ஜாமியுல் அஸ்ஹரில் ஒரு வரலாற்றுப் பதிவு

கண்டி-உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரியில் இன்று 12.07.2023ல் நடந்த குருளைச் சாரணீயர்களுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு, கல்லூரி அதிபர் அசாட்கான் அவர்களின் தலைமையில் மிகவும் வெற்றிகரமாக நடந்திருக்கின்றது.

இந்த நிகழ்வில் சாரணீய குழுமத்தைச் சேர்ந்த முக்கிய நிருவாகிகளும் இன்னும் பல சிறப்பு விருந்தினர்களும் சிறுவர்களது பெற்றோர்களும் கலந்து சிறப்பித்திருக்கின்றார்கள் என்று தெரிய வருகின்றது.

இந் நிகழ்வுகள் இரு கட்டமாக கல்லூரியில் நடைபெற்றிருக்கின்றது. குருளைச் சிறுவர் சிறுமியர்களுக்கான பதக்கம் அணிவிக்கின்ற நிகழ்வு கல்லூரி திறந்தவெளி அரங்கிலும் இரண்டாம் கட்ட அமர்வு கல்லூரி அஸ்ரஃப் கேட்போர் கூடத்திலும் நடைபெற்றிருக்கின்றது.

வைபவத்தின் போது 28 சிறுமியர்களுக்கும் 37 சிறுவர்களுக்கும் அங்கு பதக்கம் அணிவிக்கப்பட்டது. மொத்தமாக 65 சிறுவர்கள் இன்று குருளைச் சாரணீயத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குருளைச் சாரணீயத்தை ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரியில் அமைப்பதற்கு முன்னோடியாக செயல்பட்ட சிபாயா ரசீட் ஆசிரியை அவர்களுக்குப் பலவேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அன்னாருக்கு நாமும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இது தொடர்பான சிறப்புக் கட்டுரையொன்று விரைவில் வெளிவர இருக்கின்றது.

இந்த வைபவத்தில் நிருவாக ரீதியில் பின் வரும் அதிகாரிகள் கலந்து சிறப்பித்திருந்தனர்

Chief Guest

 Mr. I .Hasim

(Assistant Director of Education Wattegama Zone)

Special Guest

Major. Ranjith Rajapakse

(Principal of Ranabima Royal College Kandy)

Guest of honors

Mrs. Chandima Thilakarathna

(Assistant District Commissioners -Pathadhumbara)

Mrs. Manel Dissanayake

(Assistant District Commissioners –Teldeniya)

Mrs. Manel Liyanarathne

(Assistant District Commissioners –Gampol)

Mrs. Farook Udayar.

(Assistant Director of Education Wattegama Zone)

Previous Story

'அஸ்வெசும' மேன் முறையீடுகள்: அரசாங்க அறிவிப்பு

Next Story

அஜித் தோவல் முன் இந்திய முஸ்லிம்கள் குறித்து  இஸ்லாமிய அமைப்பின் தலைவர் பேசியது என்ன?