ஜனாதிபதி தரப்புக்கு தனிப் பெரும்பான்மை! மூன்றில் இரண்டுக்கும் கட்சிகள் துணைக்கு!!

-நஜீப் பின் கபூர்-

நன்றி 10.11.2024 ஞாயிறு தினக்குரல்

கருத்துக்களை நடுநிலையாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக கள நிலவரத்தை மறைத்து 2024 பொதுத் தேர்தலில் கடுமை போட்டி என்றெல்லாம் நாங்கள் கருத்துக்களைச் சொல்லப் போவதில்லை. கடந்த காலங்களில் நமது கருத்துக்கள் எந்தளவுக்கு யதார்த்தமாக அமைந்திருந்தன என்பது எமது வாக்காளர்களுக்கு நன்றாகத் தெரியும். அந்தவகையில் இந்த பொதுத் தேர்தலில் நாம் சில வாரங்களுக்கு முன்னர் சொன்னது போல தனிக்குதிரை ஓட்டமாகத்தான் இருக்கின்றது.அதில் மாற்றங்கள் இல்லை. ஆனால் சில எதிர்க் கட்சித் தலைவர்கள் நமக்கு வெற்றி வாய்ப்பு இருக்கின்றது என்று கதை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இது தமது வாக்காளர்களை நம்பிக்கை ஊட்டித் தம்முடன் வைத்துக் கொள்கின்ற ஒரு முயற்சி – இராஜதந்திரமே அன்றி வேறு இல்லை. சமூகத்துக்கு இலகு கணிதம் சொல்லிக் கொடுத்த ஒரு அரசியல் தலைவர் இந்தத் தேர்தலில் தமது அணிக்குத்தான் வெற்றிவாயப்பு இருக்கின்றது. நாம் வெற்றி பெற்றாலும் ஜனாதிபதியுடன் சுமுகமாக பணிகளை முன்னெடுத்துச் சொல்ல முடியும் என்றெல்லாம் இப்போதும் பேசி வருகின்றார். இது போன்று இன்னும் பலரும் பேசி கொண்டிருக்கின்றார்கள்.

Newly elected Sri Lankan President Anura Kumara Dissanayake expected to distance himself from India

அதே போன்று ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத சீலரத்தன தேரர் கூட நாம் ஆட்சி அமைப்போம் அல்லது பலமான ஒரு எதிர்க் கட்சியாக இருப்போம் என்று தேர்தல் பரப்புரைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களது நம்பிக்கைகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டி இருக்கின்றது. ஆனால் இந்த மண்ணில் வாழ்கின்ற மக்களுக்கு – சற்றுச் சிந்திக்க முடியுமானவர்களுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பது நன்றாகத் தெரியும். நாளை முதல் தேர்தல் பரப்புரைகள் முடிவுக்கு வர இருக்கின்றது.

ஆளும் தரப்பு தனது தலைவர் ஜனாதிபதி அணுரகுமார தலைமையில் எல்லா மாவட்டங்களிலும் போல தனது தேர்தல் பரப்புரைகளை நடாத்தி முடிந்திருக்கின்றது. பிரதமர் ஹரிணி வேறு சுற்றுப்பயணங்களை மேற் கொண்டு பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்தக் கட்டுரையை தயாரரித்துக் கொண்டிருக்கும் நேரம் வரை கொழும்புக்கு வெளியே கம்பஹாவில் மட்டும் இதுவரை ஒரு கூட்டத்தை நடாத்தி இருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் கூட பெரியளவில் மக்கள் கலந்து கொள்ளவில்லை.

அதேநேரம் என்ன உங்களது கூட்டம் ஒன்றையும் இன்னும் காணவில்லையே என்று பத்திரிகையாளர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணிலிடம் கேள்விகள் எழுப்பிய போது. அனுரவுக்குப் பைத்தியம் இந்த கொட்டும் மழையில் எப்படித்தான் கூட்டம் போடுவது. அப்படிக் கூட்டம் போட்டு மக்களை நோயாளிகளாக்க என்னால் முடியாது என்று அவர் பதில் கொடுத்திருக்கின்றார். அந்தளவுக்கு குடி மக்கள் மீது ரணிலுக்குப் பாசம் பீரிட்டுக் கொண்டு வருகின்றது போலும்.

முன்பெல்லாம் பெரும் பேரணிகளை நடாத்திக் கொண்டிருந்த மொட்டுக் கட்சியும் இன்று பத்து பதினைந்து பேரை வைத்து கூட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றது. முன்னாள் அமைசர் ஒருவர் முன்பெல்லாம் நாம் எப்படியான பாரிய கூட்டங்களை நடாத்தினோம். இன்று நமது நிலை இப்படி ஆகிவிட்டது என்று மக்கள் சந்திப்புக்களில் வேதனையுடன் உரையாற்றி இருந்தார். அந்த அணியில் போட்டிடுகின்ற சிலர் மக்கள் மத்தியில ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொள்ளத்தான் இன்று தேர்தலில் நிற்க்கின்றார்கள். எப்போதாவது நமக்கு ஒரு வாய்ப்பு வராலாம் என்று களமிறங்கி இருக்கின்ற புதியவர்கள் பலர் கணக்குப்பார்க்கின்றார்கள்.

