தாய்மை வலியை வென்ற ரணில்!

-நஜீப்- 

உலகத்தில் இருக்கின்ற மிகப் பெரிய வலியும் வேதனையும் மகப்பேற்று வலி. இதனை அனுபவிப்போர் தாய்மார்கள். அதனால்தான் நமது தாய்க் குலத்துக்கு இந்த மதிப்பும் மரியாதைகளும் முன்னுரிமைகளும் எல்லா இடங்களிலும் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த வலியையும் வேதனைகளையும்  விட மிக மோசமான வேதனைகளை இப்போது ஜனாதிபதி ரணில் தமது தாய்மாருக்கு ஒவ்வொரு நொடியிலும் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். குழந்தைகள் பசி என்று கேட்கும் போது சோறு போட முடியாத தாய்மார் நிலை.

பிள்ளைகளுக்கு பாடசாலைக்கு அனுப்பத் தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாத அவலம். குழந்தைகள் தாயிடம் தான் எதையும் எதிர்பார்ப்பார்கள். இது போன்ற அன்றாடத் தேவைகளுக்காக குழந்தைகள் தாயானவலிடத்தில்தான் கேள்வி கேட்பார்கள். இந்த செய்திகளை எப்படி பச்சிலம் குழந்தைகளுக்கு தாய்மார் சொல்ல முடியும்.

அப்போது தாய்மார் உணர்வுகளை ஒரு முறை எண்ணிப் பாருங்கள். இதனால் இன்று தாய்மை வலியைவிட ஜனாதிபதி ரணில் கொடுக்கின்ற வலி மிகவும் கனதியானது வேதனை மிக்கதாகவும் இருக்கின்றது.. இந்த கதைகளைச்  என.;பி.பி. பெண்கள் கூட்டத்தில் தெளிவுபடுத்தினார் பதுளை சமந்த வித்தியரத்ன.

நன்றி: 28.01.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

"107 நாட்கள் ஆச்சு.."

Next Story

தெருச்சண்டை போல மாலத்தீவு நாடாளுமன்றத்தில் வெடித்த மோதல்