நஜீப்
நன்றி:01.02.2026 ஞாயிறு தினக்குரல்
சில தினங்களுக்கு முன்னர் இந்தியா தனது 79வது சுதந்திர விழாவை கோலாகலமாகக் கொண்டாடியது. இதற்கு நாமல் ராஜஸவுக்கு அழைப்பாம். மொட்டு ஊடகப் பிரிவு செய்தி சென்னது. இதன் உண்மைத் தன்மையைத் தேடிப்பார்த்த போது அந்தக் கதை அப்படி இல்லை என்று உறுதியானது.
உத்தியோகபூர்வ வைபவம் டில்லியில் ஜனாதிபதி பிரதமர் தலைமையில் நடந்தது. நாடுபூராவிலும் பல்லாயிரக் கணக்கான விழாக்கள் நடந்தது. அப்படி ஒடிச மாநிலத்தில் ஒரு தனியார் கல்லூரி ஏற்பாடு செய்த விழாவுக்குத்தான் நாமலுக்கு இந்த அழைப்பு.
நமது நாட்டில் காசு வாங்கிக் கொண்டு கலாநிதி பட்டங்களை விற்பதுபோல சில பாடசாலைககள்-நிறுவனங்கள் பணம் வாங்கிக் கொண்டு விழாக்களுக்க பிரதம அதிதியைத் தீர்மானிக்கின்றன.
இப்படித்தான் ஒடிச-புவனேஸ்வர் காலிங்க பழங்கு சமூகக் கல்லூரியும் நாமலை தனது சுதந்திரதின விழாவுக்கு அழைத்திருக்கின்றது.!
மஹிந்தாவும் முன்பு இப்படியான ஒரு நிழ்ச்சியில் மூக்குடைபட்டிருந்தாராம். தகவல் பின்னர்.!





