தன்னை ஒரு சமூக ஆர்வலராக காட்டிக் கொண்டு, நாட்டில் பல்வேறு கலவரங்கள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் டேன் பிரியசாத் நேற்றிரவு நடந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்.
முதலில் அவர் இறந்துவிட்டதாக நேற்றிரவு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்திய போதிலும், அது தவறானது என்றும், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்
ராஜபக்ச குடும்பம்
இருப்பினும், டேன் பிரியசாத் இன்று அதிகாலை இறந்துவிட்டார் என்பதை பொலிஸார் இன்று காலை உறுதிப்படுத்தினர்.

இதற்கிடையில், உயிரிழந்தவர் தேசிய வீரன் அல்ல என்றும் மாறாக அவர் மற்றொரு குற்றவாளி என்றும் பொதுமக்கள் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
உண்மையில், டேன் பிரியசாத் என்ற நபர், நாட்டில் மத வெறுப்பைத் தூண்டுவதற்கும் மோதல்களை உருவாக்குவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்றும் ராஜபக்ச குடும்பத்தின் ஒரு உதவியாளர் என்றும் பல கருத்துக்கள் உள்ளன.
இந்நிலையில், டேன் பிரியசாத்தின் கொலையின் பின்னணியில் ஒரு அரசியல் பலம் பொருந்திய ராஜபக்ச இருப்பதாக பலர் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களைத் முன்வைத்த வண்ணம் உள்ளனர்.
“கோளையா”
அந்தவகையில், ராஜபக்ச குடும்பத்திற்கு ஒரு முக்கிய நபராக, பேச்சு வழக்கில் “கோளையா” என்று, அதாவது, உதவியாளர் என்று அழைக்கப்படும் டேன் பிரியசாத் எதற்காக ராஜபக்ச குடும்பத்தினராலேயே கொல்லப்பட வேண்டும் என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

மேலும், ஈஸ்டர் தாக்குதல்களின் மூளையாக இருந்தவர்களுக்கு டேன் பிரியசாத் மிக நெருக்கமான வகையில் உதவியிருக்கலாம் என்ற சந்தேகம் பலர் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நாட்டில் நடத்தப்பட்ட கொடூரமான சம்பவங்களில் ஒன்றாக, 6 வருடங்களை கடந்த ஈஸ்டர் தாக்குதல்கள் இருக்கின்றன.
ஈஸ்டர் தாக்குதல்கள்
பல வருடங்களாக இந்த தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கண்டறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவது என்பது கடந்த கால அரசாங்கங்களில் இருந்து தற்போது வரை நீண்ட காத்திருப்பாக இருக்கின்றது.

இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி அம்பலப்படுத்தப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், அவர்கள் இன்னும் அது குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டடிய விடயம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மௌனிக்கப்பட்ட உண்மைகள்
அவ்வாறிருக்கையில், மறுபக்கம், ஈஸ்டர் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் இந்த நாட்களில் சிக்கலில் உள்ளார்கள் எனலாம். ஏனென்றால் பல முக்கிய சாட்சியங்கள் வெளிவர தொடங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கு மத்தியில், டேன் பிரியசாத், ஈஸ்டர் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே அவரை தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரின் விசாரணைகளின் போது அவர் கைது செய்யப்பட்டிருந்தால், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான வலுவான ஆதாரங்களை அவர் வெளிப்படுத்தியிருப்பார் என்பதை நன்கு அறிந்த சில குழுவினரால் இது செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

எனவே, இது ராஜபக்சக்களின் திட்டமிட்ட செயல் என்றும் அவர் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் உண்மைகளை வெளிப்படுத்தி விடுவார் என்ற அச்சத்திலும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, சமூக ஊடகங்களில் தான் செய்த குற்றங்களுக்காகவே டேன் பிரியசாத் தற்போது இயற்கையால் தண்டிக்கப்பட்டுள்ளார் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், டேன் பிரியசாத்தின் மரணத்தின் மூலம் ராஜபக்ச குடும்பம், வலுவான ஆதாரங்களை மௌனமாக்கியுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





