சூடான தேர்தல் நியூஸ்

-யூசுப் என் யூனூஸ்-

01.கண்டி-பாததும்பறை பிரதேச சபைக்கான தேர்தலில் 18 வட்டாரங்கள். அதில் குறைந்தது 15 ஆளும் தரப்புக்கு வாய்ப்பு. மடிகே-மடவளை-13 வட்டாரத்தில் ஆளும் தரப்பு வேட்பாளர் தனிக் குதிரையாம். மடிகே-உடதலவின்ன-6 வட்டாரத்தில் நெருக்கமான முக்கோணப் போட்டி நிலை.

02. இந்தத் தேர்தலில் 2.50 குரக்கன் சால்வைகளுக்கு ஒரு சின்ன முன்னேற்றம் இருப்பதாக நமது ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. அது 10-12 சதவிகிதம் வரை போகலாம்.

03.நாட்டில் ரணில் அணியில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளரும் வட்டாரத்தில் வெற்றிபெற மாட்டார்கள். அப்படி குதிரைக் கொம்பு போல ஏதாவது கிடைத்தால்தான்.!

04.புத்தளம் பேருவளை கொழும்பு கண்டி மட்டக்களப்பு மாத்தளை போன்ற சபைகளை கைப்பற்ற பல அணிகள் போட்டி. இதில் செஞ்சட்டைக்காரர்களுடன் குடித்தனம் போக இப்போதே பலர் ரெடி.!

05.கண்டி மா நகர சபையில் ஆளும் தரப்பில் போட்டியிடும் முசல்மான்கள் மூன்று பேருக்கும் ஆசனங்கள் ஓகேயாம்.!

06.தேர்தல் முடிந்து மறுநொடியே பட்டியல் ஆசனத்துக்கான சமர் மிக மோசமாக துவங்கும். அப்போது தலைவர்கள் பலர் தலைமறைவாக இப்போதே இடம் தேடி இருக்கின்றார்களாம்.

07.கொழும்பு மா நகர சபையில் செஞ்சட்டைக்காரர்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க சஜித் அணியில் பலர் இப்போதே தயார் நிலையில் இருக்கின்றார்கலாம். இதனத் தடுக்கும் ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றது. ஆனால் அது நடைமுறையில் இலகுவான காரியம் அல்ல. ஏனைய கட்சிகளிலும் இதே கதைதான்.! பொறுத்துப் பாருங்கள்.

08.கம்பளை நாவலப்பிடிய நகரசபைகளுக்கும் மிக மிக நெருக்கமான ஒரு போட்டி நிலை என்று தகவல்.

பொழுது போக இதனைக் கேட்டுப்பாருங்கள்

Previous Story

அகுரண முஸ்லிம்களின் அரசியல் கூர்மை புள்ளடியில் வெளிப்படும்!

Next Story

தாரிக் அலிதான் அகுரண தவிசாளர் !