சீனா: தீக்கு இரையான 42 மாடி கட்டடம்

China, Fire accident, சீனா, கட்டடம், தீ விபத்து

ஹூனான்: சீனாவின் சாங்கா நகரில் 42 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 715 அடி உயரமுள்ள கட்டடம் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

சீனாவில் உள்ள ஹூனான் மாகாணத்தின் சாங்கா நகரில் 42 மாடி கட்டடம் உள்ளது. 715 அடி உயரமுள்ள இந்த கட்டடம் 2000ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டடத்தில் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சீனா டெலிகாமின் அலுவலகம் இயங்கி வந்தது.

இந்த நிலையில் 42 உயரமுள்ள கட்டடத்தில் உள்ளூர் நேரப்படி இன்று (செப்.,16) மாலை 4:30 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

latest tamil news

இதில் 42 மாடி முழுவதும் தீ மளமளவென பரவியது. தீயை அணைக்க, 280 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

கட்டடம் மொத்தமும் தீக்கிரையாகியதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது. ஆனால், இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் குறித்து எந்த தகலும் வெளியாகவில்லை.

Previous Story

தீர்மானங்கள் மட்டும் போதுமா!

Next Story

எஸ்.சி.ஓ. மாநாடு : ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தார் பிரதமர் மோடி