ட்ரம்ப் கதை கந்தல் பைடன் சாதிப்பாரா?

நஜீப் பின் கபூர்

அஞ்சல் வாக்குகளுக்கு டொனல்ட் ட்ரம்ப் அஞ்சியது எதற்காக
பெரும்பான்மையல்ல மானில முடிவிலதான் வெற்றி தீர்மானம்
ட்ரம்ப் தோல்வி இந்தளவு வாக்குகள் கிடைத்ததே அதிசயம்
பைடன் மற்றும் கமலா இந்தியாவுடன் அப்படி என்னதான் உறவு

கடந்த வாரம் நமது கட்டுரையொன்றில் மைக் பொம்பியோ அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்காக கடைசி நேரமாக ஓடித்திரிகின்றார். அவர் அமெரிக்காவில் போய் இறங்குவதற்கும் ட்ரம்ப் மூட்டை முடிச்சிகளோடு வண்டியைக் கட்டுவதற்கும் சரியாக இருக்கும் என்று சொல்லி இருந்தோம். மேலும் களநிலவரம் ஜோ பைடனுக்கு வாய்ப்பாக இருக்கின்றது என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தோம்.

தேர்தல் கடைசி நேரத்தில் இலங்கையில் ஒரு காலத்தில் தேர்தல் அடாவடித் தனங்கள் நடப்பது போல ஜோ பைடனும் அவரது துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலாவும் தேர்தல் பேரணிக்காக சென்று கொண்டிருந்த போது ட்ரம்ப் குன்றார்கள் வழியில் மறைத்து தொந்தரவு கொடுத்தனர் இது பற்றி அறிந்த பொலிசார் அந்தக் குன்டர்களை விரட்டியடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். இதற்கு அவர்கள் தேச பக்தர்கள் அவர்கள் மீது பொலிஸார் நடந்து கொண்ட முறை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ட்ரம்ப் பொலிசாருக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தார்.

ஒரு வேளை மைக் பம்பியோ இலங்கையில் அப்படியான வம்புகளையும் வன்முறைகளையும் பண்ணி பலர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கின்றார்கள் என்று கதையை காதில் மெதுவாக எவராவது போட்டுவிட்டார்களோ என்னவோ தெரியாது. அதனால்தான் என்னவோ ட்ரம்ப் கடைசி நேரம்வரை வம்பு பண்ணிக் கொண்டிருந்தாரோ தெரியாது.! அமெரிக்கத் தேர்தல் வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் 1870களில் நடந்திருக்கின்றது. அந்த வன்முறையில் பெரும் எண்ணிக்கையானவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அப்போது தேர்தல் முடிவுகள் வர நான்கு மாதங்கள் வரை சென்றிருக்கின்றது.

இந்த அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று ரஸ்யா விரும்பியது அது இதனைப் பகிரங்கமாக வெளியிடாத போதிலும் அதன் எதிர்பார்ப்பு அப்படித்தான் இருந்தது. இதற்கு என்ன காரணம் என்றால் ட்ரம்ப் நிருவாகத்தில் அமெரிக்க மிகவும் பலயீனமான நிலையில் இருக்கின்றது. உலகில் பல நாடுகளுடன் அமெரிக்க வம்புகளில் மாட்டிக் கொண்டு தனது இமேஜை கெடுத்துக் கொண்டிருக்கின்றது. ட்ரம்ப் போன்ற ஒருவர் தெடர்ந்தும் பதவியில் இருந்தால் இராணுவ பொருளாதார ரீதியில் அமெரிக்க மேலும் பலயீனம் அடையும் இந்த இடைவெளியில் தனது வலிமையை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்பது புட்டின் எதிர்பார்ப்பு. முன்பு ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுடன் தொப்புல் கொடி போன்ற ஒரு உறவு இப்போது அது நன்றபாக நீர் கெட்டிருக்கின்றது. துருக்கி பாகிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்காவின் நல்ல நண்பர்கள் ஆனால் இப்போது அவர்களுக்கும் ரஸ்யாவுடன் நெருக்கமான உறவு.

