பிரித்தானிய இளவரசி டயானாவுடன் சேர்ந்து உயிரிழந்த அவரின் காதலர் Dodi Al Fayed.திருமணமான சில மாதங்களில் மனைவியை விவாகரத்து செய்தவர் Dodi.
டயானாவுடன் சேர்ந்து கார் விபத்தில் உயிரிழந்த அவர் காதலர் குறித்து பலருக்கும் தெரியாத தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய இளவரசி டயானா கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அந்த சமயத்தில் டயனாவுடன் அவரது காதலரான Dodi Al Fayedம் உடனிருந்தார்.
இந்த விபத்தில் டயானா, Dodi Al Fayed மற்றும் கார் ஓட்டுனர் ஹென்றி பவுல் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். தங்கள் அகால மரணத்திற்கு முன் Dodiம் டயானாவும், சில மாதங்கள் மட்டுமே டேட்டிங் செய்து, சில நாட்களை மட்டுமே ஒன்றாகக் கழித்தார்கள்.
யார் இந்த Dodi Al Fayed?
எகிப்தை சேர்ந்த Dodi பெரும் கோடீஸ்வரர் Mohamed Al-Fayedன் மூத்த மகன் ஆவார். அப்போதே Mohamedன் சொத்து மதிப்பு $1.87 பில்லியனாக இருந்தது. என்ன தான் எகிப்தில் பிறந்தாலும் 1960களில் குடும்பத்தாருடன் லண்டனுக்கு அவர் குடிபெயர்ந்துவிட்டார். Dodi பிரித்தானியாவில் உள்ள Sandhurst military academyல் பயிற்சி பெற்றவர், இங்கு தான் பின்னாளில் இளவரசர் வில்லியம், ஹரியும் பயிற்சி பெற்றனர்.
Dodi கடந்த 1986ல் Suzanne Gregard என்ற மொடலை திருமணம் செய்த நிலையில் சில மாதங்களிலேயே அவரை விவாகரத்து செய்தார்.
சார்லஸுடன் வாழும் போதே முதன் முதலில் Dodi-ஐ டயானா சந்தித்தார். அதன்படி 1986ல் இருவரும் சந்தித்தனர், விளையாட்டு போட்டியின் போது இருவரும் சந்தித்தாலும் பெரிதாக பேசி கொள்ளவில்லை.
பின்னாளில் தான் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 1997ல் டயானாவும், Dodiம் முத்தம் கொடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகி உலகம் முழுவதிலும் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தது.
இதன்பின்னர் இருவரும் தெற்கு பிரான்ஸ் மற்றும் Sardinia தீவில் நேரத்தை கழித்தனர். அதன்பிறகு பாரீஸுக்கு திரும்பிய போதே இருவரும் உயிரிழந்தனர்.