-நஜீப்-
நன்றி 10.08.2025 ஞாயிறு தினக்குரல்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாதுகாப்புக் குறித்து பலதரப்பினர் கவலை தெரிவிக்கின்றார்கள். அனுராவுக்கு வலதும் இடதுமாக நிற்ப்பவர்களே அவருக்கு விரோதமாக இருப்பது அண்மையில் தெரிந்தது.
யார் என்ன சொன்னாலும் அவரது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பவர்கள் உளவுத்துறை மற்றும் கட்சி மட்டத்தில் நன்கு ஆராயப்பட்டே அந்தப் பதவிகளுக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். யார் ஜனாதிபதியாக வந்தாலும் அந்த நியமனங்களுக்கான நியதி அப்படித்தான்.
அண்மையில் மாலைதீவுக்கு ஜனாதிபதியை வழியனுப்ப வந்தவர்கள் டசன் கணக்கில் வைன் போத்தல்களை வாங்க அங்கு சிலரது கடவுச் சீட்டுக்களைப் பெற்று அந்த சட்டவிரோத காரியத்தை பண்ணி இருக்கின்றார்கள்.
இதனை சாதாரணமாக எடுத்தக் கொள்ள முடியாது. இப்படியானவர்கள் தமது தன்னலத்துக்காக எந்தத் துரோகங்களையும் பண்ண முடியும்.! இதற்கு முன்னரும் இப்படித்தான் இவர்கள் வழக்கமாக நடந்து கொள்வதாகவும் தகவல்கள். அது பற்றியும் ஆராயப்படுகின்றதாம்.!





