அரசியல் நகைச்சுவை
01.NPP காரர்கள் MAY தினத்துக்கு கொழும்பு வரும் போதும் நீங்கள் ஊர்களுக்குள் நுழைந்து அவற்றைக் கைப்பற்றிக் கொள்ளுங்கள்! அப்போது எங்களுக்குத்தான் தேர்தலில் வெற்றி -ரணில்
02.அரசியல் துரோகங்களுக்கான ஒஸ்கர் விருதுக்கு மு.கா.ஹக்கீம் சிபார்சாம்- போட்டிக்கு வேறு எவருமே இல்லையாம்.!
03.திலித் ஜயவீர கட்சியிலும் முஸ்லிம் வேட்பாளர்காளம்! களனி கருடா சௌக்கியமா என்றுதான் அவர்களிடம் கேட்கத் தோன்றுகின்றது.
04.இந்த முறை ஜின்கள் மு.கா.வுக்கு ஓட்டுப்போட வருமாம். -வேட்பளர் முழக்கம். அப்போ… ஜின்கள் பட்டியலைத் தயாரித்தது மு.கா.! ஆணையாளரே உங்கள் வாக்காளர் பட்டியலை மீண்டும் ஒருமுறை பரிசோதித்துக் கொள்ளுங்கள். தன்னலத்துக்காக படைத்தவனுடன் இப்படியும் ஒரு விளையாட்டா!
05.நிந்தவூர் மஜித்புரம்: கணவன் மு.கா. ஹக்கீம் அணியில் மனைவி என்பிபி அனுர அணியிலும் வேட்பாளர்கள். தகவல் ACMC தாஹிர் எம்.பி.
06.பெரும்பான்மையான சபைகளை நாமே கைப்பற்றுவோம்- ஐதேக தலைவர் ரணில்
07.தலைவரின் தலையை விரைவாகப் சோதிக்க வேண்டும். கண்டியில் SJB அணியில் போட்டியிடும் SLMC வேட்பாளர் விலாசல்!
08 ரணில் திசம்பரில் ஜனாதிபதி இந்தப் புரட்சிகரமான நல்ல கனவைக் காண்பவர் வஜிர அபேவர்தன. இவர்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் 100 இலட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று சொல்லி இருந்தார்.
09.நான் உறுதி மொழி தருகின்றேன், திசம்பரில் சஜித் நிச்சயம் ஜனாதிபதியாகின்றார்.- கபீர் ஹாசீம்
10.இல்லை நான்தான் திசம்பரில் ஜனாதிபதி சீலாரத்ன தேரர். இந்த மனநோயாளிகளுக்கு வருகின்ற 6ம் திகதி குடி மக்கள் பதில் சொல்வார்கள்.
-நன்றி கார்டியன் நியூஸ் மேல் தின (01.05.2025) இசு