கடந்த தேர்தலில் ட்ரம்ப் பதவிக்கு வர ரஸ்யா ஒத்துழைத்தது என்ற குற்றச்சாட்டு இன்னும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரஸ்யாவைப் போன்று சீனாவுக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்தாலும் அது சற்று வேறுவிதமாக யோசிக்கின்றது. அதற்குக் காரணம் ட்ரம்ப் பெரும் வம்பனாகவும் தனக்குத் தொல்லை கொடுக்கின்ற ஆளாகவும் இருப்பதானால் அரசியல் அரங்கில் ட்ரம்ப் தொடர்ந்து நிலைத்தால் அடுத்து வரும் நான்கு வருடங்களுக்கும் அவரால் தனக்கு பெரும் தொல்லைகள் உலக அரங்கில் எதிர் நோக்க வேண்டி வரும் என்று அது கருதுகின்றது. பைடன் சீனாவுடன் முட்டி மோத விரும்ப வில்லை. இந்தியா இந்த விவகாரத்தில் மத்திய போக்குடன் இருந்தாலும் ட்ரம்ப் வெற்றியை அது எதிர்பார்த்திருந்தது.

பொதுவாக இந்திய மக்களின் விருப்பு அப்படித்ததான் இருந்தது. இன்னும் பலர் தனது உறவுக்காரி ஒருத்தி அங்கு துணை ஜனாதிபதியாகும் நிலை இருப்பதால் பைடனுக்கு ஆதரவாக இருந்தனர். குறிப்பாக தமிழ் நாட்டில் கமலா ஹரிஸ் வெற்றியில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார்கள் அவள் ஒரு தமிழச்சி என்ற இன உறவுகாரணமாக அப்படி ஒரு நிலை இருந்தது. அவர் எந்தளவு இனத்துக்காக செயல்படுவார் என்பது எமக்குத் தெரியாது. பொதுவாக ஓப்பீட்டளவில் இந்தியாவில் ட்ரம்ப் ஆதரவுதான் மேலோங்கி இருந்தது. காரணம் சீனாவுக்கு எதிரான ட்ரம்ப் நிலைப்பாடு இதற்கு முக்கிய காரணம். ஆனால் இந்திய அரசியல் தலைவர்கள் மிகவும் நிதான போக்குடன் நின்று கொண்டனர். ஜோ பைடன் சீனாவுடன் மோதிக் கொண்டு போகாது அமெரிக்காவை கட்டியெழுப்புகின்ற திட்டம் அவரிடத்தில் இருக்கின்றது. சீனா இந்தியாவுக்குத் தொல்லைகளைத் தொடர்ந்து கொடுப்பதால் ட்ரம்ப் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தால் நல்லது என்ற கணக்கு அது.

பாகிஸ்தானுக்கும் ஜோ பைடனுக்கும் நெருக்கமான உறவு காணப்படுகின்றது. பல வருடங்களுக்கு முன்னர் ப hகிஸ்தானுக்கு மிகவும் ஒத்துழைப்பு வழங்கியதற்க்காக மிகவும் உயர் மட்ட் விருதை அவருக்கு சர்தாரி பிரதமராக இருந்த காலத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. அது வரை பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த உதவித் தொகை ஜோ பைடன் சிபார்சுக் காரணமா நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு நன்றிக் கடனாகத் தான் மிக உயரிய விருது ஜோ பைடனுக்கு அப்போது வழங்கப்பட்டிருக்கின்றது.

இப்போது ஈரான் நிலைப்பாடு என்ன என்று பார்ப்போம். அவர்கள் ஒருவகையில் ட்ரம்புக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளார்கள். ஈரானுக்கு எதிரான எல்லை கடந்த கட்டுப்பாடுகளினால் அவர்கள் அதற்கு முகம் கொடுக்க கற்றுக் கொண்டுவிட்டார்கள். மறுபுறத்தில் நாட்டின் ஆயுத தேவைகளில் கணிசமான அளவை தானே உற்பத்தி செய்து கொள்ளும் திறனை வளர்த்துக் கொண்டார்கள். இதே நேரம் ஈரானுடன் செய்து கொண்ட சர்வதேச உடன்பாடுகளை மதித்து நடக்க வேண்டும் என்று பைடன் கருதுகின்றார். அதனால் அங்கு பைடன் வெற்றி பெறுவதில் ஈரானியர்கள் விருப்புடையவர்களாக இருந்திருக்கின்றார்கள். என்றாலும் ஈரான் ஆன்மீகத் தலைவர் அங்கு யார் பதவிக்கு வருகின்றார்கள் என்பது எமக்கு முக்கியமல்ல அவர் எப்படி நடந்து கொள்கின்றார் என்பதுதான் எமக்கு முக்கியம் என்று தெரிவித்திருக்கின்றார்கள்.

