தீர்க்கமான நேட்டோ கூட்டம்!

-யூசுப் என் யூனுஸ்-

உக்ரைன் போர் தொடர்பில் ஏற்பட்டிருக்கின்ற பின்னடைவு நேட்டோ நாடுகளுக்கு ஒரு கௌரவப் பிரச்சினையாக இருந்து வருகின்றது. தனது கூட்டமைப்பில் உள்ள பல நாடுகள் இந்த உக்ரைன் போர் தொடர்ப்பில் தெளிவான நிலைப்பாட்டில் இல்லாமல் இருந்து வருவதும் கூட்டணிக்கு ஒரு நெருக்கடியாக இருக்கின்றது.

2023 Vilnius summit - Wikipedia

தனிப்பட்ட ரீதியில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இந்தப் போர் காரணமாக பெரும் சிக்கல்களுக்கு ஆளாகி வருகின்றது. மேலும் ரஸ்யாவுக்குப் போடப்பட்டுள்ள பொருளாதாரத் தடையாலும் பல ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் ஜேர்மன் முக்கியமானது. பிரான்ஸ் கூட உக்ரைன் போர் விவகாரத்தில் ஒரு தடுமாற்றத்தில் இருக்கின்றது.

China and Taiwan loom large behind Ukraine at NATO summit | CNN

பிரித்தானியாவும் போலாந்தும்தான் உக்ரைன் விவகாரத்தில் உறுதியாக இருக்கின்றது. வரும் 11, 12ம் திகதி லிதுவேனியாவில் நடக்கின்ற  நேட்டோ நாடுகளின் உயர் மட்டக் கூட்டம் நடக்கும்.  அப்போது உக்ரைன் எதிர்பார்க்கின்ற எப் 16 போர் விமானங்களுக்கான ஒப்புதல் கிடைத்தால் ஒக்தோபர் அளவில் விமானங்கள் உக்ரைன் போய்விடும். அதன் பின்னர்தான் ஒரு முன்னேற்றத்தை நேட்டோ எதிர்பார்க்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நன்றி: 09.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஒரு குழப்பமான நிலை!

Next Story

'அஸ்வெசும' மேன் முறையீடுகள்: அரசாங்க அறிவிப்பு