இன்னும் சிலர் அடுத்து வருகின்ற மாகாணசபைத் தேர்தலில் களத்துக்கு வருவதற்காகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள முயல்கின்றார்கள். ஒருவர் நமக்கு இந்தக் கருத்தை நேரடியாகவே ஒழிவுமறைவின்றி சொன்னார். வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் இந்த தேர்தலில் கட்சிகள் போட்டிக்கு வந்திருக்கின்றன. வேட்பாளர்களுக்கு தலா 2000 ஆயிரம் என்ற சிறு காசுத் தொகையைக் கட்டினால் தேர்தலுக்கு நிற்கலாம் என்பதால் சிறு சிறு பணக்காரர்கள் கூட எம்.பி. கனவில் ஆட்கள் சிலரை பிடித்துத் இந்தத் தேர்தலில் நிறுத்தி போட்டியிடுகின்றார்கள்.

குறிப்பிட்ட ஒரு மாவட்டத்தில் தேர்தல் பணிகளுக்கு தனக்கு சில திரிவீல் வண்டிகள் – முச்சக்கர வண்டிகள் தேவை அதற்கு அனுமதி பெற வேண்டும் என்று அவர்களிடம் அடையாள அட்டையை வாங்கி இருக்கின்றார்கள். பின்னர் பார்த்த போது அவர்களின் பெயர் அவர்களுக்கத் தெரியாமலே அங்கு வேட்பு மனுவில் வந்திருக்கின்றது. இதற்காக சிலர் பொலிசில் போய் முறைப்பாடும் செய்திருக்கின்றார்கள். எனவே நமது நாட்டில் தேர்தல் சட்டம் எந்தளவுக்கு பலயீனமாக இருந்து வருகின்றது என்பதற்கு இவை எல்லாம் நல்ல உதாரணங்கள்.

சில சில்லறைக் கட்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் இப்படி வேட்பாளர்களை நிறுத்தி எப்படியாவது அதில் வருகின்ற மொத்த வாக்கில் ஒரு ஆசனத்தையாவது வென்று நாடாளுமன்றம் போகலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் இந்த முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். கடந்த தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக் கொள்ள வக்கில்லாத ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி தனக்குக் கிடைத்த ஒரு தேசியப்பட்டியலுடாக ஜனாதிபதி கதிரை போய் அமர்ந்ததால் அந்த அதிஸ்டத்திலும் சிலருக்கு ஒரு நம்பிக்கை வந்து தமக்கும் அப்படி ஒரு வாய்ப்புக்கிடைக்கலாம் என்ற எண்ணமோ என்னவோ தெரியாது.

ஜாதகத்தில் அதிகமான நம்பிக்கை வைக்கின்ற மக்கள் வாழ்கின்ற ஒரு நாடு இது என்பதால் உனக்கு ராஜயோம் இருக்கின்றது என்று எவராவது ஒரு பாம்பாட்டி சொல்லி விட்டால் அந்த நம்பிக்கையில் கூட இந்த வேட்பு மனுக்கள் இந்த உச்சத்துக்குப் போனதோ என்ற ஒரு சந்தேகமும் நமக்கு இன்று ஏற்பட்டிருக்கின்றது.! வடக்குக் கிழக்கில் ஒரு முப்பது நாற்பது ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக் கொண்டால் ஒரு ஆசனததை கைப்பற்றி விடலாம் என்ற என்ற நிலை நமது தேர்தலில் இருப்பதால் கட்சியில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு சிலர் அங்கு தமக்குத் தனி அணி சமைத்துக் கொண்டு தேர்தலில் இறுங்கி இருக்கின்றார்கள் என்றும் தெரிகின்றது.

இதில் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாக நாம் தமிழர்களைப் பார்க்கின்றோம். கட்சித் தலைமைகள் விட்ட தவறுகள் தான்தோன்றித்தனங்கள் காரணமாக தமிழ் மக்கள் மிகுந்த விரக்தியில் இருக்கின்றார்கள். இது அரசியல் ரீதியாக அவர்களைப் பலயீனபப்டுத்தி செல்லாக் காசாக்கி விடும். இந்தத் தேர்தலில் அப்படி ஒரு அவலநிலைதான் அங்கு காணப்படுகின்றது. இவர்கள் நாடாளுமன்றத்தில் சில்லறைக் காசுபோலத்தான் அங்கு தொழில்பார்க்க முடியும். இந்த நிலையில் இருந்து மீண்டெழுவதற்கு தமிழ் மக்களுக்கு நெடுநாள் தேவைப்படலாம்.

