தேச பக்தனும் துரோகியும்!

-நஜீப்-

யுத்தம் நடந்த காலத்தில் அதில் நமது அரசியல் வியாபாரிகள் பிழைப்பு நடாத்தினார்கள். சுனாமி பேரழிவு வந்த போதும் கொரோனா வைத்தியத்திலும் எரி பொருள் நெருக்கடி என்ற அனைத்திலும் பெரும் வருமானம் ஈட்டிய நமது ஆட்சியாளர்கள் இப்போது எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நஸ்ட ஈட்டிலும் வழக்குப் போடும் விவகாரத்தில் வீண் கால தாமதத்தை ஏற்படுத்தி  பணம் சம்பாதித்திருக்கின்றார்கள்.

நாடாளுமன்றத்தில் தற்போது இது நெருப்பாகி வருகின்றது. இதற்கான 8000 கோடி கப்பம். அந்தப் பணம் வங்கியில் என்று அறியத் தந்தவரே   நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ. இப்போது இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேசுபவர்கள் துரோகிகள் என்று நீதி பேச, அப்படியாக இருந்தால் கப்பம் வங்கியவர்களும் நீரும் என்ன தேச பக்தர்களா என்று நீதியின் முகத்தில் சாத்தி இருக்கின்றார் ஜேவிபி தலைவர் அணுர குமார திசாநாயக்க.

முன்னாள் நீதி அமைச்சர் அலிசப்ரி தற்போதய விஜேதாச முன்னாள் இராஜாங்க அமைச்சர் நலக்க கொடஹேவா எதிரணி மானப்பெரும கப்பலை சர்வதேச கடலுக்கு தப்பியோட அனுமதித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர். அன்றைய அமைச்சர் தினேஸ் அனைவரும் இப்போது சிக்கலில்.

நன்றி: 14.05.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

துருக்கி தேர்தல்: அதிபர் எர்துவான் முன்னுள்ள சவால்கள்

Next Story

'தி கேரளா ஸ்டோரி': சினிமாவா அல்லது ஆயுதமா?