தீர்மானங்கள் மட்டும் போதுமா!

Sri Lankan Tamil National Alliance (TNA) leader Rajavarothiam Sampathan gestures during a press conference in Colombo on December 30, 2014. Sri Lanka's largest Tamil party has endorsed the main opposition candidate in next week's election, accusing President Mahinda Rajapakse of failing to deliver reconciliation after the country's ethnic war.. AFP PHOTO / ISHARA S. KODIKARA (Photo credit should read Ishara S.KODIKARA/AFP/Getty Images)

-நஜீப்-

இலங்கை விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு கடுமையான தீர்மானங்களைப் போட வேண்டும் என்று பெரியவர் சம்பந்தன் ஐயா கேட்டிருக்கின்றார். வழக்கமாக ஒரு தசாப்தத்துக்கு மேலாக இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை இந்த மனித உரிமைகள் அமர்வு போட்டுத்தானே வந்திருக்கின்றது. ஐயா தீர்மானங்கள் போட்டால் மட்டும் போதாது. இப்போதைக்கு நடவடிக்கை தான் தேவை.

குறைந்தது இந்த வாக்கெடுப்பில் இந்தியாவை இலங்கைக்கு எதிராக வாக்களிக்கப் பண்ண ஏதாவது உங்களால் ஆனா முயற்ச்சிகளையாவது செய்து பாருங்கள். சில வருடங்களுக்கு முன்பு இந்த அரசாங்கங்களை நம்பி நீங்களும் தீர்வு குறித்த தேதி சொல்லித்தானே  இருந்தீர்கள். ஏதாவது நடந்ததா?

ஈழத் தமிழர் விவகாரத்தில் நீங்கள் இன்னும் ஓட வேண்டிய தூரம் நிறையவே இருக்கின்றது. உங்களால் அந்த இலக்கை வேகமாக அடைய முடியும் என்று நாம் கருதவில்லை. இளசுகளை விட்டு விரைவாக இலக்கை அடைய ஏதாவது புதிய மார்க்கங்களையாவது அவர்களுக்கு காட்டிவிட்டு நீங்கள் ஓய்வாக நின்று காட்சிகளைப் பார்க்க வேண்டிய காலம்தான் இது என்று நாம் நினைக்கின்றோம். ஏதோ நல்லதைச் செய்ய முயற்சித்துப் பாருங்கள்.

நன்றி: 18.09.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

நோயாளிகளுக்கு உணவை வழங்குவதில் சிக்கல்!

Next Story

சீனா: தீக்கு இரையான 42 மாடி கட்டடம்