அனுரவுக்கு-திசை காட்டிக்கு வாக்களிப்பது எப்படி?

මාලිමාව malimawa 53 X logo ideas | ? logo, logo design, lettering

இந்தத் தேர்தலில் அப்படி வாக்களிக்கலாம் இப்படி வாக்களிக்கலாம் என்று கதைகள் சொல்லப்பட்டாலும் வழக்கமான புள்ளடியில் வாக்களிப்பதுதான் ஆரோக்கியமானது. கடந்த காலங்களில் 99 சதவீதமானவர்கள் இப்படித்தான் வாக்களித்திருகின்றனர்.

இலக்கங்களில் வாக்களிக்கப் போய் மக்கள் தமது வாக்குகளை பழுதாக்கிக் கொள்ளும் அபாயம் இருக்கின்றது. அத்துடன் வெற்றி வாய்ப்பில் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் இலக்கங்கள் பற்றி யோசிக்க வேண்டி இருக்கும்.

எனவே அனுரவுக்கு வாக்களிப்பவர்கள் அவரது சின்னமான திசைகாட்டிக்கு மட்டும் புள்ளடி போடுவதே சிறந்தது. 28 அங்குளம் வரை நீண்ட இந்த வாக்குச் சீட்டில் அனுரவின் சின்னம் 16 இடத்தில் இருக்கின்றது.

வாக்குச் சீட்டை சரியாக இரண்டாக மடித்தால் அந்த இடத்திலிருந்து சற்று மேலாக திசை காட்டி இருக்கின்றது. அதற்கு ஒரு புள்ளடி போட்டால் ஓகே. பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்து வாக்குச் சீட்டை வீணாக்கிக் கொள்ள வேண்டாம்.

Previous Story

லெபனானில் ஒரே நேரத்தில் ஆங்காங்கே பல நூறு பேஜர்கள் வெடித்ததில் 2,800 பேர் காயம்!

Next Story

அனுபவம் பற்றிய முட்டால்கள் கதை