ஜனாதிபதித் தேர்தல்: டலஸ்-ரணில் நேரடிப் போட்டி!

புதிய நெருக்கடி!

-யூசுப் என் யூனுஸ்-

நமக்குக் கிடைத்த பிந்திய தகவல்களின் படி இன்று ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நடைபெற்றாலும் அந்தப் போட்டி டலஸ்-ரணில் நேரடிப் போட்டியாக அமைய அதிக வாய்ப்புக்கள் தான் காணப்படுக்கின்றன.

போட்டியிலிருந்து அநேகமாக சஜித்தும் அணுராவும் விலகிக் கொள்ள அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. போட்டியில் டலஸ் வெற்றி பெற்றால் சர்வகட்சி அரசாங்கம் அமையும். அதன் பிரதமர் சஜீத் என்பது உறுதி. இதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

இதற்கிடையில் இன்று ரணில் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான முக்கிய வழக்குத் தீர்ப்பும் வெளிவர இருக்கின்றது. அந்தத் தீர்ப்பு சொல்லப்படாமல் ரணில் வேட்பு மனுவை ஏற்பதில் சிக்கல்கள் இருக்கின்றன.

இந்த முறைப்பாடு கொடுக்கப்பட்டு நெடுங்காலமாகியும் கோட்டா அதிகாரத்தில் இருந்த காலத்தில் அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வில்லை. வழக்குத் தீர்ப்பு வரா விட்டால் வேட்பு மனு ஏற்பதில் சிக்கல் வரலாம்.

அபூர்வமாக ரணில் நாடாளுமன்ற உறுப்புரிமை சிக்கலானால் இன்று வேட்பு மனு ஏற்பதிலும் நெருக்கடி வரலாம்.

Previous Story

தான் ஜனாதிபதியானால் ரணிலை விரட்டுவேன்-டலஸ்

Next Story

பதற்றம்: அமெரிக்கா- ஈரான்