சுரேஸ் சலே நகைச்சுவை!

நஜீப்

நன்றி: 05.07.2026 ஞாயிறு தினக்குரல் 

ஈஸ்டர் தாக்குதல் மூன்றாவது சந்தேக நபர் சலே தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டிருக்கின்றார் என்பதனை அவரது சட்டத்தரணிகளே உறுதி செய்திருக்கின்றார்கள். தனது கணவர் உயிர் போனாலும் போராட்டத்தை விட மாட்டேன் என்று உறுதியாக இருப்பதாக மனைவி முன்பு ஊடகங்களிடம் கூறி இருந்தார்.

சலேக்கான கோரிக்கைகள் கிடைக்கும் வரை சத்தியக்கிரக போராட்டம் தொடரும் என்று சபதம் எடுத்த வீரவன்ச, கம்மன்பில  இடையில் ஓடிப்போய் விட்டார்கள். இது எல்லாவற்றையும் விட சலே மடிக் கணணியில் தேசிய பாதுகாப்பு இரகசியங்கள் இருப்பதால் அதனை கொடுக்க முடியாது என்றார் தயாசிரி.

ஆனால் சலே கைதான நேரம் காரிலிருந்த மடிக்கணணியை அதிகாரிகள் எடுக்க அது மகளுடையது என்றார் சலே. அதிகாரிகள் விடவில்லை. இப்போது மடிக்கணணி-மொபைல் இரகசிய குறியீடுகளை விசாரணை அதிகாரிகளுக்கு கையளிக்க நீதிபதி இப்போது சலேக்கு கட்டளை.

Previous Story

ගුවනේ දී ඝාතනය කරන්න හැදූ කුමන්ත්‍රණය

Next Story

"சவுதி அரேபியாவை இனி சும்மா விடமாட்டோம்"