ஜனாதிபதித் தேர்தல் புதிய கள நிலவரம்!

மூன்று வாரங்களுக்கு முன்னர் நாம் தேர்தலில் வெற்றி வாய்ப்புக்கள் தொடர்பில் சில கணிப்புக்களைச் சொல்லி இருந்தோம். பொதுவாகப் பார்க்கின்ற போது அதில் அதிரடி மாற்றங்கள் இதுவரை பெரிதாக இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் நடந்திருக்கின்றன.

அதன் படி 07.08.2024ம் திகதி அணுரா 38 சதவீதம். சஜித் 35 சதவீதம். மொட்டு 17 சதவீதம். ரணில் 06 சதவீதம். ஏனையோர் 04 சதவீதம். என்று அது அன்று அமைந்திருந்தது. இன்று 04.09.2024 அதாவது 28 நாட்களுக்குப் பின்னர் அது பின்வருமாறு மாற்றமடைந்திருக்கின்றது.

அணுர 41%
சஜித் 34%
நாமல் 10%
ரணில் 09%
இதர 06%

இதன்படி அணுரா 03 சதவீதம் அதிகரிப்பு. சஜித் 01 சதவீதம் வீழ்ச்சி. நாமலுக்கு ஏழு சதவீத வீழ்ச்சி. ரணிலுக்கு 03 சதவீத அதிகரிப்பு. இதர வேட்பாளர்கள் 2 சதவீத அதிகரிப்பு. நமது இந்தக் கணிப்புகளின் படி அணுரவுக்கும் சஜித்துக்கும் நேரடிப் போட்டி.

மூன்றாம் இடத்துக்கு நாமலுக்கும் ஜனாதிபதி ரணிலுக்கும் இடையே மிக நெருக்கமான போட்டி என்று தெரிய வருகின்றது.

Previous Story

கணிப்பாளர் கணக்கில் கமலா ஹாரிஸ் வெற்றி; டிரம்ப் தரப்புக்கு அதிர்ச்சி

Next Story

கோமாவில் இருந்து மீண்ட ஹக்கீம் மூக்குடைபடுகிறார்!