அதே போன்றுதான் முஸ்லிம்கள் நிலமைகளும் காணப்படுகின்றது. தனித்துவ அரசியல் என்று பேசியவர்கள் இன்று கிழக்கில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்ற ஒரு நிலை முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட திகாமடுல்ல-அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்றது. இந்தத் தனித்துவத் தலைமைத்துவங்கள் இன்று சமூகத்தின் சாபக்கோடு என்று அதன் துவக்க கால உறுப்பினர்களே இன்று பகிரங்கமாக பேசி வருகின்ற ஒரு நிலை இருந்து வருகின்றது.

இப்போது நேரடியாகத் தேர்தல் முடிவுகள் பற்றிப்பார்ப்பதாக இருந்தால் அனுர தலைமையிலான என்பிபி. இலகுவாக தனிப் பெரும்பான்மையைக் கைப்பற்றி விடும் என்பது நமது கணிப்பாக இருக்கின்றது. அதே போன்று 2019 நடை பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 5700000 வரை வாக்குகளைப் பெற்ற சஜித் 2020 நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதனைவிட அரைப்பங்கு 2700000 வாக்குகளையே பெற்றுக் கொண்டார். எனவே இந்தத் தேர்தலில் அதனை விட ஒரு மோசமான சரிவுக்குத்தான் இந்த முறையும் வாய்ப்பு இருக்கின்றது.

இதில் நல்ல வேடிக்கையான கதை என்னவென்னறால் தேர்தலுக்குப் பின்னர் நாம் ஜனாதிபதியுடன்தான் இணைந்து கொள்வோம் என்று சஜீத் கூட்டணியில் இருக்கின்ற சில கட்சிகள் இப்போதே பகிரங்கமாகவே பேசி வருகின்றார்கள். அதனை அவர்கள் முக்கிய ஒரு கருப் பொருளாக மேடைகளில் உச்சரித்தும் வருகின்றார்கள். அப்படி இவர்கள் கூவித்திரியக் காரணம் நாம் ஜனாதிபதியுடன் இருந்து மக்களுக்கு சேவை செய்ய முடியும் அதனால் எமக்கு வாக்களித்து எம்மை வெற்றி பெறச் செய்யுங்கள் என்பதுதான் அதன் அர்த்தம். இது தொடர்பாக நமது வாராந்த அரசியல் பகுதியில் சற்று விளக்கமாக குறிப்பிட்டிருக்கின்றோம்.

பொதுத் தேர்தலில் மிகவும் பின்னடைவை எதிர்நோக்கின்ற ஒரு கட்சியாக நாம் ரணில் தலைமையிலான அணியையே பார்க்கின்றோம். கடந்து ஜனாதிபதித் தேர்தலில் 37 வரையிலான ஆசனங்களை பெற்றுக் கொள்ள இடமிருக்கின்றது என்று தேர்தல் முடிவுகள் தெரிவித்தாலும் அதில் பெரியதோர் வீழ்ச்சிதான் அங்கு வரப்போகின்றது.

இப்படியான இழுபறி நிலை ஆளும் தரப்புக்கு மேலும் நல்ல வாய்ப்பைக் கொடுக்கக் கூடும். அதே நேரம் தனிப் பெரும்பான்மையை இலகுவாக அடையும் நிலையில் இருக்கின்ற ஜனாதிபதி அனுர தரப்பு தனக்கு நாடாளுமன்றத்தில் செய்வதாக சொல்லி இருக்கின்ற புரட்சிகர மாற்றங்களை மேற் கொள்வதற்கான வாய்ப்புக்களை அங்குள்ள சிறுகட்சிகள் கொடுக்கத் தயாராக இருக்கும் அறிகுறிகள் அங்கு நிறையக் காணப்படுகின்றது. இது வரை கடும் போக்குடன் இருந்த வடக்கு அரசியல் கட்சியின் தாலைவர் ஒருவர் நேரடியாக ஜனாதிபதி அனுரவைச் சந்தித்த போது நாம் தங்களுக்கு ஒத்துழைப்புத் தர இருப்பதை முன் கூட்டியே சொல்லியும் இருக்கின்றார்.

இதன் பின்னர் தான்தோன்றித் தனமான எண்ணங்களுடன் வந்து சொத்துச் சம்பாதிக்கும் நிலையும் அனுர தலைமையிலான அரசியலில் இருக்கப் போவதில்லை. எனவே பெரும் ஊழல்வாதிகளும் கொள்ளையர்களும் இந்தத் தேர்தலில் ஓரம் கட்டப்பட்டு விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு சிலர் அபூர்வமாக பாராளுமன்றம் நுழைந்தாலும் அவர்கள் சங்கிலியில் பிணைக்கப்பட்டவர்கள் போலத்தான் அங்கே இருக்க முடியும்.

