சீனா :செயற்கை தீவு! 

KONICA MINOLTA DIGITAL CAMERA

அணு ஆயுதங்களால் கூட

ஒன்னும் செய்ய முடியாது.

உலக நாடுகளை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் செயற்கை தீவு ஒன்றை சீனா உருவாக்க திட்டமிட்டுள்ளது. அணு ஆயுதங்கள் வெடிப்பை கூட சமாளிக்கும் வகையில் உருவாக்கப்படும் இந்த செயற்கை தீவானது, நகர்த்தி செல்லும் விதமாகவும், பாதி அளவு நீரில் மூழ்கியபடியும் வடிவமைக்கப்படுகிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய சீனா, பல்வேறு துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை செய்து உலக நாடுகளை மிரள வைக்கிறது. தொழில் நுட்ப ரீதியாக அந்த நாடு பல மடங்கு முன்னேற்றம் கண்டுவிட்டதாகவும், 2045 ல் சீனா இருப்பதாகவும் அவ்வப்போது நெட்டிசன்கள் பதிவிடுவதை பார்க்க முடியும்.

china-builds-massive-artificial-island-to-withstand-nuclear-blasts-set-to-operate-by-2028

பெரிய செயற்கை தீவு

தொழில் நுட்பம் மட்டுமின்றி உள்கட்டமைப்பு, பாதுகாப்பு சார்ந்த விஷயங்கள் ஆகியற்றிலும் உலக வல்லரசு நாடான அமெரிக்காவையை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு, பிரம்மிக்க வைக்கிறது சீனா. அந்த வகையில்தான் தற்போது அணு ஆயுதங்களை கூட சமாளிக்கும் வகையில், பெரிய செயற்கை தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

அணு ஆயுதங்கள் வெடிப்பை கூட சமாளிக்கும் வகையில் புதிதாக செயற்கை தீவு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. நகர்த்தி செல்லும் விதமாகவும், பாதி அளவு நீரில் மூழ்கியபடியும் இந்த செயற்கை தீவு அமைய உள்ளது. இந்த தீவில் 238 பேர் வசிக்க முடியும். அதிலும் வெளியில் இருந்து எந்த ஒரு சப்ளை இல்லாவிட்டாலும் 4 மாதங்கள் இந்த தீவில் வசிக்க முடியும்.

2028ல் பயன்பாட்டுக்கு வரும்

அந்த அளவிற்கு நவீன கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த செயற்கை தீவை அமைத்து வருகிறது சீனா. அந்த நட்டின் மிகப்பெரிய போர்க்கப்பலாக உள்ள புஜைன் விமானம் தாங்கி கப்பலை விட இது பெரியதாகவும். 6-9 மீட்டர் உயரமுள்ள பெரிய அலைகளை கூட இந்த தீவு சமாளிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

வரும் 2028 ஆம் ஆண்டு இந்த செயற்கை தீவு பயன்பாட்டுக்கு வரும் என்றும், மிகப்பெரிய சூறவாளி தாக்கினாலும் எந்த சேதாரமும் இன்றி தாங்கி நிற்கும் வல்லமையுடன் இந்த செயற்கை தீவு அமைகிறதாம். இது தொடர்பாக இந்த செயற்கை தீவை கட்டமைக்கும் திட்டத்தின் நிர்வாகி கூறுகையில், “இந்த செயற்கை தீவின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பை முடிக்கும் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளோம்.

ஆழ் கடல் அறிவியல் வசதி

2028 ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று லின் ஷோன்கின் கூறினார். இந்த தீவுக்காக “மெட்டாமெட்டீரியல்” என்ற பொருளை பயன்படுத்தி தடுப்புகள் போடப்படுகிறது. இது பெரிய அதிர்வுகளை கூட சிறியதாக மாற்றிவிடும் தன்மை கொண்டது. அனைத்து வகையான தட்பவெப்ப நிலைகளையும் சமாளிக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட ஆழ் கடல் அறிவியல் வசதி என்று அவர் தெரிவித்தார்.

அவசரகால மின் சப்ளை, கம்யூனிகேஷன், நேவிகேஷன் கண்ட்ரோல், அணு சக்தி வெடி பாதுகாப்பு ஆகியவற்றை கொண்டதால் இந்த தீவு, சீனாவின் பாதுகாப்புக்கான முக்கிய கேடயமாக இருக்கும் என்று சீன அதிகாரிகள் கூறுகிறார்கள். 138 மீட்டர் நீளமும், 85 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த செயற்கை தீவு அமைகிறது.

அணு பொருள் வெடித்தால் கூட

பொதுமக்களுக்கான சிவில் உள்கட்டமைப்பு இது என்று சீனா குறிப்பிட்டாலும், அணு பொருள் வெடித்தால் கூட சமாளிக்க கூடிய திறனுடன் இந்த தீவு அமைப்பு இருப்பதாக சீனா இதற்கு முன்பு கூறியுள்ளது. சர்வதேச அளவில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஆணு ஆயுத வல்லமை கொண்ட நாடுகளும் மோதிக்கொள்ளும் அபாயம் நீடித்து வரும் நிலையில், சீனாவின் இந்த செயற்கை தீவு பற்றிய செய்திகள் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

Previous Story

தேர்தல் நடாத்தினால் கொலை!

Next Story

ஐதேக. - ஐமச. பதவி பகிர்வு!