‘ஞான’ அறிக்கை குப்பையில்!

-நஜீப்-

காணாமல் போயிருந்த ஞானத்தார் அண்மையில் இரு நிகழ்வுகளில் தலைகாட்டி இருந்தார். ஒன்று ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பான அவரது சிபார்சுகளை ஜனாதிபதிக்குக் கையளிக்கின்ற சம்பவம். அடுத்தது வரிய மக்களுக்கு சில உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு.

இதில் அரசியல் ரீதியில் ஒரு நாடு ஒரு சட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பேரினத்தவர்களை உசுப்பேற்றித்தான் இந்த ஒரு நாடு ஒரு சட்டம் பற்றிய கண்டுபிடிப்பு சந்தைக்கு விடப்பட்டது.

ஆனால் வருவதாக சொல்கின்ற 22 ல் அவரது சிபார்சுகளில் ஒரு வரியாவது உள்வாங்கப்படவில்லை. தற்போது யாரையொல்லாம் பயங்கரவாதிகள் என்று இவர்கள் முத்திரை குத்தினார்களோ அவர்களின் கலடியில் மண்டியிடும் வேலைதான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது.

கட்டார் நாட்டு ‘செரிட்டி’ நிதியம் இஸ்லாமிய பயங்கரவாதத்தை இங்கு ஊக்குவிக்கின்றது என்று அரசு அதனைத் தடை செய்திருந்தது. பெற்றோலிய நெருக்கடியில் அரசு உதவி கேட்டுப் போன இடத்தில் அவர்கள் இதனை நினைவுபடுத்தி இருக்கின்றார்கள்.

அப்போது மஹிந்த இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தனக்குத் தெரியாது என்று கைவிரித்தாராம். குவைத், சவுதி கூட இங்கு முஸ்லிம்களுக்குச் செய்த அநீயாயங்களைக் காட்டி இந்த ஆட்சியாளர் இருக்கும்வரை எதுவும் கிடையாது என்று கைவிரித்து விட்டதாம்

 நன்றி:10.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

USA பிளாய்டை கொன்ற போலீஸ் அதிகாரிக்கு மேலும் 21 ஆண்டுகள் சிறை

Next Story

கேட்டா ரணில் தலைமறைவு