–நஜீப்-
நன்றி 10.11.2024 ஞாயிறு தினக்குரல்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அனுர குமார அணி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பது இப்போது உறுதி. அவர்களின் பிரதமர் மீண்டும் ஹரிணி அமரசூரியதான். இது தவிர விஜித ஹேரத், முனீர் மௌலவி, லால் காந்த, டாக்டர் சிவபிரகாசம், கலப்பத்தி, காலி நளின் ஹேவகே, ஹதுன்ஹெத்தி. சமந்த வித்தியாரத்ன. டாக்டர் நளின் ஜயதிஸ்ஸ. டாக்டர் நிஹல் ஜயசிங்ஹ. நாமல் ராஜகருன. வசந்த சமரசிங்ஹ, நிபுனரச்சி, சுனில் வடகல. போன்றவர்களுக்கு பெரும்பாலும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும்.
தேசிய பட்டியல் பிமல் ரத்நாயக்க. யாழ்-சந்திர சேகரன் போன்றவர்களும் அமைச்சர்கள். மேலும் சிறுபான்மை சமூகங்களில் இருந்து திருமலை அருன் பிரேமேச்சந்திர கொழும்பு டாக்டர் சாலி பதுளையிலிருந்து அம்பிக்கா சாமுவேல் போன்றவர்களுக்கும் பிரதி அமைச்சு பதவிகளைக் கொடுத்து என்பிபி. அதிர்ச்சி வைத்தியம் பார்க்கலாம்.\
எனவே சிறுபான்மை சமூகங்கள் முதலில் இவர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். மொத்தமாக சிறுபான்மை சமூகங்களில் இருந்து 15 வரையிலான உறுப்பினர்களை என்பிபி.க்கு வென்றெடுக்க முடியுமாக இருந்தால். நாட்டில் அரசியல் வரை படத்தில் பாரிய மாறுதல்கள் வரும்.-