இஸ்ரவேல் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது. அமெரிக்காவில் உள்ள யூதர்களில் 94 சதவீதமானவர்கள் ட்ரம்புக்கு வாக்களித்திருந்தனர். மேலும் ட்ரம்ப் தேர்தல் பணிக்காக யூத தனவந்தர்கள் பெரும் தெகையான பணத்தை செலவு செய்திருந்தனர். அமெரிக்காவில் இருக்கின்ற கறுப்பினத்தவர்கள் 85 சதவீதமானவர்களும் அங்குள்ள முஸ்லிம்களும் அதற்கு சமான வீதத்தில் பைடனுக்கு வாக்களித்திருந்தனர். அமெரிக்காவிலுள்ள ஏனைய வெளி நாட்டுக்காரர்களின் வாக்களிப்பு இப்படிதான் அமைந்திருந்தது.

தேர்தலுக்கு முன்பிருந்தே ட்ரம்ப் தனது தோல்வி பற்றி தெரிந்திருந்தார். அதனால் தேர்தலில் ஊழல் நடக்க இருப்பது பற்றியும் தேர்தலில் தோற்றுப் போனாலும் அதிகாரத்தைக் கைமாற்ற மாட்டேன் என்றும் மற்றுமொரு இடத்தில் அமெரிக்காவிலிருந்து ஓடிப் போய்விடுவேன் என்றும் முன்னுக்குப்பின் முறனாகப் பேசிக் கொண்டிருந்தார். தேர்தல் எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போதே தான் வெற்றி பெற்றுவிட்டடேன் என்று கூறி ஆதரவாலர்களை வீதியில் இறக்கி வன்முறையில் ஈடுபடுத்தி வந்தார்.

அஞ்சல் வாக்குகள் கள்ளத் தனமான வாக்குகள் அதனை எண்ணக் கூடுhது என்று வாக்கு எண்ணும் நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்த குண்டர்களை அனுப்பி வைத்தார். எந்த ஆதரங்களும் இல்லாது தேர்தல் மோசடி நடந்தது என்று நீதிமன்றங்களில் வாழக்குகளைத் தாக்கல் செய்தார். தனக்கு சாதகமான தொலைக் காட்சிகளின் ஊடாக தனது தேர்தல் வெற்றி பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்படி இவர் எல்லை மீறி நடந்து கொண்ட ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஜனாதிபதி என்று கூடப் பாராது ட்ரம்ப் பேச்சை இடை நடுவில் நிறுத்தி விட்டார்கள். அவர் ஆட்சி காலத்தில் முன்பு எப்போதும் இப்படி நடந்தது கிடையாது.

அவர் ஏன் அஞ்சல் வாக்குகளுக்கு அஞ்சினார் என்பதனை இப்போது சற்றுப் பார்ப்போம். கொரோனா காரணமாக மக்கள் தனிமைப் பட்டிருப்பது அவசியம் என்று வலியுருத்தப்படுகின்றது. அதனால் தனது ஆதரவாலர்களுக்கு ஜோ பைடன் அஞ்சல் மூலம் வாக்களிக்குமாறு கேட்டிருந்தார். அதனால் அது பெரும்பாலும் பைடனுக்கு சாhகமாக இருக்கும். எனவே அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும் போது முன்னணியில் இருக்கின்ற பல இடங்களில் தனக்குப் பாதகமான நிலைவரும் என்பதனை முன் கூட்டியே அறிந்திருந்த ட்ரம்ப் இது மோசடியான வாக்குகள் அதனை எண்ண வேண்டாம் என்று ஒப்பாறி வைக்கத் துவங்கினார். அத்துடன். சில இடங்களில் நீதி மன்றத்திலும் வழக்குகளைத் பதிவு செய்திருந்தார் ஆனால் இதற்கு எந்த அடிப்படை ஆதாரங்களும் கிடையாது என்று நீதி மன்றங்கள் அஞ்சல் வாக்குகளi எண்ண முடியும் என்று தீர்ப்பு வழங்கியது.