Sajith gains people's loyalty - Opinion | Daily Mirror

இந்தப் பின்னணியில் வெற்றி பெற்று வருகின்ற சஜித் மற்றும் ரணில் தரப்பில் இருப்பவர்களில் பலர் ஜனாதிபதி அனுரவுடன் இணக்க அரசியலுக்குப் போக வேண்டி இருக்கும். வெறும் மூன்று ஆசனங்களை வைத்துக் கொண்டு நாட்டை இந்த ஆட்டம் ஆட்டியவர்கள், ஒரு நூற்றி 125 வரையிலான ஆசனங்களைத் தனித்துப் பெற்றுக் கொள்ளுமாக இருந்தால் அங்கு நிலமை என்னவாக இருக்கும்? ஏனைய கட்சிகளில் இருந்து வரும் உறுப்பினர்கள் போல அவர்கள் இருக்க மாட்டார்கள்.

தமது தரப்பில் வெற்றி பெற்றுவரும் தமது உறுப்பினர்களுக்கு என்பிபி. கடுமையான பயிற்சிகளையும் வகுப்புக்களையும் வைத்துத்தான் அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க இருக்கின்றார்கள். எனவே எதிர்க் கட்சி என்பது வருகின்ற நாடாளுமன்றத்தில் ஒரு பொம்மையின் பாத்திரத்தில்தான் அங்கு செயல்பட முடியும். அடுத்து எதிர்க் கட்சித் தலைவராக இருக்கும் சஜித் தனது கட்சிக்குள்லேயே இந்தப் பாராளுமன்றதில் பெருத்த சவால்களை எதிர்நோக்குவார். அப்போது அவர் பதவிக்குக் கூட அவர் தரப்பில் இருந்தே வேட்டு வைக்கப்படும் ஒரு நிலையும் இருக்கின்றது. என்பதனை நாம் முன்கூட்டியே சொல்லி வைக்கின்றோம்.

Sri Lankan Tamil parties debate tactics in the presidential election - World Socialist Web Site

அதே போன்று வீரியம் குறைந்து நாடாளுமன்றம் வருகின்ற தமிழ் உறுப்பினர்கள் தமக்குள் என்னதான் முரண்பாடுகள் இருந்தாலும் ஒரு கூட்டணியை நடாளுமன்றத்துக்குள் உருவாக்கிக் கொள்ள வேண்டி வரும். அது காலத்தின் தேவையும் கூட. ஜனாதிபதி அனுர தலைமையிலான அணிக்கு வடக்குக் கிழக்கில் தமிழ் முஸ்லிம் தரப்பிலிருந்து ஒரு பத்து ஆசனங்கள் வரை கிடைக்குமாக இருந்தால் அடுத்து வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் அனுர தரப்பு வடக்குக் கிழக்கில் எதிர்க் கட்சி என்ற நிலைக்கும் வளர்ச்சியடையவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே அனுர தரப்பை எதிர் கொள்வதாக இருந்தால் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு மெகா கூட்டணிக்குச் சொல்ல வேண்டும் என்று ஜனாதிபதத் தேர்தலுக்கு நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே நாம் சொல்லி இருந்தோம். இது அனுர தரப்பு பதவிக்கு வந்தவிடக் கூடாது என்று கருத்தல்ல நாட்டில் அரசியல் சூழ்நிலை அந்தளவுக்கு மாறிப் போய் இருக்கின்றது.

Ranil Wickremesinghe: The six-time Sri Lankan PM who became president

மக்கள் ஆட்சியாளர்கள் மீது எந்தளவுக்கு வெறுப்புடன் இருந்திருக்கின்றார்கள், சிறுபான்மை சமூகங்களின் மன நிலை கூட இனவாதங்களுக்கு அப்பால் இந்த ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று இருந்திருக்கின்றது. எனவே கணித வாத்திகள் மூன்றும் மூன்றும் ஆறு என்பதுதான் சூத்திரம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். இப்போதும் அவர்கள் தமக்கு வெற்றி வாய்ப்பு இருக்கின்றது என்று இன்னும் சொல்லி கொண்டிருந்தால் இவர்களை வைத்தியசாலைகளிலதான்; கொண்டு போய் சென்று சேர்க்க வேண்டும் என்றுதான் மக்கள் யோசிப்பார்கள்.

Previous Story

ஜனாதிபதி அனுரவின் அமைச்சரவை!        

Next Story

SJB - SLMC கூட்டணி  முறிந்தது! UNP போல SJB யும் ஏமாளிகளா?