திடீரென பாடசாலையை சுற்றிவளைத்த பொலிஸார்

பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கொட்டுகச்சிய நவோத்யா வித்தியாலயத்தில் இன்று (13) பொலிஸ் தேடுதல் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி, காலை 6 மணி முதல் பாடசாலை தொடங்கும் வரை பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் பைகள், உடைகள் சோதனை செய்யப்பட்டன.

அண்மைக்காலமாக பாடசாலைகளுக்கு பல்வேறு வகையான போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருட்கள் வருவதால் பாடசாலை நடவடிக்கைகளில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு புத்தளம் கல்வி வலய பாடசாலைகளுக்கு உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்றி அவசர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக 30 பேர் கொண்ட ஆண் மற்றும் பெண் பொலிஸ் குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் பாடசாலையை சுற்றியுள்ள அனைத்து வீதிகளும் ஏனைய பொலிஸ் அதிகாரிகளால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

Previous Story

குஜராத் தேர்தல்: இந்து வாக்குகளை கவர்ந்து எம்எல்ஏ ஆன முஸ்லிம் - யார் இவர்?

Next Story

UMA  தலைவர் பரீலுக்கு 2021 க்கான தேசிய விருது!