்கள். பொது மக்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளினால் தமக்கு கரை சேரலாம் என்பதுதான் அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ஆனால் களம் அவர்களுக்கு வாய்ப்பாக இல்லை. மேலும் ரணில் மொட்டுக் கட்சி தன்னை பொது வேட்பாளராக களத்தில் இறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்.

 ஆனால் அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ரணிலை மக்கள் மத்தியில் சந்தைப் படுத்துவது சிரமமான காரியம் என்பது மொட்டுத் தரப்பினரில் பெரும்பாலானவர்கள் கணக்கு. ஆனால் பிரசன்ன ரணதுங்ஹ, போன்ற ஓரிருவர் மட்டும்தான் அவருக்கு ஓரளவுக்கு விசுவாசமாக இருப்பது போலத் தெரிகின்றது. ரணில் பிரசன்னவுக்கு பிரதமர் வக்குறுதி கொடுத்திருக்கின்றார் என உதயங்க கிண்டல் செய்து வருகின்றார். இதனால் அடிதடி.

அபூர்வமாக ரணிலுக்கு மொட்டுத் தரப்பினர் ஜனாதிபதி வேட்பு மனுக் கொடுத்து தம்மிக்க பெரேரா அல்லது நாமலுக்கு பிரதமர் பதவி என்று சொல்லி மொட்டும் யானையும் ஒரு கூட்டணிக்கு வர ஒரு சின்ன வாய்ப்பும் இருக்கத்தான் செய்கின்றது. பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முன் கூட்டி சென்றால் அது ஜனாதிபதி ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆரோக்கியமாக இருக்க மாட்டாது என்பது நமது கணக்கு. மறுபுறத்தில் சஜித் அணியுடன் ஐதேக. ஒரு கூட்டணி பற்றி கதைப்போரும் இருக்கின்றார்கள். ஆனால் இதை சஜித் ஆராயக் கூடத் தயாராக இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் ரங்கே பண்டார போன்றவர்கள் சஜித்தை மிகவும் கேவலமாக இன்று பேசி வருகின்றார். அப்படியான பின்னணியில் ரணில்-சஜித் எப்படி கூட்டணி சமைக்க முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சி நாட்டிலுள்ள தேர்தல் தொகுதிகளை பல கொத்தானிகளாக பிரித்து அதற்கு எட்டுநூறு (800) வரையிலான அமைப்பாளர்களை நியமித்து ஒரு வியூகத்தை வடிவமைத்து வருகின்றது. இது தேர்தலைச் சதிக்க மேற் கொள்ளும்  ஏற்பாடா அல்லது ஏதேனும் குறுக்க வழியில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் முயற்ச்சியா என்று தெரியவில்லை.

அடுத்து தமிழர் தரப்பில் செயல்படுகின்ற அரசியல் சக்திகளைப் பற்றிப் பேச வேண்டி இருக்கின்றது. ஜனாதிபத் தேர்தலாக இருந்தால் தமது தரப்பில் தனியான ஒரு வேட்பாளர் என்ற ஒரு இசு தற்போது கிடப்பில் இருக்கின்றது. என்றாலும் சிலர் இதில் ஆர்வமாக இல்லை என்று தெரிக்கின்றது. பொதுத் தேர்தல் என்று வரும் போது வழக்கம் போல பல தரப்பினர் அங்கு நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக தமது பலப் பரீட்சையை நடாத்துவார்கள்.

இது தவிர ஜனாதிபதி தேர்தல் ஒன்று வருமாக இருந்தால் சரத் பொன்சேக்க, திலித் ஜயாவீர, பாட்டலி சம்பிக்க  போன்றவகளும் களத்துக்கு வரலாம் ஆனாலும் அவர்கள் உதிரிகளே. இவர்களினால் தேர்தலில் தாக்கங்களுக்கு வாயப்பே கிடையாது. விமல் வீரவன்ச  உதய கம்மன் பில போன்றவர்கள் அரசியல் இருப்பு என்ன என்று தெரிய வில்லை. டலஸ் என்பிபி யில் இன்னமும் நம்பிக்கையுடன் இருக்கின்றார் என்று தெரிகின்றது. நாம் என்னதான் கருத்துக்கள் சொன்னாலுத் அதிரடி நிகழ்வுகள் அரசியல் போக்கில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி விடவும் வாய்ப்பு இருக்கின்றது.

நன்றி: 25.05.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

அரசியல் கோமாளிக் கூத்துகள்!

Next Story

சாதாரண போன்கள் மீது அதிகரிக்கும்  மோகம்!