தேசிய பேரவையிலிருந்து ஜீவன் தொண்டமான் OUT

நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையிலிருந்து விலகியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

வெற்றிட நியமனம்

தேசிய பேரவையிலிருந்து விலகிய ஜீவன் தொண்டமான் | Jeevan Thondaman Resigned The National Assembly

இந்நிலையில் குறித்த வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ம.ராமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவும் தேசிய பேரவையில் உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

தேசிய பேரவை

தேசிய பேரவையிலிருந்து விலகிய ஜீவன் தொண்டமான் | Jeevan Thondaman Resigned The National Assembly

பிரதமர் தினேஷ் குணவர்த்தன கடந்த செப்டெம்பர் 20ஆம் திகதி தேசிய பேரவையை உருவாக்குவது தொடர்பான பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்ததுடன், இப்பிரேரணை எதிர்ப்பு இன்றி ஏகமனமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த தேசிய பேரவையின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

சகல நாடாளுமன்ற அமர்வு வாரத்திலும் வியாழக்கிழமைகளில் தேசிய பேரவையைக் கூட்டுவதற்கு முதலாவது கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

இதுதான் தாய் பாசம்! அம்மா "மான்" செய்த செயல்!

Next Story

உலகின் முதல் பறக்கும் தட்டு