துருக்கி, சிரியா:நிலநடுக்கம்.. குவியல் குவியலாக சடலங்கள்..

துருக்கி, சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 23,766 ஆக உயர்வு துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 23,766 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியின் தென்கிழக்கே சிரியா எல்லையை ஒட்டியுள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த 6ஆம் தேதி அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  அது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது.

இந்த பேரழிவு நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகளும் இரு நாடுகளையும் உலுக்கிவிட்டன. இந்த நிலநடுக்கத்தில் வானை தொடும் அளவுக்கு கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் சீட்டு கட்டுகளை போல் கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்து விழுந்தன. நிலநடுக்கம் இந்த நிலநடுக்கம் மக்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் வந்ததால் பலரால் தப்ப முடியவில்லை.

இதனால் குடியிருப்பு கட்டடங்கள், வீடுகள் என பல்வேறு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த இடிபாடுகளில் லட்சக்கணக்கானோர் சிக்கியுள்ளனர். இந்த நிலநடுக்கம் துருக்கியில் மட்டுமே 10 மாகாணங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அழுகுரல்கள் எங்கு திரும்பினாலும் மக்களின் அழுகுரல்கள் கேட்கின்றன.

இந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் விரைந்து நடைபெறுகின்றன. இரவு பகல் பாராமல் மீடபு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மலை போல குவிந்து கிடக்கும் கட்டட இடிபாடுகளை அப்புறப்படுத்தி வருகிறார்கள். உடல் பாகங்கள் அதில் ரத்த கறைகளும், இறந்தவர்களின் சிதறிய உடல் பாகங்களும், சடலங்களும் கிடைக்கின்றன.

உயிருடன் மீட்கப்படும் சிலரும் அதிக அளவில் பாதிப்புகளை பெற்றுள்ளார்கள். பலர் எவ்வித காயமும் இன்றி மீட்கப்பட்டுள்ளனர். இந்த மீட்பு பணிகளில் இந்தியா உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் நாட்டின் பேரிடர் மீட்பு படைகளையும் நவீன இயந்திரங்களையும், ஆம்புலன்ஸ் வாகனங்களையும் மருந்து பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளன.

அந்த வகையில் 1.10 லட்சத்திற்கு மேற்பட்ட மீட்பு படையினர் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் டிராக்டர்கள், கிரேன்கள், புல்டோசர்கள் உள்பட 6 ஆயிரம் வாகனங்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கட்டட இடிபாடுகளில் இருந்து தோண்ட தோண்ட சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றன.

நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23,766 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியில் 20,213 பேரும் சிரியாவில் 3553 பேரும் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டனர். இன்று 6ஆவது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. இந்த மீட்பில் தொப்புள் கொடி அறுக்கப்படாத குழந்தை மீட்கப்பட்டது.

நிறைய குழந்தைகள் காயமின்றி மீட்கப்படுகிறார்கள். இது மீட்பு படையினருக்கு மகிழ்ச்சியை தருகிறது. தாய் தந்தை இழப்பு ஆனால் அவர்களின் தாய், தந்தை அல்லது தாய் அல்லது தந்தை இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடப்பதை பார்க்கும் போது அந்த குழந்தைகளின் நிலையை கண்டு மக்கள் கலங்குகிறார்கள். டியாபா்பகிர் பகுதியை சேர்ந்த இடத்தில் நடந்த மீட்பு பணிகளில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

Previous Story

கோவணத்துடன் கொழும்பில் ஓட்டம்!

Next Story

மொட்டு மரம் யானை புதிர் கூட்டு!