குறிப்பிட்ட்டது போல் அஞ்சல் வாக்குகள் எண்ணப் படுகின்றபோது அதில் 70 சதவீதமான வாக்குகள் பைடனுக்குச் சாதகமாக அமைந்தது. அதனால் பல மாநிலங்களின் முடிவுகளில் ட்ரம்ப் துவக்கத்தில் முன்னணியில் இருந்தாலும் தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்ட போது ட்ரம்ப் தோல்வி உறுதி செய்யப்பட்டது. இதில் நமக்குள்ள ஆச்சர்யம் என்ன என்றால் இப்படிப்பட்ட ஒரு வன்முறைக்காரனுக்கு மக்கள் இந்தளவு வாக்குகளை வழங்கி இருக்கின்றார்கள் என்பதுதான். எனவே அமெரிக்க மக்கள் பன்பானவர்கள் படித்தவர்கள் நாகரிகமானவர்கள் என்று உலகம் நம்பிக் கொண்டிருப்பது ஒரு தவறான கருத்தாக இருந்திருக்கின்றது. அமெரிக்க அதிபரின் கடந்த காலச் செயல்பாடுகள் தேர்தல் காலங்களில் அவர் நடந்து கொண்ட முறை அமெரிக்க பற்றிய இமேஜை மக்கள் மத்தில் இடித்து வீழ்த்தி இருக்கின்றது. ட்ரம்ப் மீது இருந்த வெறுப்பே இந்தளவு வரலாற்று வெற்றியை பைடனுக்குக் கொடுத்து இருக்கின்றது.

இது வரை ட்ரம்ப்புக்கு எதிராக 3500 வழக்குகள் கிடப்பில் இருக்கின்றது. அவர் பதவியில் இருந்த காரணத்தால் அவை விசாரிக்கப்பட வில்லை. இப்போது அவை எல்லாம் தற்போது கிளரி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே நமது நாட்டுக்கு அமெரிக்காவுக்கும் இது விடயத்தில் பெரிய வித்தியாசம் இல்லை போல்தான் தெரிகின்றது. இதில் 26 பெண்கள் பாலியல் வன்முறை தொடர்பானவை. இரண்டு விவாகரத்து வழக்குகளும், கடந்த தேர்தலில் ஒரு மனைவிக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டெலர்கள் லஞ்சம் கொடுத்து அவர் ஊடகங்கள் முன் வருவதை ட்ரம்ப் தடுத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர நிதி மோசடி. வழக்குகளை மூடி வைத்திருந்த குற்ற்ச்சாட்டுகள், வரி ஏமாற்று, ரஸ்யா இணைய உளவாளிகளைத் துணைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டு. குடும்ப சொத்துக்கள் அபகரிப்பு, வாக்குச் சாவடிகள் உடைப்பு வன்முறை, வன்மறைப் பேச்சுக்கள் பெண்களை அவமதித்தல், இனப்பகுபாடுகளை வெளிப்படுத்தியமை போன்று விவகாரங்கள் இதில் அடங்குகின்றது.

அமெரிக்கத் தேர்தல் சற்றுவித்தியாசமனது அங்கு பெரும்பான்மை வாக்குகளுக்கு முக்கியத்துவம் இல்லை. மாநிலங்கள் யார் கைப்பற்றுகின்றார்களோ அவர்கள்தான் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பையும் பெறுகின்றார்கள். குடித் தொகைக்கு ஏற்பவே மாநிலங்களுக்குப் பிரதி நித்தித்துவம் வழங்கப்பட்டிருக்கின்றது. மொத்த வாக்குகள் அடிப்படையில் கடந்த தேர்தலில் ட்ரம்ப் தோல்வி அடைந்திருந்தார் ஹிலரி 20 மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்றாலும் அவரால் வெள்ளை மாளிகைக்குப் போக முடியவில்லை.

தற்போது புதிய ஜனாதிபதியாகி இருக்கும் பைடன் முன் மாnhரும் சவால்கள் இருக்கின்றது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் 14.5 வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வர இருக்கின்ற நிதி ஆண்டில் 3680 கோடி பில்லியன் டலர்கள் துண்டு விழும் தொகையாக இருக்கின்றது. கொரோனா அட்டகாசம் அமெரிக்காவில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றது. பாரக் ஓபாமவுக்கு இருமுறை துணை ஜனாதிபதிவியாக இருந்து அரசியல் ரீதியில் நன்கு பக்குவப்பட்ட ஒரு மனிதன். தனிப்பட்ட ரீதியில் ஜே பைடனின் வாழ்வு மிகுவும் சோகங்களும் துயரங்களும் நிரம்பியது.

