ஜம்மியத்துல் உலமா சபை விலை போய் விட்டதா?

தற்போது தேர்தல் சீசன் என்பதால் அரசியல்வாதிகள் காசை அல்லி வீசி வருகின்றார்கள். சராசரி மனிதர்கள் மட்டுமல்ல உலமாக்களும் காசை வாங்கிக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு கடைக்குப் போவதை நாம் பல இடங்களில் பார்த்து வந்திருக்கின்றோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனுரவுக்கு எதிராக அனுராதபுரத்தில் ஒரு நடாளுமன்ற உறுப்பினர் ஜம்மியத்துல் உலமாசபையின் கடிதத்தலைப்பை பாவித்து போலியா செய்தியை வெளியிட்டு அது பொலிஸ்வரை சென்ற செய்தியும் ஊடகங்களில் வந்தது.

ஆனால் இது கண்டிப் பக்கத்தில் இருந்த கிடைத்த ஒரு தகவல். ஜம்மியத்துல் உலமா சபையின் முக்கியமான தலைவர் ஒருவர் தனது அமைப்பில் உள்ளவர்களையும் பள்ளிப் நிருவாகிகளையும் அழைத்து குறிப்பிட்ட ஒரு அணியின் வேட்பாளர்களை ஆதரிப்பதற்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பின் பேரில் மேற்கொண்டு வருகின்றாராம்.

இது தொடர்பாக பல சந்திப்புக்களை அவர் கண்டியில் நடாத்தி இருப்பதாகவும் நமக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இப்படி காசுக்காக அமைப்பின் பெயரையும் பதவியையும் பாவித்து ஒரு முக்கியஸ்தர் செயல்படுவதை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிந்து வைத்திருக்கின்றதா? அல்லது கண்டும் காணாமலும் இருக்கின்றதா? வழக்கம் போல பச்சோந்தி நிலையா?

இந்த உலமா பற்றிய மேலும் பல தகவல்கள் விரைவில் வெளிவர இருப்பதையும் நாம் முஸ்லிம் சமூகத்துக்கு முன்கூட்டித் தெரியப்படுத்துகின்றோம். அத்துடன் ‘ரூமில்’ கூட்டம் போட்டு பேசிய விடயங்கள் எல்லாம் அப்போது பொதுமக்களுக்குத் தெரியவரும்.

தனி நபர்கள் யாரும் யாரையும் ஆதரிக்கலாம் அது அவர்களின் அரசியல் உரிமை. பொது அமைப்பின் பெயர் அதன் வழியாக வரும் பதவிகளை வைத்து கூட்டம் போடுவது பற்றித்தான் நாம் கேள்வி எழுப்புகின்றோம்.

மேலும் பள்ளிகளின் தலைவர்கள் என்ற பதவியை பெருமையாக நினைத்துக் கொண்டு ரணிலுக்குத்தான் வெற்றி என்ற நம்பி அவர் பின்னால் ஓடி மூக்குடைபட்டு இன்று என்பிபி. அதிகாரத்துக்கு வந்த பின்னர் அதன் தலைவர்கள் வருகின்ற இடங்களிலும் போய் நின்று அங்கும் போஸ் கொடுத்து சுகம் காணும் ஒரு மனநோயாளிகள் கூட்டமும் இந்த ஏற்பாட்டின் பின்னால் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

Previous Story

தலைவரும் பிள்ளைகளும் கதை இது!

Next Story

உயரத்தில் பறக்கும் செங்கொடி!