சீனி செய்யும் நன்றிக் கடன்!

-நஜீப்-

அரகலயகாரர்கள் தலைநகரை ஆக்கிரமித்த போது ஜனாதிபதி மாளிகையின் பின் கதவால் தப்பியோடியவர்தான் நமது முன்னாள் ஜனாதிபதி கோதாபேய ராஜபக்ஸ. மாலை சிங்கப்பூர் தாயிலாந்து என்று ஓடித் திரிந்த அவர் சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்த போது மறைந்திருந்த இடம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது.

தான் அதிகாரம் மிக்க பதவிக்கு வந்த நேரத்தில் அவருக்குத் தேர்தலில் உதவி செய்தவர்களுக்கு மிகப் பெரிய வரிச்சலுகையை வழங்கி தனது சகாக்களுக்கு கோடிக் கணக்கில் காசு சம்பதிக்க  உதவி இருந்தார். அப்படிப்பட்ட ஒருவர்தான் சஜாத் மௌஜூத் என்பவர்.

சிங்கப்பூரில் ஒரு தீவில் இருக்கும் சஜாத் வீட்டில்தான் ஜனாதிபதி கோட்டா தலைமறைவாகி இருந்தார் என்ற செய்தியை சஜித் அணி குருனாகல நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரியப்படுத்தினார்.

சீனி வரி மோசடி மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்களை தனது நண்பன் சஜாத் மௌஜூத் என்பவருக்கு சம்திக்க வழிசமைத்துக் கொடுத்தார் கோட்டா. அதே நேரம் கோட்டா தன்னை ஒரு முஸ்லிம் விரோதியாக பேரினத்தார் மத்தியில் விளம்பரம் செய்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நன்றி:13.11.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

யசோதா - திரைப்பட விமர்சனம்

Next Story

pak vs eng t20: மெல்பர்னில் மீண்டும் நிகழுமா 1992 அதிசயம்?