ஜனாதிபதித் தேர்தல்: மோதுகின்றவர்களும் முட்டிக் குனிவோரும்

      -நஜீப் பின் கபூர்-

Why Sheikh Hasina may not go to the UK and what's next for her and India | External Affairs Defence Security News - Business Standard

நமது ஜனாதிபதித் தேர்தல் பற்றிப் பேசுவதற்கு முன்னர் பங்காளதேசில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல வேண்டும் போல் தோன்றுகின்றது. அத்துடன் இலங்கையில் நடைபெற்ற அரசியல் சூழ்நிலைக்குச்  சமாந்திரமான ஒரு நிலை அங்கும் என்று ஒரு கருத்தும் இருக்கின்றது.

ஆனால் இங்கு பொருளாதர சீரழிவும் வங்குரோத்தும் அரசியல்வாதிகளின் ஆராஜகங்களும் எல்லை மீறிய கொள்ளை மோசடிகள் இருந்தது. அதற்கு ஆட்சியாளர்கள் காரணம் என்பதால் இங்கு அரசியல் தலைவர் விரட்டியடிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு நிலமை இதற்க முற்றிலும் மாற்றமானது. வறுமைப்பட்ட நாட்டை ஹசீனா அங்கு கட்டியெழுப்பி இருந்தார். அவர் ஒரு இரும்புப் பெண்ணாகத்தான் வங்க தேசத்தில் வலம் வந்து கொண்டிருந்தார்.

வங்காள விடுதலைச் சிங்கம் என்று பாசத்தோடு அழைக்கப்படுகின்ற முஜீபர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் டசன் கணக்கில் கொலை செய்யப்படுக்கின்ற போது ஹசீனா ஜேர்மனியில் இருந்ததால் அதிஸ்டவசமாக உயிர் பிழைத்திருந்தார். அந்த வரலாற்றுப் பின்னணியில் அரசியல் பிரவேசம் எடுத்தவர்தான் இந்த இரும்புப் பெண்.

Bangladesh PM Sheikh Hasina's resignation a 'possibility'; has left Dhaka residence for a 'safer location'

இப்படியாக மூன்று முறை அவர் அங்கு அரசியல் அதிகாரத்தில் அமர்ந்திருக்கின்றார். 1947ல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் விடுதலை பெற்ற நாடுதான் பாகிஸ்தான். அது இந்தியாவில் இருந்து பிரிந்து தனி நாடானது.

அப்போது அந்த நாடு மேற்குப் பாகிஸ்தான் கிழக்குப் பாகிஸ்தான் என்று இரு வௌ;வேறு நிலப்பரப்புக்களைக் கொண்ட இனப் பெரும்பான்மையை அடிப்படையான ஒரு நாடாக அமைந்தது. என்னதான் ஹசீனா வங்களாதேசத்துக்கு புத்துணர்ச்சி கொடுத்தாலும் அவர் அதிகாரத்தில் இருந்த போது ஒரு சார்வாதிகாரியாக செயல்பட்டிருக்கின்றார். எதிர்க் கட்சிகளை கடுமையாக அடக்கி வந்தார்.

இந்தப் பின்னணியில் தொழில் வாய்ப்புகள் போன்ற விடயங்களில் வங்க விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கணிசமான சலுகைகளை வழங்க சட்டம் இயற்றிய போதுதான்  இந்த போராட்டத்தை மாணவர்கள் துவங்கினார்கள்.  இறுதியில் வங்க விடுதலைப் போராட்டத்துக்குத் தலைமை தங்கிய முஜீபூர் ரஹ்மனின் பிரமாண்டமான சிலை தரையில் இழுத்துச் சரிக்கப்பட்டது-வீழ்த்தப்பட்டது.

இது சற்று ஜீரணிக்க கஷ;டான ஒரு நிகழ்வாக இருந்தாலும் ரஹ்மானுக்கு சிலை வடித்த விவகாரத்தில் முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிர்ப்தியில் இருந்தனர் என்பது இங்கு கவனிக்கத் தக்கது. ரஸ்யாவிலும் இப்படி ஒரு சம்பவம் அன்று நடந்தது.

