/

தேர்தலும் கபட நாடகமும்!

-நஜீப்-

தேர்தல் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான கதைகளை ஆளும் தரப்பும் அதற்கு விசுவாசமான ஊடகங்களும் இன்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்கள் எந்தத் தேர்தல்களையும் உரிய காலத்துக்கு வைக்க மாட்டார்கள். முடியுமான மட்டும் அதனைத் தள்ளிபவ் போடுவதுதான் இவர்களின் திட்டம்.

இந்தியா அரசு வடக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக கட்டாயப்படுத்துகின்றது என்று ஒரு கதையை சந்தைப்படுத்தும் அதே நேரம் முதலில் ஜனாதிபதித் தேர்தல்தான் வருகின்றது என்று அதற்கு மாற்றமான ஒரு கதையை சொல்லி, எப்படி இந்த நேரத்தில் மாகாணசபைத் தேர்தலை வைப்பது என்று இந்தியாவுக்கும் தமிழ் தரப்பினருக்கும் இவர்கள் கதை சொல்ல முனைகின்றார்கள்.

அதே நேரம் இனப்பிரச்சினைக்கு தீர்வு விவகாரத்தில் தழிம் தரப்புக்கள் விசுவாசம் அற்ற நிலையில் இருக்க, இதில் நல்ல முன்னேற்றமும் நம்பிக்கையும் தனக்கு ஏற்பட்டிருப்பதாக ரணில் தனக்குத்தானே நம்பிக்கை தெரிவித்து வருக்கின்றார். இது கபடத்தமான, நரித்தனமா அல்லது கோமாளித்தனமா என்று கேட்கத் தோன்றுகின்றது.

நன்றி:28.05.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சம்பந்தன் - சஜித் சந்திப்பு

Next Story

கல்லில் நார் உரித்தல்!