ஜொனி சரணடைந்தது எதற்கு!

நஜீப்

நன்றி:11.01.2025 ஞாயிறு தினக்குரல்

தன்னையும் பிள்ளைகளையும் கைது செய்து சிறையில் தள்ளியது அப்பட்டமான அரசியல் பலிவாங்கல். இப்படி கூறிவிட்டே முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் உள்ளே போனார்.

Welcome to Lanka Sathosa

ஆனால் அதிகாரம் மிக்க அமைச்சுப் பொறுப்பில் இருந்த போது சதோச லொறிகளைத் தனது சாராய வியாபாரத்தில் ஈடுபடுத்தி அதற்கு எரிபொருளையும் அரச செலவில் பாவித்தது.

தவறான நியமனங்களை வழங்கியது. ஊழியர்களை சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியது. தனது பிள்ளைகளுக்கு உயர் பதவிகளை வழங்கி தனது ஊழல் வியாபாரத்தில் அவர்களை பங்குதாரிகளாக்கிக் கொண்டது. சட்ட விரோத எதனோல் இறக்குமதி. நிதி மோசடி என்று டசன் கணக்கில் இதில் குற்றச்சாட்டுக்கள்.

ஐதேக. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது மஹிந்த ராஜபக்ஸாவை கொலை செய்ய (2009.02.28) முயற்சித்ததாக இவர் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள்.

இது அம்பலமாகியதால் பல்டியடித்து ராஜபக்ஸாக்களிடம் பாவமன்னிப்புத்தேடி சரணடைந்தார் ஜொனி. ஆனால் அது பற்றிய பதிவுகள் இன்றும் பொலிஸில்.

Previous Story

IRAN போராட்டம் அமெரிக்கா, இஸ்ரேல் சதியா?

Next Story

கப்பல் சட்டதிட்டங்கள் பார்ப்போம்!