இப்போது நமது துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் பற்றி சற்றுப் பார்ப்போம் இவரது தந்தை ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர் அவர் டொனால்ட் ஹாரிஸ். இதனால்தான் இவர் கறுப்பினம் பெண் என தன்னை அழைத்துக் கொள்கின்றார். அதில் பெருமையும் கொள்கின்றார். தாய் இந்திய தமிழ் நாடு திருவாவூர் துளசேத்திர புரத்தைச் சேர்ந்தவர். தாய் சியாமலா கோபலன். அவர் ஒரு தலை சிறந்த மார்புப் புற்று நோய் வைத்திய நிபுணர். இதனால் இன்றும் அவருக்க தமிழகத்தில் பல இரத்த உறவுகள் இருக்கின்றனர்.

1964 அக்தோபர் 20 பிறந்த கமலா ஹவாட் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியப் பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர். அவரது கணவர் ஒரு யூத சமூகத்தைச் சேர்ந்தவர். காதல் திருமனம். ஜனநாயக் கட்சி வேட்பாளர் தேர்தலில் கமலா பைடனுடன் போட்டி போட்டார். அதில் அவர் தோற்றுப்போனாலும் அவரது திறமை காரணமாக பைடன் அவரைத் தனது துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிமுகம் செய்தாhர். ஜோ பைடன் வென்றதால் அவர் இன்று அமெரிக்க துணை ஜனாதிபதி. அவர் எதிகாலத்தில் ஜனாதிபதியாகவும் வரும் வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பைடனுக்கும் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகள் பற்றிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவரது முப்பாட்டனர் பலர் இந்தியாவில் வாழ்ந்திருக்கின்றனர் என்பதுதான் அந்தக் கதைகள்.

2021 ஜனவாரி 10ம் திகதி புதிய ஜனாதிபதி பதவியேற்க வேண்டி இருக்கின்றது. அதற்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேலான காலம் இருக்கின்றது. இந்த இடைவெளிக்குள் ஜனாதிபதி ட்ரம்ப் எதாவது அட்டகாசங்களைப் பண்ணலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு பரவலாக இருக்கின்றது. ஈரான் மீது மட்டுப்படுத்தப் பட்ட ஒரு தாக்குதலை அவர் மேற்கொள்ள இடமிருக்கின்றது என்று பல அமெரிக்க செய்தித்தாள்கள் சொல்லி வருகின்றன. இதற்கு அவர்கள் கூறுகின்ற காரணம் தற்போதய பாதுகாப்புச் செயலாளரை அவர் பதவி நீக்கி இருக்கின்றார். கடந்த காலங்களில் ஈரான் மீது பல தடவைகள் நடவடிக்கை எடுக்க ட்ரம்ப் நிருவாகம் முயன்ற போது அவர் அதனைத் தடுத்திருக்கின்றார். எனவே அவரை பதவி நீக்கம் செய்த விட்டு புதியவர் ஒருவரை ட்ரம்ப் பாதுகாப்புச் செயலாளராக நியமித்திருப்பதால் இந்த சந்தேகம் எழுந்து இருக்கின்றது.

பொதுவாக அமெரிக்காவில் வெளியுறவுக் கொள்கை யார் ஜனாதிபதியானாலும் மாற்றம் அடையாது என்ற ஒரு கருத்து இருந்தது. ஆனால் இந்த முறை இது சற்று வித்தியாசமாக இருக்கும் என்பதுதான் எமது கணிப்பு. கடந்த ஜனாதிபதிகளைப் போல் அல்லாமல் இந்த முறை ட்ரம்ப் உலக அரங்கில் பல மாற்றங்களை தன்னிச்சசையாகச் செய்து அமெரிக்கா வெளியுறவுக் கொள்கையில் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி இருக்கின்றார் அதனைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பு புதிய ஜனாதிபதிக்கு இருக்கின்றது. மேலும் அமெரிக்க பற்றிய உலக மக்களிடத்தில் மீண்டும் நல்லெண்ணத்தை ஏற்படுத்த வேண்டிய தேவையும் இப்போது புதிய ஜனாதிபதிக்கு இருக்கின்றது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் போன்ற நிறுவனங்களுக்கு கொடுத்து வந்த உதவிகளை ட்ரம்ப் கடுமையாகக் குறைத்து இருக்கின்றார். இவற்றை சரி செய்ய வேண்டி பொறுப்பும் ஜோ பைடனுக்கு இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

கொரோனா வைத்தியர் கைவிரிப்பு! ஜனாதிபதிக்கு ஓர் பகிரங்கக் கடிதம்!

Next Story

2021 வரவும் செலவும் புரட்சிகரமானது போலித் தகவல்