துபாய் to அபுதாபி வெறும் 1 மணி நேரம்..

 பிரம்மாண்ட ‘எதிஹாத் ரயில்’..

டிக்கெட் 50% அதிரடி தள்ளுபடி!

Etihad Rail pushes shift from road to rail freight - Construction Week Online

ஐக்கிய அரபு அமீரக வரலாற்றிலேயே மிக முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான எதிஹாட் ரயில் (Etihad Rail) பயணிகள் போக்குவரத்துச் சேவை, வரும் ஜூன் 30 முதல் தனது முதல் கட்டத்தைத் தொடங்கவுள்ளது. சாலைப் பயணங்களுக்கு மாற்றாக, அதிவேக மற்றும் சொகுசுப் பயணத்தை இந்த ரயில் திட்டம் வழங்க உள்ளது.

ஐக்கிய அரபு அமீரக (UAE) மக்கள் பல வருடங்களாக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘எதிஹாத் ரயில்’ பயணிகள் ரயில் சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதுடன், தொடக்கக் கால சலுகையாக 50 சதவீத கட்டணத் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேவை முதல்கட்ட வழித்தடம் மற்றும் பயண நேரம் அபுதாபி – புஜைரா: ஜூன் 30 முதல் அபுதாபியின் ‘முகமது பின் சயீத் சிட்டி’ நிலையத்திலிருந்து, புஜைராவின் ‘அல் ஹிலால் சிட்டி’ நிலையம் வரை இந்த ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ வேகத்தில் இயங்கக் கூடியவை.

Etihad Rail has announced that passenger train services between Abu Dhabi and Fujairah will begin on June 30, 2026, with journey times of just 1 hour and 45 minutes. The UAE's rail

பயண நேரம்: சாலை வழியாகச் சென்றால் பல மணிநேரம் ஆகும் இந்த தூரத்தை, எதிஹாத் ரயில் வெறும் 1 மணிநேரம் 45 நிமிடங்களில் கடந்துவிடும். அபுதாபி-துபாய் இந்த இரண்டு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் வெறும் 1 மணி நேரமாகக் குறையும்.

கட்டண விவரம் என்ன? டிக்கெட் முன்பதிவு இணையதளத்திலும் மொபைல் ஆப்பிலும் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, தொடக்க நாளுக்கான (ஜூன் 30) பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. 50% தள்ளுபடிக்குப் பிந்தைய தற்போதைய கட்டண விவரங்கள் கம்ஃபர்ட் கிளாஸ் (Comfort Class): ஒரு வழிப் பயணத்திற்கான கட்டணம் வெறும் 55 திர்ஹம் (Dh55) மட்டுமே.

(சாதாரண கட்டணம் Dh109). பிரீமியம் கிளாஸ் (Premium Class): கூடுதல் வசதிகள் கொண்ட இந்த வகுப்பிற்கு கட்டணம் 120 திர்ஹம் (Dh120) ஆகும். (சாதாரண கட்டணம் Dh239). முதியவர்கள் (60 வயதுக்கு மேல்): இவர்களுக்கு சிறப்புச் சலுகையாக கம்ஃபர்ட் கிளாஸ் டிக்கெட் 44 திர்ஹமிற்கு வழங்கப்படுகிறது.

Etihad Rail signs three MoUs with European companies to exchange knowledge and expertise in the railway sector

குழந்தைகள்: 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கட்டணம் இல்லை. ரயிலுக்குள் என்னென்ன வசதிகள் இருக்கும்? அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த அதிநவீன ரயில்களில், ஒரு முறைக்கு 400 பயணிகள் வரை பயணிக்கலாம்.

இலவச அதிவேக வைஃபை (Wi-Fi) வசதி. ஒவ்வொரு சீட்டிலும் பவர் சாக்கெட்டுகள் மற்றும் USB சார்ஜிங் போர்ட்கள். பிரீமியம் கிளாஸ் பயணிகளுக்குச் சாய்ந்து படுக்கும் வசதியுள்ள இருக்கைகள், கூடுதல் கால் இடைவெளி (Legroom), மற்றும் இலவச தின்பண்டங்கள்/ பானங்கள். மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக சக்கர நாற்காலி இடவசதிகள். அடுத்தடுத்த விரிவாக்கத் திட்டங்கள் இந்த ரயில் சேவை படிப்படியாக அமீரகம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

அதிக தேவையுள்ள முக்கிய நகரங்களான அபுதாபி, துபாய் மற்றும் புஜைரா ஆகியவற்றை இணைக்கும் வகையில் முதல் சேவை அமையும். ஜூன் 30, 2026: அபுதாபி-புஜைரா சேவை துவக்கம் (அறிமுகக் கட்டம்). செப்டம்பர் 30, 2026: துபாய் மற்றும் அல் தைத் (ஷார்ஜா) ரயில் நிலையங்கள் திறப்பு (அபுதாபி – துபாய் பயண நேரம் வெறும் 57 நிமிடங்களாகக் குறையும்).

டிசம்பர் 30, 2026: அல் தஃப்ரா பிராந்திய நிலையங்கள் திறப்பு. மார்ச் 30, 2027: ஷார்ஜா மத்திய நிலையத் திறப்புடன் முழு திட்டமும் நிறைவுபெறும். “இந்த பயணிகள் ரயில் திட்டம் அமீரகத்தின் உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது மட்டுமன்றி, நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்தை எளிதாக்கி, சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பெருமளவில் ஊக்குவிக்கும்” என அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது தெரிவித்துள்ளார்.

Previous Story

ஈரானுக்கு பணமழை.. அடுத்த குட்நியூஸ்!