சூடு சொரனை இல்லாத தேர்தல்!

-நஜீப்-

(நன்றி 27.10.2024 ஞாயிறு தினக்குரல்)

நமது அரசியல் வரலாற்றில் சூடு சொரனை அல்லது ஒரு கிக் இல்லாத ஒரு தேர்தலாக இது  காணப்படுகின்றது என்று மக்கள் மத்தியில் ஒரு கருத்து இருக்கின்றது. காரணம் பிரதான எதிர்க்கட்சிகள் செத்த பாம்பு போல நெடிந்து போய் நிற்கின்றன.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற என்பிபி. துள்ளிக் குதிக்காமலும் அட்டகாசங்கள் பண்ணாமலும் அமைதி காட்டி நாட்டில் புதியதோர் அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதனால் அரசியல் குரோதங்களுக்கும் வன்முறைகளுக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

மேற்கத்திய நாடுகளில் நடக்கின்ற தேர்தல்கள் போல இங்கும் அரசியலில் கனவான் நிலைக்கு நகரத் துவங்கி இருக்கின்றது. அதே நேரம் இந்தத் தேர்தலில் சஜித் தலைமையிலான அணி வெற்றி பெற்றிருந்தால் நிலமை எப்படி அமைந்திருக்கும் என்று ஒரு முறை எண்ணிப் பாருக்க வேண்டும்.

எல்லாம் நல்ல படியாக நடந்து மக்கள் மத்தியில் இயல்பு வாழ்க்கை வரலாம் என்ற நம்பிக்கை நாட்டில் தோன்றி இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கக் கூடும் என்று நாம் நம்புகின்றோம்.

மோதல்களும் வன்முறைகளும் அற்ற தேர்தலாக இது போய் கொண்டிருப்பதற்கு ஏற்கெனவே முடிவு தெரிந்த தேர்தலாக இது இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கக் கூடும்.

Previous Story

கம்மன்பில அறிக்கை குப்பையில்!

Next Story

அறுகம் குடா  தாக்குதல் திட்டத்தின் பின்னணி - அதிர்ச்சி தகவல்