இப்போது நமது ஜனாதிபதித் தேர்தல் களம் பற்றிப் பார்ப்போம். கோத்தாபே ராஜபக்ஸ இப்படி நாட்டைவிட்டு ஒடிய போது அதிகாரத்தைப் பறிகொடுத்த ராஜபக்ஸாக்கள் இங்கு  கபடத்தனமாக ஒரு ஆசனத்தை வைத்திருந்த ரணிலை பிரதமராக்கி பின்னர் அவரையே ஜனாதிபதியாக்கி தமது  கைப் பொம்மை அரசொன்றை இங்கு அமைத்துக் கொண்டனர்.

Namal calls for stronger bilateral ties with Japan - Sri Lanka

அதன் பின்னர் தமக்கு நாடாளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மை பலத்தை கொண்டு இன்று வரை ராஜபக்ஸாக்கள் மறைமுகமாக அதிகாரத்தை கையாண்டு வருகின்றார்கள் என்பதுதான் நமது கணக்கு. இப்போது ஜனாதிபதித் தேர்தல் என்ற நிலை வந்தபோது…

மொட்டுக் கட்சியிருக்கும் ராஜபக்ஸாக்களுக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறி, மொட்டுக் கட்சிக்குத் தெரியாமல் ரணில் தன்னை ஒரு சுயேட்சை வேட்பாளரா அறிமுகப்படுத்திக் கொண்டார். அதற்கான கட்டுப்பணத்தையும் செலுத்தினார். இது மொட்டுக் கட்சிக்கு குறிப்பாக ராஜபக்ஸாக்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.  தன்னை மீறி ரணில் பயணிக்க முனைவது அவர்களினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அத்துடன் தனது நாடாளுமனற் உறுப்பினர்கள் அனைவரையும் போல அவர் தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டார்.

SJB's Sajith Premadasa nominated for Sri Lanka's interim presidency: Report | World News - Hindustan Times

இந்த நிலையில் தமது வேட்பாளர் ஒருவர் வருவார் அவர் தம்மிக பெரேரா என்று சொல்லப்பட்டது. ஆனால் மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ரணிலுடன் போக தான் ஜனாதிபதித் வேட்பாளராக வருவதில் நடக்கப் போது ஏதுமில்லை. நிச்சயம் தோல்விதான் என்பதால் தம்மிக பெரேரா ஒதுங்கிக் கொண்டார்.

ஆளும் தரப்பில் இரு வேட்பாளர்கள் குறிப்பாக ரணில் போட்டிக்கு வந்தால் தான் ஒதுங்க்கி கொள்வதாகவும் அவர் முன்பே சொல்லி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. தனது தாயாரும் பிள்ளைகள் குடும்பத்தினர் தான் இப்படியான ஒரு அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு வருவதை அவர்கள் எதிர்க்கின்றார்கள்.

அத்துடன் தனது தயார் திடீரென்று நோய்வாய்பட்டதான் தனிப்பட்ட காரணங்களை சொல்லி அவர் ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டு தம்மிக ஒதுங்கிக் கொண்டார், என்றும் இல்லை அடுத்த பொதுத் தேர்தலில் சில ஆசனங்களையாவது பெற்று நாட்டில ஒரு அரசியல் தலைவராக தன்னை வளர்த்துக் கொள்ள நாமல் தம்மிக்கு ஆப்பு வைத்து விட்டார் என்றும் ஒரு கதை இருக்கின்றது.

இந்தப் பின்னணியில் நாமல் ராஜபக்ஸ வேட்பாளராக தற்போது வந்திருக்கின்றார்.  இப்போது தம்மைவிட்டு ரணிலுடன் போய் சேர்ந்தவர்கள் திருப்பி மீட்டெடுப்பதுதான் அவரது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. போனவர்கள் பலர் முன்கூட்டிச் சொல்லி இருந்தால் நாம் இப்படி ரணிலுடன் போய் இருக்க மாட்டோம, இப்போது என்ன சொய்வது என்று நாமல் தரப்புக்கு தகவல் கொடுத்திருக்கின்றார்கள்.

Interim order issued against Dayasiri's expulsion from SLFP

என்றாலும் ஒரு சிலரையாவது மீட்டெடுக்க முடியுமாக இருந்தால் அது அவருக்கு பக்க துணையாக அமையும். எப்படியும் இந்த தேர்தலில் தனக்கு வாய்ப்பில்லை என்பது அவர் நன்றாகத் தெரிந்துதான் வைத்திருக்கின்றார். அடுத்த பொதுத் தேர்தலில் மொட்டு அணிக்குத் தலைமை தாங்கி தன்னை ஒரு அரசியல்தலைவராக வளர்த்துக் கொள்ளத்தான் இப்போது நாமல் கடும் பிராயத்தனம் செய்து கொண்டிருக்கின்றார்.

2024 ஜனாதிபதித் தேர்தலில் பிரதான போட்டியாளர்கள் அணுர வும்  நாமலும் தான். மூன்றாம்  இடத்துக்கான போட்டியாளர்களாக நாமலும் ரணிலும்  என்ற நிலைதான் என்பது நமது கணிப்பாக இருக்கின்றது. தமிழர் தரப்பிலிருந்து ஒரு பொது வேட்பாளர் வருகின்றார் பெரும்பாலும் அவர் கிழக்கில் இருந்துதான்  வருகின்றார் என்று உறுதிப்படுத்தப்படுக்கின்றது.

நாம் இந்த கட்டுரையைத் தயாரிக்கின்ற போது அவர் அரியநேந்திரன் என்பது உறுதியாகி விட்டது. தமிழர்கள் உணர்வடன் இந்த பொது வேட்பாளரை ஏற்றுக் கொள்வார்களாக இருந்தால் அதிகமான வாக்குகளைப் பெறுகின்ற ஐந்து பேரில் அவரும் இருப்பார்.  கடைசியாக 2019ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

AKD calls for a new national awakening

ஆகக் குறைந்த எண்ணிக்கையானவர்கள் 1988 நடந்த தேர்தலில் போட்டியிட்டனர். அந்த எண்ணிக்கை ஆறு பேர் என்றிருந்தது. இந்தத் தொகை இந்த முறை ஒரு 50 என்ற அளவுக்குப் போகலாம். அல்லது தேர்தலைக் குழப்பியடிக்கின்ற நோக்கில் அந்த எண்ணிக்கை திட்டமிட்டு நூற்றுக் கணக்கில் என்ற அளவுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஆனால் எத்தனை ஆயிரம் வேட்பாளர்கள் அரங்குக்கு வந்தாலும் 2024 ஜனாதிபத் தேர்தல் களத்தில் மோதல் அணுரவுக்கும் சஜித்துக்கும்தான். அதில் பெரிய மாற்றங்கள் கிடையாது. மூன்றாம் இடத்துக்கு நாமலும் ரணிலும் போட்டி. மேலும் எந்த ஜம்பவான் வந்தாலும் அவர்களில் எவரும்  ஒரு இலட்சம் வாக்குகளைத் தொடுவது என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும் என்று நாம் அடித்துக் கூறுகின்றோம்.

சரத் பொன்சேக்கா, விஜேதாச போன்றவர்கள் நிலையும் இதுதான். தமிழ் தரப்பு வேட்பாளர் ஒரு ஐந்து இலட்சம் வாக்குகளைப் பெற முடியுமாக இருந்தால் அது தமிழினத்தின் பெரு வெற்றியாக அமையும்.

