ஜனாதிபதிக்கு பகிரங்க அழைப்பு!

நமது ஜனாதிபதி பிரான்சில் நடத்திய ஒரு ஊடகச் சத்திப்பில் தனக்கு தமிழில் இருக்கின்ற புலமை பற்றி அவரே அங்கு தெரிவித்திருந்தார். எனவே அவருடன் தமிழ் மொழியில் ஒரு பேட்டி நிகழ்ச்சியைப் பெற்றுக் கொள்ள  சந்தர்ப்பத்தை தனக்குத் தருமாறு கோரி நமது அரசியல் ஆய்வாளர் நஜீப் பின் கபூர் ஜனாதிபதி ரணிலுக்கு ஒரு பகிரங்க கடிதத்தை சில தினங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்திருக்கின்றார்.

Sri Lanka PM Ranil Wickremesinghe instructs military, police to ‘restore order’

இது பற்றி அவர் ஸ்ரீ லங்கா கார்டியன் நியுஸ்.கொம் என்ற தனது இணையத் தளத்தில் குறிப்படும் போது, பிரான்சில் புலம்பெயர் தமிழர் ஒருவருடன் நடந்த உரையாடலின் போதுதான், நமது ஜனாதிபதியின் தமிழ் தொடர்பான பாண்டித்தியத்தை தான் தெரிந்து கொண்டதாகவும், எனவே வரலாற்றில் முதல் முறையாக தமிழ் மொழியில் ஒரு பேட்டி நிகழ்சியை மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணிலிடத்தில் தான் பெற்றுக் கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாவும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருக்கின்ற அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இந்தக் கடிதம் 07.07.2023ம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் நஜீப் பின் கபூர் தனது இணையத் தளத்தில் மேலும் குறிப்பிட்டிருக்கின்றார்.

நன்றி: 07.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சனத்தொகை இந்தியா சம்பியன்!

Next Story

ராஜபக்ச குடும்பம்: ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவு!