ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் மல்யுத்தம்!

-நஜீப் பின் கபூர்-

‘கிரிக்கட் நெருக்கடி இன்னும் முற்றுப் பெறவில்லை.

நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கும் ஆப்புத்தான்’

Budget 2024: 27 Key Highlights

 

இந்த வாரம் தேர்தல் ஜூரம் பற்றிய பல புதிய தகவல்களையும் தேர்தல் கூட்டணிகள் பற்றி நமக்குக் கிடைத்திருக்கின்ற செய்திகளைப் பேசலாம் என்றிருந்த போது. அதனை தற்போதைக்கு சற்றுத் தள்ளி வைத்துவிட்டு, இன்று அனைவரின் கவனத்தையும் ஈத்திருக்கின்ற கிரிக்கட் மற்றும் அதனோடு தொடர்பான அரசியலில் இன்று வீசிக் கொண்டிருக்கின்ற துர்நாற்றங்கள் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கின்றோம். இலங்கையின் அண்மைக்கால நிகழ்வுகள் அனைத்தம் போல சாக்கடை நிலையில்தான் போய்க் கொண்டிருக்கின்றன என்பது அனைவராலும் நுகரப்பட்டு வருகின்றன.

இப்படி என்னதான் அசிங்கங்கள் அவமானங்கள் துயரங்கள் துன்பங்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை மக்களுக்கு மனதுக்கு ஒரு இதமான செய்தியாக இதுவரை இருந்து வந்தது விடயம் நமது கிரிக்கட் மட்டுமே என்று குறிப்பிட்டால் அதில் தவறுகள் இருக்காது. ஆனால் அந்த ஓரே சந்தோசமான செய்திக்கும் இப்போது தொடர்ச்சியாக இடிவிழ்ந்தது போல சேதங்களையே நாம் இப்போது பார்த்துக்  கொண்டிருக்கின்றறோம். இதில் மிகவும் கொடூரமான அல்லது உச்சகட்ட நிகழ்வுகள் மிக அண்மையில் நடந்து கொண்டிருக்கின்றன. கிரிக்கட் மைதான நிகழ்வுகள் அப்படிப் போய் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் கிரிக்கட்டுடன் கலந்த அரசியல் நிகழ்வுகள் எந்தளவுக்கு சாக்கடை சங்கதிகளாக அமைந்திருக்கின்றன என்பதனை நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

Sri Lanka: Return of Ranil, what it means for India | India Writes

இளசுகள் மத்தியில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் நமக்குக் கொடுத்த இந்த கிரிக்கட் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துக்கின்றது என்பதற்கு நாம் இப்படியான ஒரு உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்டலாம் என்று  எதிர்பார்க்கின்றோம். தன்னைப் பெற்ற தாய் அல்லது தந்தையின் சடலத்தை வீட்டுக்குள் வைத்துக் கொண்டு பக்கத்து வீட்டில் போய் தொலைக் காட்சியில் கிரிக்கட் போட்டிகளை பார்த்துவிட வேண்டும் என்ற மனநிலை நமது இளசுகளுக்கு இருக்கின்றது. அந்தளவுக்கு நமது நாட்டில் கிரிக்கட் இலங்கை மக்களின் உணர்வுகளுடன் கலந்து போய் இருக்கின்றது-ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

இதனால் இலங்கை அணிக்கு ஏற்பட்டு வருகின்ற  அவமானங்களை நமது ரசிகர்களினால் தாங்கிக் கொள்ள முடியாது அவர்கள் மனம் உடைந்து போய் நிற்க்கின்றார்கள். சில தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கட்ட அணி என்பது சர்வதே அரங்கில் ஒரு அணுகுண்டை தன்வசம் வைத்திருக்கின்ற ஒரு வல்லரசு போல இருந்து வந்தது. ஆனால் இன்று மத்திய கிழக்கில் ஹமாஸ் என்ற ஒரு சிறு ஆயுதக் குழுவிடம் அடிவாங்குகின்ற இஸ்ரேல் போல் நமது கிரிக்கட் அணி உலகில்  மூக்குடைபட்டு நிற்கின்றது. இந்த நிலைக்கு யார் காரணம் என்ற தேடுதலும் ஆய்வுகளும் பல கோணங்களில் நடந்து வருகின்றன.

இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒரு பக்கமாகவும் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அதற்கு எதிரான திசையிலும் நின்று மோதிக் கொண்டிருக்கின்ற நிலமைகள் நீண்ட நாளாகவே தொடர்கின்றன. இதிலுள்ள ஆச்சர்யம் என்னவென்றால் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ரணிலும் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் ரணசிங்ஹாவும் எதிரும் புதிருமாக நின்று மோதிக் கொள்வது கிரிக்கட அரங்கில் நடக்கின்ற காட்சிகளை விட பரபரப்பாக இருப்பதையும் முழு உலகமும் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

ICC International

ஜனாதிபதியை இந்த நிலைக்கு கொண்டு சென்றவர் அவர் பக்கத்தில் இருக்கின்ற சகா சாகல இரத்நாயக்க என்றும் பகிரங்கமான குற்றச்சாட்டுக்கள் விமர்சனத்துக்கு இலக்காகி வருவதும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் பேசுகின்ற போது விளையாட்டுத்துறை அமைச்சர் ரோசான் ரணசிங்ஹ என்பவர் ஜனாதிபதியில் தெரிவு நானா அல்லது சூதுக்காரன் சம்மியா என்பதனை பார்த்துவிடலாம் என்று பகிரங்கமாக சவால் விட்டிருந்தார்.

இதற்கிடையில் பிரித்தானியா மற்றும் அவுஸ்திரோலிய ஆகிய நாடுகள் என்னதான் கிரிக்கட்டை தோற்றுவித்த நாடுகளாக இருந்தாலும் இன்று சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையில் இந்தியாவின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதை நாம் பார்க்கின்றோம் என்று விமல் வீரவன்ச நாட்hளுமன்றத்தில் பகிரங்கமாக இந்தியாவை விமர்சித்தும் இருந்தார். இதற்கு உதாரணமாக இந்தியாவில் நடக்கின்ற கிரிக்கட் இறுதிப் போட்டி இந்தியாவில் மோடி அரங்கில் நடக்கின்றது. அத்துடன் மோடியின் பிறந்த தினத்தில் நடாத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது என இதற்கு ஆதாரமாக விமல் அங்கு சுட்டிக் காட்டினார்.

அண்மையில் இலங்கைக்கு வந்த ஐசீசீ தலைவர் இந்தியாவைச் சேர்ந்த ஷஷhன்க் மனோகர் தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற இலங்கை கிரிக்கட் கட்டுபாட்டுச் சபைக்கு தொந்தரவுகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளமாறு ஜனாதிபதியிடமும் அவரது சகபடி சாகல ரத்நாயக்காவிடம் கேட்டிருககின்றார் என்றும் விமல் நாடாளுமன்றத்தில் கூறி இருந்தார். இது பாரதூரமான ஒரு குற்றச்சாட்டு.

எனவே இப்போது உலக கிரிக்கட் இந்தியாவின் பிடியில் சிக்கி இருக்கின்றது. அதனால் அவர்கள் கிரிக்கட்டை தமது அரசியல் தேவைகளுக்காக பாவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது விமல் குற்றச்சாட்டு. இதே குற்றச்சாட்டை இந்திய எதிர்க்கட்சிகளும் ஏற்கெனவே சொல்லி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக கிரிக்கட் விளையாட்டில் அரசியல் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதை அவதானிக்க முடியும்.

நமது நாட்டில் இந்த கிரிக்கட் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துக்கின்றது என்றால் அதன் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளங்களில் இருந்து புரிந்து கொள்ள முடியும். அதாவது அவர்களது மாதாந்த சம்பளம் தொன்னூறு முதல் அறுபது இலட்சம் (60-90) வரை. இப்படி சம்பளம் பொறுகின்ற பலர் நமது கிரிக்கட் அணியில் இருக்கின்றார்கள். அதில் உள்நாட்டுக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்கள் பலரும் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஐபிஎல் கிரிக்கட்டில் மிகக் குறைவான ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணி அவமானப்பட்டிருந்த நினைவுகள் ரசிகர்களின் மனதில் நீங்காத நிலையில் இருந்த நேரத்தில் அதே விதமான ஒரு தோல்வியை தற்;போது நடந்து கொண்டிருக்கின்ற உலக கிண்ணத்திலும் இலங்கை அணி புதுப்பித்திருந்தது.  அது மட்டுமல்லாமல் இந்தப் பட்டியலில் மிகவும் பின்தங்கிய நிலைக்கு வந்து போட்டியில் இருந்து இன்று வெளியே வீசப்பட்டிருக்கின்றது.

அத்துடன் பங்காளதேசுடன் ஒரே பந்தில் இரண்டு விக்கட்டை இழந்ததையும் இலங்கை அணியால் ஜீரணித்துக் கொள்ள முடியாதிருக்கின்றது. இதற்கு இலக்கான அஞ்சலோ மெத்தியு மிகவும் மனம் உடைந்போய் இருக்கின்றார். ஆனால் அப்படி ஒரு ஆட்ட இழப்பு கிரிக்கட்ட சட்டத்தில் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்ட இழப்பு தொடர்பாக சாதாகமாகவும் பாதகமாகவும் இன்று விமர்சனங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

பெரும் தோல்விகளுக்கும் அவமானங்களுக்கும் இலக்காகி இருந்த இலங்கை அணியிள் இன்றைய நிலைக்கு கட்டுபாட்டு சபை அதிகாரிகளே காரணம் என்ற குற்றச்சாட்டில் ஏற்கெனவே அவர்களுடன் முரண்பாட்டு வந்த அமைச்சர் ரோசான் ரணசிங்ஹ தனக்குள்ள அதிகாரத்தின் படி இயங்கிக் கொண்டிருந்த சபையைக்கு மாற்றாக அர்ஜூன் ரணதுங்க தலைமையிலான ஓர் இடைக்கால சபைபை நியமனம் செய்து அதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் வெளிட்டார். இது பற்றி தான் எதுவுமே அறிந்திருக்கவில்லை. ஒரு தொலைக் காட்சி செய்தியில்தான் இந்த தகவலைத் தான் பார்த்ததாகவும் ஜனாதிபதி ரணில் பகிரங்கமாக விளையாட்டு அமைச்சர் நடவடிக்கையை விமர்சித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரை தொடர்பு கொள்ள ஜனாதிபதி ரணில் பல முறை முயற்சித்த போதும் அமைச்சர் ரணசிங்ஹாவைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் அமைச்சரின் செயலாளரை அழைத்த ஜனாதிபதி அவர் மூலமாக அமைச்சருக்கு தொலைபேசி எடுத்த போதும் அதுவும் கைகூடவில்லை. ஆனால் அமைச்சர் நியமனம் செய்த அர்ஜூன தலைமையிலான பிரசுரிக்கபட்ட வர்த்தமானி அறிவித்தலை திரும்பப் பொறமாறும் அமைச்சரிடம் ஜனாதிபதி கேட்டிருந்தார். பின்னர் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதியும் துறைக்கப் பொறுப்பான அமைச்சரும் சந்தித்துக் கொண்ட போது இந்த விடயம் முக்கிய பேசு பொருளாக அமைந்தது.

Sri Lankan President Ranil Wickremesinghe presents budget; says economy not out of crisis yet - The Hindu

அந்த இடத்திலும் ஜனாதிபதி அமைச்சர் வர்த்தமானி அறிவித்தலை திரும்பப் பொறுமாறு நேரடியாக கேட்டிருந்தார். முடியுமானால் தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறும் தான் அந்த வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறப்போவதில்லை என்ற தனது நிலைப்பாட்டில் அமைச்சர் உறுதியாக இருந்தார். அதன்பின்  கிரிக்கட் சபைத் தலைவர் சம்மி சில்வா அமைச்சர் நியமனம் செய்த குழுவுக்கு எதிராக நீதி மன்றத்தில் முறைபாடு செய்து அமைச்சர் நியமனம் செய்த அர்ஜூன தலைமையிலான குழுவுக்கு இடைக்கால தடை உத்தரவு கடுகதி வேகத்தில் பெற்றுக் கொண்டார். இதில் கூட இந்தியாவின் அழுத்தம் இருப்பதாவும் ஒரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டு வருகின்றது.

அதே நேரம் இதற்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் உயர்தர மாணவர்களின் பரீட்சைகள் போன்ற பல அவசர விடயங்கள் நீதி மன்றத்தின் முன் கொண்டு செல்லப்பட்ட போது ஆமை வேகத்தில்தான் அதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டதும் நமக்குத் தெரியும். இந்த விவகாரத்தில் உறவு முறைகளின் ஆதிக்கமும் காணப்படுகின்றன என்பதை அமைச்சர் நாடாளுமன்றத்தில்  அதற்கான போட்டோ ஆதாரங்கள் மூலம் இங்கு வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அர்ஜூன ரணதுங்ஹ இந்த நாட்டில் கிரிக்கட்டை அழிவுக்கு இட்டுச் செல்கின்ற ஒருவர் ஜனாதிபதியுடன் இருக்கின்றார். அவர் தனது தேவைகளுக்கு ஏற்ற விதமாகத்தான் எல்லாம் இங்கு நடந்து கொண்டிருக்கின்றது. அவர் பெயரையும் நடந்த விவகாரங்களையும் எதிர்வரும் தேர்தல் மேடைகளில் தான் பகிரங்கமாக சொல்ல இருப்பதாக அர்ஜூன ரணதுங்ஹ ஊடகங்கள்முன் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

இந்த அமைச்சர் நியமித்த குழுவில் பலர் சஜித் ஆதரவாலர்கள் இருப்பதாகவும், மற்றும் தற்போது தம்மிக்க பெரேராவுடன் அரசியல் செய்கின்ற ஆளுநர் முஸம்மில் என்பரின் மகன், மற்றும் நிதி அமைச்சர் விஜேதாச மகன் கூட இந்த அமைச்சர் நியமனம் செய்த குழுவில் இடம் பெற்ருப்பது கேள்விக்கு ஆளாக்கப்ட்டிருக்கின்றது.