எனவே சில்லரை வேட்பாளர்களை பொது மக்கள்  பெரிதாகக் கண்டு கொள்ளத் தேவையில்லை என்பதுதான் எமது கருத்து. 2024 ஜனாதிபதித் தேர்தல் பல தடைகளைத் தாண்டி பயணித்துக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு என்ன நடந்தது என்பதும் நாம் பார்த்த செய்திகள்தான்.

தமக்கு வாய்ப்பில்லாத இந்தத் தேர்தலை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் செய்த அனைத்து ஏற்பாடுகளும் தோல்வியில் முடிய இப்போது குளிக்க மறுக்கின்ற நாயை ஆற்றுக்கு இழுத்துச் செல்வதைப்போல இந்தத் தேர்தலை ஆட்சியாளர்கள்; சந்திக்கின்றார்கள்.

அரசாங்கம் யாருடையது நாடாளுமன்றம் யாருடையது என்று புரியாத அளவுக்கு ஆட்சி போய்க் கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக மொட்டுக் கட்சி இப்போது வேட்பாளரை நிறுத்தி இருக்கின்றது. ஆனால் இப்படி மொட்டுக் கட்சி ரணிலுக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்தி இருப்பதானது இரு தரப்புக்களுக்கும் ஒரு தற்கொலை முயற்சி என்றுதான் கூற வேண்டும்

தன்னிச்சையாக ரணில் தன்னை சுயேட்சை வேட்பாளர் என்று சொல்லிக் கொண்டு களத்தில் குதித்ததால் மொட்டுக் கட்சியினருக்கு குறிப்பாக ராஜபக்ஸாக்களுக்கு இது ஒரு கௌரவப் பிரச்சனையாக அமைந்தது. அதனால்தான் இப்போது அவர்கள் தரப்பில் இருந்து ஒரு வேட்பாளர் என்ற நிலை வந்தது. மேலும் பிரதமர் வேட்பாளராக நாமலை அறிவிக்கும்படி கேட்டதற்கு ரணில் சம்மதிக்காமல் போனதும மொட்டுத் தரப்பு வேட்பளார் தவிர்க்க முடியாமல் போனது.

தனது மொட்டுத் தரப்பினர்இப்படி ஒரு தீர்மானத்துக்கு வருவதை மஹிந்த ராஜபக்ஸ  உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் வேறுவழியின்றி மொட்டு வேட்பாளர் மகன் நாமலை அவர் அங்கிகரிக்க வேண்டி வந்திருக்கின்றது. சிரந்தி மற்றும் அவரது இரு புதல்வர்கள் ராஜபக்சாக்களின் மூத்த சகோதரர் சாமல் ராஜபக்ஸ ஆகியோரும் இதில் உடன்பாடு கிடையாது. அவர்கள் ரணிலை ஆதரிக்கின்ற நிலைப்பாட்டில்தான் இருந்தார்கள்.

ஜனாதிபதிபத் தேர்தலுக்கான பொதுக் கூட்டங்களை நடாத்துகின்ற போது அடுத்த ஜனாதிபதி யார் என்பதனை ஊகிக்க முடியுமாக இருக்கும். அப்போது தமக்கு இதில் வாய்ப்பு கம்மி என்று வருகின்ற போது அதிகாரத்தில் இருந்தவர்கள் ஏதாவது அதிரடியான சதி-நாசகார வேலைகளைச் செய்து இறுதி நேரத்தில் கூட இந்தத் தேர்தலுக்கு ஆப்பு வைக்கின்ற முயற்சிகளில் இறங்க இடமிருக்கின்றது என்று நாம் எச்சரிக்கின்றோம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக துவக்கத்தில் நாம் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து ரணிலை வேட்பாளராக நிறுத்துவது பற்றி எமது நிலைப்பாட்டை கூறிய போது அதற்கு அவர் ஒப்புதல் வழங்கி உங்களுடைய வேலைகளைச் செய்து கொண்டு போங்கள் என்று அவர் எம்மை ஆசீர்வாதித்தும் இருந்தார். அதன் பின்னர் மொட்டுக் கட்சி செயற்குழு கூடி எமது தீர்மானத்துக்கு எதிராக கட்சியில் ஒரு வேட்பாளருக்கு அங்கிகாரம் பெற்றிருந்தது.

Interview with TNA MP Ariyanenthiran | Tamil Guardian

இதனால் இன்று நெருக்கடி-ஆளும் தரப்பில் இரண்டு வேட்பாளர்கள் என்று நிலை தோன்றியது  என்று பந்துல குனவர்தன கூறுகின்றார். எஸ்.பி. இறுதி நேரத்தில் நாமல் ஒதுங்கிக் கொள்வார் என்றும் ஒரு கதையை சொல்லி வருகின்றார்.எஸ்.பி. போன்றவர்களின் கதைக்கு சமூக அங்கிகாரம் இல்லை. அதனால் நாமும் அதனை ஒரு செய்தியாக எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

இப்போது டசன் கணக்கானவர்கள் ஜனாதிபதி தேர்தல் களத்தில் குதித்திருக்கின்றார்கள். இப்படி எத்தனை பேர் கோதாவுக்கு வந்தாலும் அது பற்றி மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. போட்டி இருவருக்கிடையில்தான் அடுத்தவர்களின்  செல்வாக்கை தேர்தலில் இந்த நாட்டுக் குடிமக்கள் கண்டு கொள்ள முடியும்.

இதற்கிடையில் சஜித் நாமல் சந்திப்பு பற்றி கதைகள் வருகின்றன. அப்படி ஒரு வாய்ப்பு தேர்தலுக்குப் பின்னர் இன்னும் விசாலமாகும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம். நாமல் கட்சியைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் வேட்பாளராக வந்திருக்க வேண்டும் என்று நாம் நம்புகின்றோம்.

இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு குழுவினர் வருகின்ற பொதுத் தேர்தலுக்கு தமது செல்வாக்கை அறிந்து கொண்டு அடுத்த நடவடிக்கை பற்றிய கணிப்புக்குத்தான் களத்துக்கு வந்திருக்கின்றார்கள். நாமலும் அதற்காகத்தான் களத்தில் குதித்திருக்கின்றார்கள்.

சஜித் தரப்பு கூட்டணியினர் கடந்த 8ம் திகதி சுகததாச அரங்கில் தம்மை ஆதரிக்கின்றவர்களை அழைத்து பாரிய பிரச்சாரத்துடன் அங்கு கூட்டணிக்கான கையொப்பங்களைப் போட்டு ஒரு விழாவை நடாத்தி முடித்திருக்கின்றார்கள்.

இதில் பெரும்பாலானவர்கள் அவரை கடந்த காலங்களில் ஆதரிக்கின்ற கட்சிக்காரர்களாகத்தான் இருந்தனர். என்றாலும் தயாசிரி மற்றும் டலஸ் போன்ற புதிய வருகைகள் ஓரளவுக்கு சஜித்துக்கு உந்து சக்தியைக் கொடுத்திருக்கின்றன என்பதனை மறுக்க முடியாது.  அதே நேரம் நாமலை வேட்பாளராக அறிவிக்கின்ற வைபத்தில் முக்கியமாக அங்கு நாமலுக்காக கோஷம் எழுப்பியவர்களில் பிரபல இன வன்முறையாளரும் ஞானசாரரின் சகாவுமான டயான் பிரசாத் அங்கு முக்கிய பங்கு வகித்ததை நாம் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

New role for Dullas!

அணுரகுமாரவுக்காக கட்டுப்பணம் செலுத்தச் சென்றவர்களுடன் அனைத்து இனங்களையும் பிரதிநித்துவம் செய்கின்ற சமூகங்களின் பிரதிநிதி அங்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

Previous Story

பிரிட்டனில் இனவாத எதிர்ப்பு பேரணிக்கு ஆதரவு

Next Story

ஜனாதிபதி தேர்தல்: தமிழ் பொது வேட்பாளரும் மலையக , முஸ்லிம் ஆதரவும்!