ஜனாதிபதி-விவசாயி முறுகல்

நஜீப்-

கடந்த வாரம் ஜனாதிபதி தெற்கே காலிக்குப் போய் இருக்கின்றார். அவர் அங்கிருந்தவர்களுடன் உரையாடப் போன இடத்தில் ஒரு சின்ன குழப்பம் நடந்திருக்கின்றது. அப்போது ஜனாதிபதி எங்களுக்கு பணத்துக்காவது உறத்தைத் தாருங்கள் என்று விவசாயிகள் கேட்டிருக்கின்றார்கள்.

அந்தநேரம் ஜனாதிபதி சற்று டென்சனாகி இரண்டு வருடங்களாக நான் உங்களுக்கு இலவசமாகத் உறம் தந்துதானே இருக்கின்றேன்…. தந்துதானே இருக்கின்றேன்…. என்று அங்கு சத்தம் போட்டிருக்கின்றார். ஆனால் தேயிலைத் தோட்டங்களுக்கு இலவசமாக உறம் வினியோகிக்கப்பட்தாக பதிவுகள் இல்லை என சமூக ஊடகங்கள் ஜனாதிபதியை விமர்சிக்கின்றன.

ஜனாதிபதி எங்கு போனாலும் அங்கு பேசும் இடங்களில் எப்படியோ ஒரு சருக்கல் நடந்து விடுகின்றது என்பதனை அவதானிக்க முடிகின்றது. எனவே ஜனாதிபதி ஜீ.ஆர். சற்று நிதானமாக நடந்து கொள்ள வேண்டி இருக்கின்றது என்று நாமும் ஒரு குறிப்பை இங்கு பதிலாம் என்று தோன்றுகின்றது.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 27.02.2022

Previous Story

நீதி கானல் நீராகப் போனது!

Next Story

உக்ரைன்:தகர்ந்த கனவு நொறுக்கிய "மிரியா" மக்கள் வேதனை