அமைச்சர் ரணசிங்ஹ ஜனாதிபதி ரணிலுக்கு நெருக்கமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஜனாதிபதி ரணில்-அமைச்சர் ரணசிங்ஹ மோதலில் சஜித் அணி அமைச்சருக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்திருப்பதால் ஆளும் மொட்டுத் தரப்பினர் இந்த விவகாரத்தில் பிளவுபட்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் அங்கு நடந்த விவாதத்தில் பேசியதை அவதானிக்க முடிந்தது. பொதுவாக மக்களின் உணர்வுகள் அமைச்சர் ரணசிங்ஹ நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தெருவில் போகும் பாம்பை ஜனாதிபதி ரணில் மடியில் போட்டுக் கொண்டார் என்பது போலத்தான் இப்போது கதை போய்க் கொண்டிருக்கின்றது. இந்த கிரிக்கட்டில் பணம் ஆதிக்கம் செலுத்துவதால் அதற்கு சாதகமாகத்தான் முடிவுகளும் அமையும் என்று நாம் நம்புகின்றோம். அதனைத்தான் நீதி மன்றத் தீர்ப்பிலும் நாம் பார்க்க முடிந்தது. இதனால்தான் மின்னல் வேகத்தில் அமைச்சர் நியமித்த குழுவுக்கு நீதி மன்றம் இடைக்காலத் தடையை விதித்திருந்தது. இந்த தீர்ப்பு கடும் விமர்சனத்துக்கு இப்போது இலக்காகி வருகின்றது.

Mock election in Sri Lanka, 14 June

நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது ஆளும் தரப்பிலுள்ள பலர் பாம்புக்கும் நோகாது பாம்படித்த கம்பும் முறியாது அங்கு பேசி இருந்தனர். அமைச்சர் நிமல் டி சில்வா மற்றும் பிரசன்ன ஆகியோர் பேச்சில் இதனை அவதானிக்க முடிந்தது. இன்னும் சில ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அமைச்சர் ரணசிங்ஹ யாருடைய பேச்சையோ கேட்டு பிழையான பாதையில் போய்க் கொண்டிருக்கின்றார் என்று குற்றம் சட்டிவருகின்றார்கள்.

இதற்கிடையில் ஜனாதிபதி ரணில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான துணைக்கு ஒன்றை நியமனம் செய்து கிரிக்கட்டுக்கு வைத்தியம் பார்க்க முனைகின்றார். இது கதையைத் திசை திருப்பும் ஒரு கபட நாடகம் என்பதுதான் எமது கருத்து. எப்படியோ வாக்கெடுப்பு நடத்தாமலே ஆளும் தரப்பினரும் எதிரணியினரும் சேர்ந்து ஏகமனதாக சம்மி சில்வா குழுவுக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றி இருக்கின்றார்கள்.

ஐசீசீ இலங்கை கிரிக்கட்டுக்கு எதிராக ஏதும் பண்ணலாம் என்ற அச்சம் இருப்பதால் இலங்கை அரசினதும் எதிரணியினரதும் ஏகோபித்த நிலைப்பாட்டை அவர்களுக்குத் தெரியப்படுத்தவும் தற்போது நடவடிக்கைகள் நடக்கின்றன. அத்தோடு சம்மி சில்வாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கும் நாடாளுமன்றத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று அங்கு பேசப்பட்டது.

என்னதான் பிரேரணையை நாடாளுமன்றம் நிறைவேற்றிக் கொண்டாலும் இதற்கு ஜனாதிபதி ரணில் கே.ரி.சித்ரசிரி அறிக்கையை நிறைவேற்றி புதிய கிரிக்கட் யாப்பொன்றை உருவாக்குவதே சிறந்த தீர்வு என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றது. ஆனால் சித்ர சில்வா அறிக்கைக்கும் எதிராக நீதி மன்றத் தீர்ப்புக்கள் பல இருக்கின்றது. அப்படி இருக்கும் போது புதிய யாப்பை எப்படி உருவாக்க முடியும் என்று நீதி அமைச்சர் விஜேதாச நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புகின்றார். இதிலிருந்து இந்த விவகாரம் இன்னும் முற்றுப் பெறவில்லை என்றே நமக்குத் தோன்றுகின்றது.

நன்றி: 12.11.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இஸ்ரேலை கண்டித்த பிரான்ஸ் அதிபர் !

Next Story

வாராந்த அரசியல் (12.11.2023)